பொங்கல் ரேஸில் முந்தும் படம்! பொங்கலுக்கு ரிலீஸ் ஆன நான்கு படங்களுமே வசூலில் விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கவில்லை என்று தகவல்கள்தெரிவிப்பதால் திரையுலகம் சந்தோஷமடைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விஜய், அஜீத், சிம்பு ஆகிய மூன்று முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆயின. அத்தோடு கலைஞர்கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான பாசக்கிளிகளும் ரேஸில் கலந்து கொண்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதால் பாசக்கிளிகள் சிரமப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பாசக்கிளிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திரையரங்கஉரிமையாளர்கள் கூறுகிறார்கள். முதல் கட்ட தகவலின் படி நான்கு படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இதில் அஜீத்தின்பரமசிவன் சற்று முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. படம் வெளியான அன்றே சென்னையில் ரூ. 2.5 கோடி அளவுக்குபரமசிவன் வசூல் செய்துள்ளார். விஜய்யின் ஆதி அடுத்த இடத்தில் உள்ளது. பொங்கலுக்கு அடுத்த நாள் அதாவது மாட்டுப் பொங்கல் தினத்தன்று இப்படம்ரிலீஸ் ஆனது. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் சற்றும் மனம் தளராமல் ஆதியை கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவின் சரவணாவும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. கலைஞரின் அணல் பறக்கும்வசனங்களோடு, குடும்ப உறவுகளை அழகாக எடுத்துரைக்கும் ஆழமான வசங்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறதுபாசக்கிளிகள். நான்கு படங்களிலும் பெண்களின் வரவேற்பை அதிகம் பெற்றுள்ள படமாக பாசக்கிளிகள் தான் விளங்குகிறது. இந்தப் படத்திற்குகுடும்பம் குடும்பமாக சென்று மக்கள் படத்தை ரசிக்கிறார்கள். பெண்களின் ஆதரவு காரணமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக பாசக்கிளிகள் சிறகடித்துப் பறக்கிறது. மற்ற மூன்று படங்களுக்கும்(ஆதி, பரமசிவன், சரவணா) ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம் தெரிகிறது. இன்னும் ரசிகர்களே படத்தை பார்த்து முடிக்கவில்லை என்பதால் பெண்களின் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியவில்லை.ஆனாலும் சரவணாவுக்கு பெண்கள் கூட்டம் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. காரணம் ஜோதிகா படத்தில் இருப்பதால். மொத்தத்தில் நான்கு படங்களுமே வசூலில் குறை வைக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. போகப் போகத் தான் வசூலில் முந்தப் போவது யார், பிந்தப் போவது யார் என்பதை கணிக்க முடியும்.

By Staff

பொங்கலுக்கு ரிலீஸ் ஆன நான்கு படங்களுமே வசூலில் விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கவில்லை என்று தகவல்கள்தெரிவிப்பதால் திரையுலகம் சந்தோஷமடைந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு விஜய், அஜீத், சிம்பு ஆகிய மூன்று முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆயின. அத்தோடு கலைஞர்கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான பாசக்கிளிகளும் ரேஸில் கலந்து கொண்டது.


முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதால் பாசக்கிளிகள் சிரமப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பாசக்கிளிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திரையரங்கஉரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

முதல் கட்ட தகவலின் படி நான்கு படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இதில் அஜீத்தின்பரமசிவன் சற்று முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. படம் வெளியான அன்றே சென்னையில் ரூ. 2.5 கோடி அளவுக்குபரமசிவன் வசூல் செய்துள்ளார்.

விஜய்யின் ஆதி அடுத்த இடத்தில் உள்ளது. பொங்கலுக்கு அடுத்த நாள் அதாவது மாட்டுப் பொங்கல் தினத்தன்று இப்படம்ரிலீஸ் ஆனது. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் சற்றும் மனம் தளராமல் ஆதியை கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


சிம்புவின் சரவணாவும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. கலைஞரின் அணல் பறக்கும்வசனங்களோடு, குடும்ப உறவுகளை அழகாக எடுத்துரைக்கும் ஆழமான வசங்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறதுபாசக்கிளிகள்.

நான்கு படங்களிலும் பெண்களின் வரவேற்பை அதிகம் பெற்றுள்ள படமாக பாசக்கிளிகள் தான் விளங்குகிறது. இந்தப் படத்திற்குகுடும்பம் குடும்பமாக சென்று மக்கள் படத்தை ரசிக்கிறார்கள்.


பெண்களின் ஆதரவு காரணமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக பாசக்கிளிகள் சிறகடித்துப் பறக்கிறது. மற்ற மூன்று படங்களுக்கும்(ஆதி, பரமசிவன், சரவணா) ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம் தெரிகிறது.

இன்னும் ரசிகர்களே படத்தை பார்த்து முடிக்கவில்லை என்பதால் பெண்களின் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியவில்லை.ஆனாலும் சரவணாவுக்கு பெண்கள் கூட்டம் கொஞ்சம் கூடுதலாக உள்ளது.

காரணம் ஜோதிகா படத்தில் இருப்பதால். மொத்தத்தில் நான்கு படங்களுமே வசூலில் குறை வைக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. போகப் போகத் தான் வசூலில் முந்தப் போவது யார், பிந்தப் போவது யார் என்பதை கணிக்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X