Phoenix Review: பீனிக்ஸ் வீழான் விமர்சனம்.. மக்கள் செல்வன் மகன் மாஸ் காட்டினாரா?.. படம் எப்படி இருக்கு?

Rating:
3.0/5
Star Cast: Vijay Sethupathi , Varalaxmi Sarathkumar , Devadarshini, Sampath Raj ,
Director: Anal Arasu

சென்னை: நானும் ரவுடி தான், சிந்துபாத் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் தான் 'பீனிக்ஸ் வீழான்'. சண்டை பயிற்சி இயக்குநரான அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், முத்துகுமார், தேவதர்ஷினி, வர்ஷா, அபி நக்‌ஷத்ரா, சம்பத்ராஜ், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மக்கள் செல்வன் மகன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஜூலை 4ம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக படத்தை ரிலீஸ் செய்ய பல கட்ட முயற்சிகளை படக்குழு எடுத்தனர். கட்சிக் கொடி பிரச்னை உள்ளிட்டவை காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமானதாக அனல் அரசு கூறியிருந்தார்.

பப்ளி பாயாக சுற்றித் திரிந்த சூர்யா சேதுபதி இனிமேல் நமக்கு சினிமா தான் என்று முடிவு செய்து, அதற்காக கடின உழைப்பை போட்டு அப்படியே யங் விஜய் சேதுபதியாகவே நடிப்பிலும், ஆக்‌ஷன் காட்சிகளில் களமிறங்கியுள்ள இந்த பீனிக்ஸ் படத்தின் நிறை குறைகளை இந்த விமர்சனத்தில் முழுமையாக பார்க்கலாம் வாங்க..

Phoenix Veezhaan Movie Review in Tamil  Suriya Sethupathi performed well in Action scenes
Photo Credit:

பீனிக்ஸ் கதை: "என்னடா பிரச்னை உங்களுக்கு? நாங்க ஜெயிக்கிறதா/ இல்லை நாங்க உங்களை ஜெயிக்கிறதா? என்கிற வசனம் இந்த படத்தின் மையக்கருவே. கொலை குற்றத்துக்காக செங்கல்பட்டில் இருக்கும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்படும் சூர்யா எதற்காக அங்கே சென்றார். அவரை அங்கே கொலை செய்ய திட்டமிடுபவர்கள் யார்? அதிலிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த பீனிக்ஸ் வீழான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: தனது அண்ணனை கொலை செய்தவனை கொன்றுவிட்டு சிறைக்கு செல்லும் சூர்யா சேதுபதி சிறையில் தன்னை கொல்ல வருபவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஆக்‌ஷன் சண்டைக் காட்சிகளை கலந்துக்கட்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அனல் அரசு. ஹீரோவாக அறிமுகமாகியுள்ள சூர்யா சேதுபதியின் கண்களில் அப்படியே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிகிறார். சில இடங்களில் சூர்யா பேசுவதும் விஜய் சேதுபதி பேசுவது போலவே உள்ளது. ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என ஆசை மட்டும் படாமல் அதற்காக அவர் போட்டிருக்கும் கடினமான உழைப்பு அவர் MMA சண்டை விளையாட்டில் நடித்திருக்கும் காட்சிகளில் தெளிவாக தெரிகிறது. கோலிவுட்டுக்கு இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோ கிடைத்து விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Phoenix Veezhaan Movie Review in Tamil  Suriya Sethupathi performed well in Action scenes
Photo Credit:

பிளஸ்: சூர்யா சேதுபதியின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி இந்த படத்திலும் தனது நடிப்பால் அனைவரையும் அசர வைக்கிறார். வரலட்சுமி சரத்குமார் சின்ன போர்ஷனில் வந்தாலும், சிறப்பாக ஸ்கோர் செய்கிறார். சார்பட்டா பரம்பரை முத்துக்குமார் நடிப்பு படத்துக்கு பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு மற்றும் சாம் சி.எஸ். பின்னணி இசையில் ஹீரோவுக்கான பில்டப் என அனைத்துமே கச்சிதமாகவே உள்ளது.

மைனஸ்: வழக்கமான பழிவாங்கல் கதையாகவே இந்த படமும் நகர்வது தான் மைனஸ் ஆக தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் செலுத்திய கவனத்தில் கொஞ்சம் என்டர்டெயின் போர்ஷனுக்கும் செலவு செய்திருந்தால் இன்னமும் ஏகப்பட்ட ரசிகர்களை இந்த படம் கவர வாய்ப்புகள் அதிகம். அடிதடி சண்டை காட்சிகள் அதிகம் இருக்கும் படங்களில் தான் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். அதே ரூட்டை பிடித்தால் நாமும் பெரிய ஸ்டார் ஆகிவிடலாம் என்கிற சூர்யாவின் கணிப்பு எந்தளவுக்கு அவருக்கு கை கொடுக்கிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X