Mangalavaaram Review: அலற விடுது படம்.. ஹீரோயின் வேற லெவல்.. செவ்வாய்க்கிழமை ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: படத்துக்கு என்னதான் செவ்வாய்க்கிழமை என டைட்டில் வைத்தாலும் வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ் செய்ய முடியும் என்கிற சூழல் தான் உள்ளது.
இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் பயல் ராஜ்புத் நடிப்பில் உருவாகி உள்ள மங்களவாரம் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை எனும் டைட்டிலில் வெளியாகி உள்ளது.

மகாலக்ஷ்மிபுரம் எனும் ஊரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விசித்ரமான முறையில் மரணங்கள் நிகழ அதுகுறித்து விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கு இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றும் ஃபிளாஷ்பேக்கில் ஹீரோயின் பயல் ராஜ்புத்துக்கு என்ன ஆனது என்கிற கதையுடன் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இந்த படம்.
இப்படி நடிப்பாருன்னு எதிர்பார்க்கல: ஆர்.எக்ஸ். 100 படத்தை இயக்கிய அஜய் பூபதி இயக்கத்தில் அழகான ஹீரோயினாக நடித்த பயல் ராஜ்புத் இந்த செவ்வாய்க்கிழமை படத்தில் நடித்திருக்கும் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அரண்டு போயுள்ளதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இப்படி பயல் ராஜ்புத் நடிப்பார் என நினைத்தே பார்க்கவில்லை என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.
பாசிட்டிவ் நெகட்டிவ்: மங்களவாரம் எனும் தலைப்பில் தெலுங்கில் வெளியாகி உள்ள இந்த படம் பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் கதை, பிஜிஎம், ட்விஸ்ட் மற்றும் ஹீரோயின் பயல் ராஜ்புத் உள்ளிட்டவை பாசிட்டிவ் என்றும் ஸ்லோவாக நகரும் திரைக்கதை மட்டுமே நெகட்டிவ் என்றும் 5க்கும் 3.5 மார்க் கொடுக்கலாம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
அஜனீஷ் பிஜிஎம் பயமுறுத்துது: பயல் ராஜ்புத்தை தொடர்ந்து ரசிகர்கள் வெகுவாக படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷை தான் பாராட்டி வருகின்றனர். முதல் பாதி முழுக்க வரும் ஹாரர் கதையில் அவரின் பின்னணி இசை தான் பயமுறுத்துது என்றும் தியேட்டரில் பார்க்க வேண்டிய பக்கா மெட்டீரியல் இந்த படம் என கொண்டாடி வருகின்றனர்.
4 ஸ்டார்: பாயல் ராஜ்புத்துக்கு வித்தியாசமான வியாதி இருப்பது போன்று கதையை அஜய் பூபதி உருவாக்கி உள்ளார் என்றும் இரண்டாம் பாதி முழுக்க பாயல் ராஜ்புத்தின் நடிப்பு மிரட்டுகிறது. இந்த படத்திற்கு அவரது நடிப்புக்காக 4 ஸ்டார் கொடுக்கலாம் என ரசிகர்கள் இந்த வாரம் வெளியாகி உள்ள செவ்வாய்க்கிழமை படத்தை பாராட்டி உள்ளனர். தமிழில் வேறு எந்த பெரிய படங்களும் இல்லாத நிலையில், ஹாரர் விரும்பிகளுக்கு செவ்வாய்க்கிழமை ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











