Perusu Public Review: வயிறு வலிக்க சிரிப்பு..டபுள் மீனிங்களாதான் படமே இருக்கு.. பெருசு விமர்சனம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் அவரது அண்ணன் சுனில், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், விடிவி கணேஷ், கருணாகரன், முனீஸ்காந்த், தீபா சங்கர் சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெருசு. இந்த படம் இன்று அதாவது மார்ச் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள்.
படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் படத்தை அடல்ட் காமெடி படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டு படத்தை உருவாக்கியதாக தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், " படம் மிகவும் நன்றாக உள்ளது. இந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காமெடிதான். க்ளைமேக்ஸில் தரமான காமெடிகள் உள்ளது. குடும்பமாக கூட இந்த படத்தை பார்க்கலாம். பெருசு என டைட்டில் வைக்க காரணம், படம் பார்த்தால் புரியும்" எனத் தெரிவித்தார்.
அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, " படம் டிரைலரில் பார்த்ததுதான் உள்ளது. இரண்டு மணி நேரம் சிரிக்க தரமான படம். கிளைமாக்ஸ் அருகில் செல்லும்போது படம் அட்டகாசமாக உள்ளது. எல்லோரும் பார்க்கலாம். படத்தை நன்றாக காமெடி காட்சிகளுடன் உருவாக்கியுள்ளார்கள். குடும்பமாக பார்க்கலாம் நன்றாக கொண்டாடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

வயிறு வலி: அதேபோல் படம் பார்த்த ரசிகை ஒருவர் கூறும்போது, " டைட்டிலுக்கு ஏத்த மாதிரி படம் இருக்கு. படத்தை தியேட்டரில் வந்து எக்ஸ்பீரியன்ஸ் செய்யுங்கள். இந்த படத்தில் முகம் சுழிப்பது போல் எதுவும் இல்லை. ஆண்கள் பெண்கள் என அனைவரும் பார்க்கலாம். படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அருமையாக சென்றது. க்ளைமேக்ஸில் வயிறு வலிக்கச் சிரித்தோம்" எனக் கூறினார்.
டபுள் மீனிங்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " இயக்குநருக்கு வாழ்த்துகள். எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவரையும் படக்குழு சிரிக்க வைத்துள்ளது. சில காட்சிகள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் சிரிக்கும்போது ரசிக்கத் தோன்றுகிறது. பெருசு என டைட்டில் வைக்க காரணம் அதில் டபுள் மீனிங்கும் இருக்கும் எல்லாமும் இருக்கும் படம் பார்த்தால் கட்டாயம் புரியும்" எனத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி: அதேபோல் சில ரசிகர்கள் கூறும்போது, பெருசு படம், பெரிய படம், பெரிதாக வரும், படம் முழுக்க அடல்ட் காமெடிதான் உள்ளது. தனித்தனியே பார்ப்பது சரியானது. ஆனால் படம் ஃபேமிலி எண்டர்டைனராக இருக்கும். ஆனால் குடும்பமாக படத்தை பார்க்க முடியாது காரணம் சில காட்சிகள் அப்படி உள்ளது என்பதால்தான். படத்தில் கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் படக்குழு வென்றும் காட்டியுள்ளார்கள். ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் படத்தில் கொச்சையாக எதுவும் இல்லை" என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.



Click it and Unblock the Notifications











