Love Oh Love Review: லவ்வோ லவ் விமர்சனம்.. பவீஷ்க்கு இது சக்சஸா? இல்லை சறுக்கலா?

Rating:
2.5/5
Star Cast: Pavish Narayan, Naga Durga, Selvaraghavan, KS Ravikumar, Vanitha Vijayakumar
Director: Magesh Rajendran

சென்னை: மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவீஷ், நாக துர்கா, செல்வராகவன், வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி, ஜூலை 10ஆம் தேதி வெளியாகி உள்ள படம் Love Oh Love . படத்தை தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர். சமகால இளைஞர்களின் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதையை பொறுத்தவரையில் பொறுப்பான கதாநாயகனுக்கு கதாநாயகி மீது காதல் ஏற்படுகிறது. காதலியுடன் நேரம் செலவிடுகிறார், காதலியின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்ற தனது சம்பள பணம் போதவில்லை. இதனால் கிரெடிட் கார்டு வாங்குகிறார், அதன் பின்னர் நட்பு வட்டத்திலும் கடன் வாங்குகிறார். கதாநாயகியோ தன்னால் தனது காதலன் கடன் படுகிறார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் செலவு மேல் செலவு வைக்கிறார். கடனாளி ஆனாலும் தனது காதலியின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அது தோல்வியில் முடிவது மட்டும் இல்லாமல், கதாநாயகனும் கதாநாயகியும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

Pavish Narayan And Naga Durga Love Oh Love Review in Tamil Movie Targets Which Works Gen Z

கதை: அதன் பின்னர் கதாநாயகன் வாழ்க்கை மொத்தமாக மாற, கதாநாயகனோ காதலியே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால் கதாநாயகியோ திருமணம் என்றால் அது கதாநாயகனுடன் தான் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார். இவர்கள் பிரச்னை காவல் நிலையத்திற்கு செல்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக காதலியை தான் எப்படிப் பார்த்துக் கொண்டேனோ, அதேபோல் காதலி தன்னை ஒரு நான்கு மாதம் பார்த்துக் கொள்ள வேண்டும், தனது கடன்களை அடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் அவருடன் சேர்ந்து வாழ்கிறேன். அவரால் முடியவில்லை என்றால் பிரேக்அப் தான் என்ற ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

கிரிஞ்ச் டயலாக்ஸ்: படத்தின் கதையை பொறுத்தவரையில் ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்கு பக்காவான கதை. படத்தின் முதல் பாதியும் இரண்டாவது பாதி என எல்லாமே ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்குத் தேவையான திரைக்கதையை கொண்டுள்ளது என்றாலும் படம் முழுக்க மழைச்சாரல் போல ஆங்காங்கே வரும் கிரிஞ்ச் டயலாக்குகள் 'முடியல' என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இல்லை. படம் முழுக்க முழுக்க 2கே மற்றும் அதற்கு பிந்தைய தலைமுறையினரை டார்கெட் செய்து திரைக்கதை அமைத்திருப்பதால் சில காட்சிகளும் டயலாக்குகளும் முழுக்க முழுக்க எதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது மட்டும் இல்லாமல், இன்னுமா காதலில் ஆண்கள் மட்டும் தான் செலவு செய்கிறார்கள் என்ற கதையை படமாக்கி இருப்பது நன்றாக அரைத்த மாவை கொஞ்சம் புளிக்க வைத்து அரைத்தது போல இருக்கிறது.

Pavish Narayan And Naga Durga Love Oh Love Review in Tamil Movie Targets Which Works Gen Z

படம் எப்படி இருக்கு?: பாடல்களும் நடனமும் சிறப்பு. இசையமைப்பாளர் ஃபாக்‌ஷனின் இசை படத்திற்கு நன்றாகவே பலம் சேர்த்துள்ளது. பவீஷ், நாக துர்கா என இருவரும் கதாபாத்திரத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள். அரைத்த மாவுதான் என்றாலும் ஒரு முறை பார்ப்பதற்கு எந்த குறையும் இல்லாத படம் என்ற சர்டிஃபிகேட் வாங்கிவிடும் என்ற நம்பிக்கையுடன் படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தால், கிளைமாக்ஸில் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று எங்கடா கிளைமாக்ஸ் என்று கேட்க வைத்து விட்டார்கள். மொத்ததில் சுமாருக்கு மேல் ஆவ்ரேஜ்க்கு கீழ் என்று தோன்றினாலும் தோன்றலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X