twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட விமர்சனம்

    By Staff
    |
    பேரழகன் கதை சூர்யாவுக்கு சரியான தீனி போட்டிருக்கிறது.

    கூன் விழுந்த முதுகு, தெற்றுப்பல், இயல்புக்கு மாறாக வளைந்த கை, கால்கள். இதுதான் எஸ்.டி.டி. பூத் வைத்து பிழைப்பு ஓட்டும்சின்னா (சூர்யா). உடம்பில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஊனம் இல்லாத கலகலப்பான மனிதன்.

    இவரது எஸ்.டி.டி. பூத்தில் ரெகுலர் கஸ்டமர் ப்ரியா (ஜோதிகா). இவரது காதலர் கார்த்திக் ஒரு குத்துச் சண்டை வீரர் (இன்னொருசூர்யா). ப்ரியா - கார்த்திக் காதலுக்கு ப்ரியாவின் டி.எஸ்.பி அப்பா எதிர்ப்பு எதிர்விக்க, சின்னாவின் உதவியோடு ரகசியதிருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

    அப்போது எதிர்பாராதவிதமாக, ப்ரியாவின் அப்பாவால் பாதிக்கப்பட்ட ரெளடி ஒருவன் ப்ரியாவைக் கொலை செய்துவிடுகிறான். அதுவும் கார்த்திக், சின்னா கண் எதிரிலேயே. இதனையடுத்து சின்னா காதலிக்கும் பார்வையற்ற பெண்ணானசெண்பகத்துக்கு (இதுவும் ஜோதிகாதான்) ப்ரியாவின் கண்கள் பொருத்தப்படுகிறது.

    ப்ரியா இறந்த சோகத்தில் இருக்கும் கார்த்திக்குக்கு அவளது கண்கள் செண்பகத்துக்கு பொருத்தப்பட்டது தெரிய வருகிறது.செண்பகத்தை விரட்ட ஆரம்பிக்கிறார். செண்பகத்தை அடைந்தது சின்னாவா அல்லது கார்த்திக்கா என்பது தான் க்ளைமாக்ஸ்.பரபரப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

    ஒவ்வொரு படத்திலும் சூர்யாவின் நடிப்பு மெருகேறிக் கொண்டே வருகிறது. கோழையான சின்னாவாகவும், கோபம் மிக்க குத்துச்சண்டை வீரனாகவும் இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சூர்யா. சின்னா கேரக்டருக்காக மிகவும்மெனக்கெட்டிருக்கிறார்.

    அதே நேரத்தில் அவ்வளவு பெரிய பல்லுடன் நடிக்கும்போது, டயலாக் டெலிவரியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கவேண்டாமா சூர்யா?

    ப்ரியா கேரக்டரில் ஜோதிகா பளிச்சென நடித்து இருக்கிறார். ஆனால் செண்பகம் கேரக்டருக்கு வேறு யாரையாவதுபோட்டிருக்கலாம். ஏழைப் பெண்ணாக ஜோதிகா நடிப்பது, பீட்சாவை வாழையிலையில் வைத்து சாப்பிடுவது போல்சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

    கேரக்டர்களை பில்ட் அப் செய்ததில் மலையாள இயக்குனர் சசிசங்கர் ஜெயித்திருக்கிறார். அது கதாநாயகனாகட்டும், கல்யாணபுரோக்கராக வரும் விவேக் ஆகட்டும்; ஒவ்வொரு கேரக்டரும் அறிமுகமான சில நிமிடங்களிலேயே அவர்களது மொத்தகுணாதியங்களும் பார்ப்பவர்களின் மனதில் ஏறிவிடுகிறது.

    ஒரு இரவு வேளையில் காரில் உட்கார்ந்து கொண்டு, நான் ஏன் உன்னை காதலிக்கிறேன் என்று ப்ரியாவிடம் கார்த்திக் சொல்லும்காட்சியில் இயக்குனர், சூர்யா, ஜோதிகா, யுவன்சங்கர் ராஜா என ஒவ்வொருவரும் முத்திரை பதிக்கிறார்கள்.

    எல்லாம் சரிதான். ஊனம் என்பது ஒரு இயலாமை, அசெளகர்யம் என்பதை மறந்து விட்டு படம் முழுக்க ஊனமுற்றவர்களைக்கிண்டலடிப்பதையே காமெடி என்ற பெயரில் காட்டுகிறார்கள்.

    கூன் விழுந்த சூர்யாவை ரெளடி ஒருவன் அடித்துத் துன்புறுத்துவதை அடிக்கடி காட்டுகிறார்கள். ஊனமுற்றவர்களைத் துன்புறுத்திரசிகர்களின் பரிதாபத்தைத் தூண்டுவது ஒரு வகை சாடிஸம் தானே. இந்தப் பழக்கம் மலையாள இயக்குனர்களிடம் அதிகமாகவே(காசி, என் மனவானில் படங்கள் உதாரணம்) இருக்கிறது. இதற்கு சசிசங்கரும் விதிவிலக்கல்ல.

    அடுத்த முறை ஊனமுற்றவர்களைப் பற்றி படம் எடுக்கும் போது மலையாள இயக்குனர்களும் சசிசங்கரும் கமலின்ராஜபார்வை படத்தை ஒரு தடவை பார்ப்பது நல்லது.

    இது போன்ற குறைகள் இருந்தாலும் நடிப்பில் யாரும் சோடை போகவில்லை. கதையோட்டமும் ஓ.கே. ஆனால், சூர்யாவின்காக்க... காக்க.., பிதாமகன் வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிப்பது கடினமே.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X