பெத்தி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. திருப்பி திருப்பி மேட்டர் கதை.. கிழித்து எடுத்துட்டாரு ப்பா!
சென்னை: ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் திரைப்படம் பெத்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படமானது இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் படத்தை கிழித்து எடுத்துவிட்டார்.
பான் இந்தியா ஹீரோக்களில் ஒருவரான ராம்சரண் இப்போது ஜான்வி கபூருக்கு ஜோடியாக பெத்தி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவருக்கு எந்தப் படமும் ஹிட்டாகவில்லை. எனவே இதனை அவரும் அவரது ரசிகர்களும் அதீதமாக எதிர்பார்த்தார்கள். ஜான்வி கபூருக்கு இது இரண்டாவது தெலுங்கு படமாகும். ஏகப்பட்ட ஹைப்புகளோடு இன்று படம் வெளியானது. ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "தெலுங்கு சினிமாவில் பிளாஷ்பேக்கை சொல்வதற்கென்றே ஒருவரை வைத்திருப்பார்கள். அந்த கேரக்டர் வான்டடாக ஆஜராகி பெத்தியின் பிளாஷ்பேக்கை சொல்கிறேன் என சொல்லி கதை ஆரம்பிக்கிறது. ஒரு காட்டு பக்கம் அந்த கேரக்டர் அழைத்துக்கொண்டே செல்கிறார். அவர் சொல்லிய பிளாஷ்பேக் சுவாரஸ்யமாக இருந்ததா என்பதைவிட அந்த மலையில் ஏறும்போது அவர்கள் பட்ட கஷ்டத்தைவிட நாம் பட்ட கஷ்டம்தான் பெரிதாக இருக்கிறது.
மசாலா தடவுறேனு: அந்த அளவுக்கு பாடாக படுத்திவிட்டார்கள். பெத்தி இருந்த ஊருக்கு எந்த அடையாளமும் இல்லை. எனவே அந்த ஊருக்கு அடையாளம் வாங்கி தரத்தான் பெத்தி போராடினார் என கதை தொடங்குகிறது. அந்த கொடூரமான கதை என்னவென்பதுதான் இதன் கதை. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஹிந்தியில், 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் வந்த படம். முரளிகாந்த் என்பவருடைய வாழ்க்கைதான் அது. அந்த வாழ்க்கையை மசாலா தடவி எப்படி எடுக்கிறேன் பார் என சொல்லி காட்டு மொக்கை படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
மேட்டர் கதைதான்: பெத்தியின் பிளாஷ்பேக்கை சொல்கிறேன் என சொல்லிய கேரக்டர்; அந்த சாகசங்களை எல்லாம் சொல்லாமல்; விளக்கதை அணைத்துவிட்டு ஜான்வி கபூருடன் பெத்தி என்ன ககமுசாவெல்லாம் செய்தார் என்பதை சொல்கிறார். மேட்டர் கதையை எல்லாம் முடித்துவிட்டு மேட்டருக்கு வருவார் போல என காத்திருந்தால்; மறுபடியும் மறுபடியும் மேட்டர் கதையையே சொல்கிறார். கிரிக்கெட்டில் பெரிய ஆளாக முடியவில்லை என்பதால் மல்யுத்தத்துக்கு செல்கிறார் ஹீரோ.
கோச் சிவராஜ்குமார்: அந்த மல்யுத்தத்துக்கு பயிற்சியாளர் சிவராஜ்குமார்.அவரை மல்யுத்த கோச்சாக குழந்தைகூட ஏற்றுக்கொள்ளாது. ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் யார் படம் எடுத்தாலும் அது நன்றாக இருக்கிறதோ இல்லையோ சுமாராகவாவது இருக்கும். இவர்களோ நல்ல கதையை எடுத்துக்கொண்டு அதில் ஹீரோவுக்கு மாஸ் ஏற்றுகிறேன் என்கிற பெயரில் ஒரு உப்பு சப்பில்லாத திரைக்கதையை எழுதி பணத்தை வீணடித்துவிட்டார்கள். நீங்களும் உங்கள் நேரத்தையும், பணத்தையும் இதற்காக வீணடித்துவிடாதீர்கள்" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
