Just In
- 21 min ago
நான் ஒரு ஜிம் பாடி.. வெளிச்சம் போட்டுக் காட்டிய ஷிவானி.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்
- 45 min ago
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிம் கர்தாஷியன்.. ஆனால் அதில் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு!
- 1 hr ago
தல போல வருமா...ரசிகர்களுக்காக சென்டிமென்ட்டாக அஜித் எடுத்த கலக்கல் முடிவு
- 1 hr ago
தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் கணவருக்கு ஜாமின்.. பணமோசடி வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு!
Don't Miss!
- Sports
அதிகாரபூர்வ புகார் அளிக்க முடிவு.. சாட்டையை சுழற்றும் இங்கிலாந்து.. தீவிரமடையும் அகமதாபாத் சர்ச்சை
- Finance
முகேஷ் அம்பானி மீண்டும் நம்பர் 1.. இனி யாராலும் அசைக்க முடியாது..!
- Automobiles
புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!
- News
அதிமுக, திமுக விரித்த வலையில் சிக்காத கமல்.. 3ஆவது அணி அமைகிறதா.. "அவர்" இருந்தா நல்லாயிருக்குமே!
- Lifestyle
திருமணத்துக்கு முன்னாடி உங்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனையை எப்படி கையாளுனும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதல் அதிகமா? காமம் அதிகமா? அமலா பால், ஸ்ருதியின் பிட்ட கதலு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: டோலிவுட்டில் ஒரு லஸ்ட் ஸ்டோரீஸ் ஆக வெளியாகி உள்ளது பிட்ட கதலு.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர்களான நாக் அஸ்வின், தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி மற்றும் நந்தினி ரெட்டி இயக்கி உள்ள பிட்ட கதலு நெட்பிளிக்ஸில் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியானது.
ஸ்ருதிஹாசன், அமலா பால், லக்ஷ்மி மஞ்சு, ஈஷா ரெப்பா, அஷிமா நர்வால் உள்ளிட்ட பிரபல ஹீரோயின்கள் நடிப்பில் வெளியாகி உள்ள பிட்ட கதலு எப்படி இருக்கு என நெட்டிசன்களின் விமர்சனங்களை பார்த்து தெரிந்து கொள்வோம்.

அமலா பால் தான் ஹாட்
ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலின் இரண்டு ஆந்தாலஜி படங்கள் அடுத்தடுத்து ஒரே மாதத்தில் வெளியாகி பட்டையை கிளப்புகின்றன. தமிழில் கெளதம் மேனனின் குட்டி ஸ்டோரியில் அவருக்கு ஜோடியாக நடித்த அமலா பால், தெலுங்கில் பிரபல வில்லன் நடிகர் ஜகபதி பாபுவுக்கு மனைவியாகவும் கவர்ச்சிகரமான இளம் எழுத்தாளரான மீராவாக நடித்துள்ளார். 4 கதைகளிலேயே அமலா பால் ஸ்டோரி தான் செம ஹாட்டாம்.

படு மொக்கை
பாலிவுட்டில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் அளவுக்கெல்லாம் கொஞ்சம் கூட இந்த பிட்ட கதலு வொர்த் இல்லை. ஸ்ருதிஹாசனின் எக்ஸ் லைஃப் படத்தில் நல்ல கரு உள்ளது. அமலா பாலின் மீரா பார்க்கலாம். பிங்கி கதை படு மொக்கை என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

எத்தனை ஐட்டம்
சினிமா காதலர்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை ஃபுல் மீல்ஸ் தான் போல. அல்லரி நரேஷ், வரலக்ஷ்மி சரத்குமாரின் நாந்தி, கபடதாரி, பிட்டகதலு, சக்ரா, திரிஷ்யம் 2 என மொத்தமாக இத்தனை இருந்தால், எதை பார்ப்பது என்றே தெரியாமல் தவிப்பதாக இந்த நெட்டிசன் மீம் போட்டுள்ளார்.

அமலா பாலை காணோம்
பிட்ட கதலு ஆந்தாலஜி இன்று வெளியாவதை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகையர் திலகம் இயக்குநர் நாக் அஸ்வின், ஸ்ருதிஹாசன், ஈஷா ரெப்பா என பலரும் உள்ள நிலையில், நடிகை அமலா பால், ஜகபதி பாபு உள்ளிட்டோரை ஏன் காணோம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏமாற்றம் தான்
எக்ஸ் லைஃப் மற்றும் ராமுலு நல்லா இருக்கு மற்ற இரண்டு கதைகளும் போர் தான். எதிர்பார்த்த அளவுக்கு சூப்பராக இல்லை ஏமாற்றம் தான் இந்த பிட்ட கதலு ஆந்தாலஜி. இன்னும் இப்படி எத்தனை மொக்கை ஆந்தாலஜிகளை உருவாக்கி ரசிகர்களை கடுப்பேற்றுவார்கள் என தெரியவில்லை என ஆந்தாலஜி படங்களால் அப்செட்டான இந்த நெட்டிசன் திட்டித் தீர்த்துள்ளார்.