twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போங்கடி நீங்களும் உங்க காதலும் - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.0/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: ராம்கிருஷ்ணன், ஆத்மியா, சென்ராயன், ஜெய்ப்பிரகாஷ், காருண்யா

    ஒளிப்பதிவு: எம்வி பன்னீர்செல்வம்

    இசை: கண்ணன்

    தயாரிப்பு: கே ஆர் கண்ணன்

    எழுத்து, இயக்கம்: எம்ஏ ராம்கிருஷ்ணன்

    தலைப்பே இந்தப் படத்தின் கதை என்ன... படம் எப்படி இருக்கும் என்பதைக் கிட்டத்தட்ட சொல்லிவிடுகிறது.

    காதல், காதலர்கள் என்றாலே வெறுக்கும்.. தாக்க முயற்சிக்கும் லோக்கல் இளைஞன் ராம்கிருஷ்ணன். இதைப் பார்ட் டைம் வேலையாக வைத்திருக்கும் அவரது புல் டைம் வேலை சின்னச் சின்னதாய் திருடுவது, பெண்களின் செயின், கைப்பை திருடுவதுதான்.

    ஒரு திருட்டில் போலீசிடம் மாட்டிக் கொள்ளும் ராம்கியையும் அவர் நண்பன் சென்ராயனையும் ஜாமீனில் எடுக்கிறார் ஆத்மியா. அடுத்த காட்சியிலேயே ராம்கியிடம் ஐ லவ் யூயும் சொல்கிறார். இதை நம்பாமல், ஏற்க மறுக்கிறார் ராம்கி. ஆனால் தாடியும் பரட்டைத் தலையும் அழுக்கு லுங்கியுமாகத் திரியும் ராம்கியை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஆத்மியா.

    ஒரு கட்டத்தில் சரி காதலித்துதான் பார்ப்போமே என ஆத்மியாவின் காதலை ஏற்க, இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஊர் சுற்றுகிறார்கள். ஆனால் சில காட்சிகளிலேயே ஆத்மியாவின் காதல் ஒரு கபட நாடகம் என்று தெரிகிறது. அதற்கான காரணம்... ஆத்மியாவும் அவர் நிஜ காதலன் முரளியும் ஊரைவிட்டு ஓடத் திட்டமிட்ட ஒரு இரவில் அதைக் கெடுத்து, முரளி விபத்தில் சிக்க காரணமாகிறார் ராம்கிருஷ்ணன். அதற்குப் பழிவாங்கத்தான் இந்த நாடகமாம்.

    இதற்கிடையில் நகரத்தின் போலீஸ் கமிஷனர் ஜெய்ப்பிரகாஷ் மகளுக்கு மது கொடுத்து ஒரு கும்பல் கெடுத்துவிட, அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த வழக்கில் ராம்கிருஷ்ணனை சிக்க வைக்கப் பார்க்கிறார் ஊழல் இன்ஸ்பெக்டர். ஆனால் அதிலிருந்து தப்பித்து, நிஜ குற்றவாளிகளை ஒப்படைக்கிறார் ராம்கி. அப்போதுதான், அந்தப் பெண்ணை கற்பழித்த குற்றவாளி யார் என்பது தெரிகிறது. அவர், ஆத்மியாவின் காதலன் முரளி. ஆனால் இப்போது விபத்தில் அடிபட்டு, மனநல மருத்துவமனையில் மென்டலாகக் கிடக்கிறார்.

    இந்த உண்மை புரிந்து, மீண்டும் நிஜ காதலுடன் ராம்கிருஷ்ணனிடம் ஐலவ்யூ சொல்ல வருகிறார் ஆத்மியா. அதற்கு ஹீரோ சொல்லும் பதில்தான் படத்தின் தலைப்பு...

    ஸ்ஸப்பா... அடிக்கிற வெயிலுக்கு மண்டையை கிறுகிறுக்க வைக்கிற மாதிரி ஒரு சுத்தல் கதை. அதைப் படமாக்கியிருக்கும் விதமோ ரொம்ப அமெச்சூர்த்தனம். ஆ ஊன்னா பெண்களுக்கு டன் டன்னாக அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுகிறார் ஹீரோவும் இயக்குநருமான ராம்கி.

    ராம்கியை காதலிப்பதாக திடுமென்று ஆத்மியா சொல்லும்போதே இது சந்தேகமானதுதான் என பார்வையாளர்களுக்குப் புரிந்துவிடுகிறதே.. அதற்கப்புறம் இயக்குநர் வைத்திருக்கும் ப்ளாஷ்பேக் ட்விஸ்ட் எப்படி எடுபடும்?

    அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணும் ஹீரோ எப்படிப்பட்டவர் பாருங்கள்.... இவர் திருடுவாராம், குடித்துவிட்டு அலப்பறை பண்ணுவாராம்... பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வாராம்.. அட செருப்புத் தைப்பவரிடம் கூட பணத்தை அடிப்பாராம்.. ஆனால் அடுத்தவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மட்டும் அறிவுரை மழை. ஹீரோ கேரக்டர் எடுபடாமல் போனதற்கு வேறு காரணங்கள் வேண்டுமா என்ன?!

    ராம்கிருஷ்ணன் நடிப்பு சில இடங்கள் பரவாயில்லை. பல காட்சிகளில் எரிச்சல்படுத்துகிறது.

    ஆத்மியா... மனம் கொத்திப் பறவையில் மனசைக் கொத்தியவர், இதில் முற்றிப் போய்க் காட்சி தருகிறார். பெரும்பாலும் வில்லியாகவே வருவதால் சகித்துக் கொள்ள முடிகிறது. இவரை விட அவர் தோழியே பரவாயில்லை, சில காட்சிகளில்.

    ஹீரோவின் தோழனாக வரும் சென்ராயன் நல்ல நடிகர். அதை இதிலும் நிரூபித்திருக்கிறார்.

    ஜெயப்பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். ஆனால் தன் மகளை சீரழித்த உண்மையான குற்றவாளிகள் மாட்டிய பிறகு, அவர்களிடம் லெக்சர் அடிப்பது... ப்ச்!

    எம்வி பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் கண்ணனின் இசை சுமார். நல்லவேளை.. மூன்று பாடல்களோடு தப்பித்தோம்.

    Pongadi Neengalum Unga Kadhalum Review

    இயக்குநராக ராம்கிருஷ்ணனுக்கு இது முதல் படம். அந்த வகையில் காட்சிகளில் அமெச்சூர்த்தனங்கள் வருவது இயல்புதான். ஆனால் படமே அமெச்சூராக இருந்தால் என்னதான் செய்வது!

    English summary
    Pongadi Neengalum Unga Kadhalum is director Ramkrishnan's maiden attempt, but fails to attract viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X