பொன்னியின் செல்வன் 2 Public Review: பாகுபலி என்னங்க பாகுபலி.. PS2வை கொண்டாடும் மக்கள்!
சென்னை: மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், 2வது பாகம் இன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

உலகம் முழுவதும் ஏகப்பட்ட தியேட்டர்களில் முதல் நாளுக்கான காட்சி மட்டுமின்றி சனி, ஞாயிறு மற்றும் மே 1ம் தேதியும் விடுமுறை என்பதால் அதிவேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
இந்நிலையில், தியேட்டருக்குச் சென்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்த மக்கள் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி என்ன சொல்றாங்கன்னு இங்கே பார்க்கலாம்..

குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்: பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைக் கொண்டாடியதை போலவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொன்னியின் செல்வன் 2வையும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இயக்குநர் மணிரத்னத்தின் மேக்கிங், சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராயின் நடிப்பை படம் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் படத்தை பார்க்க குடும்பத்துடன் தியேட்டருக்கு படையெடுத்தும் வருகின்றனர்.

பாகுபலி என்ன பாகுபலி: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்துடன் பொன்னியின் செல்வன் படத்தை பயங்கரமாக பலரும் ஒப்பிட்டு வந்த நிலையில் தியேட்டரில் படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் சிலர் பாகுபலி என்ன பாகுபலி, பொன்னியின் செல்வன் 2 ரியலாவும் ராயலாவும் இருக்கு என பாராட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம்: கடந்த ஆண்டு வசூல் வேட்டையில் முதலிடத்தை பிடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை போலவே இந்த ஆண்டும் பொன்னியின் செல்வன் 2 தான் வசூலில் முதலிடத்தை பிடிக்கும். இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் மூவி என ஒரு ரசிகர் பாராட்டி உள்ளார்.

எக்ஸ்பெக்ட் பண்ணதை விட: ஒரு பெண் ரசிகை எக்ஸ்பெக்ட் பண்ணதை விட பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நல்லா இருந்துச்சு என்றும் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் தான் ஹைலைட்டே என தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.
முதல் பாகத்தை விட சூப்பர்: பொன்னியின் செல்வன் முதல் பாகம் போல செகண்ட் பார்ட் இருக்காது. இதில், நிறைய ட்விஸ்ட் மற்றும் டர்ன்கள் உள்ளன. வேறமாறி இருக்கு, மணிரத்னம் சார் கிரேட், நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் தான் என இன்னொரு பெண் ரசிகையும் இந்த படத்துக்கு விமர்சனத்தை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











