Por Review: ’போர்’ விமர்சனம்.. இது சரியான போர் இல்லை சரியாகாத அக்கப்போர்.. முடியல சாமி!

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்

இசை: ராஜ், சிவம், சோனல், சோனு மற்றும் விவின்

நேரம்: 2 மணி நேரம் 34 நிமிடங்கள்

இயக்கம்: பிஜோய் நம்பியார்

Rating:
2.0/5
Star Cast: அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்
Director: பிஜோய் நம்பியார்

சென்னை: சியான் விக்ரமையும் ஜீவாவையும் வைத்து டேவிட் படத்தையும் துல்கர் சல்மானை வைத்து சோலோ படத்தையும் இயக்கிய பிஜோய் நம்பியார் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் போர் மற்றும் டங்கே என ஒரே கதையில் தனித்தனியாக நடிகர்களை வைத்து இயக்கி உள்ளார்.

Por Review in Tamil  Arjun Das and Kalidas Jayaram ego clash movie is completely boring one

இந்த வாரம் வெளியாகும் படங்களாவது மலையாள படங்களுக்கு டஃப் கொடுக்கும் என பார்த்தால் தீராத தலைவலியை கொடுக்கும் படங்களாகவே வெளியாகி தமிழ் சினிமா தப்பிக்க வாய்ப்பே இல்லை ராஜா என சொல்லி வருகின்றன.

வெளிநாட்டில் கூட இப்படியொரு கல்லூரி இருக்குமா? என தெரியவில்லை. அந்தளவுக்கு ஒரு வித்தியாசமான கனவு கல்லூரியை காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அது கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு கனெக்ட்டே ஆகவில்லை.

போர் கதை: கல்லூரியில் சீனியரான அர்ஜுன் தாஸ் மற்றும் ஜூனியராக சேரும் காளிதாஸ் ஜெயராமுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல் தான் இந்த போர் படத்தின் கதை. கல்லூரியில் இந்த பிரச்சனை தொடங்காமல் இருவருக்கும் இடையே சிறு வயதில் இருந்தே பகை என சொல்கின்றனர். ஆனால், அதற்கான காரணத்தை இயக்குநர் தெளிவுப்படுத்தவில்லை. காளிதாஸ் ஜெயராம் அந்த பல்கலைக் கழகத்தில் என்ன படிப்பு படிக்கிறார் என்பதே ஆரம்பத்தில் குழப்பமாக இருந்த நிலையில், அர்ஜுன் ரெட்டி போல திடீரென மருத்துவ மாணவராக வந்து நிற்கிறார். கல்லூரியில் நடக்கும் ராகிங், தேர்தல் உள்ளிட்ட விஷயங்களை எந்தளவுக்கு மிகைப்படுத்தி காட்ட முடியுமோ அப்படியொரு போரான படமாக இந்த ’போர்’ படத்தை இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கி இருக்கிறார்.

நடிப்பு எப்படி?: அர்ஜுன் தாஸ் தனக்கே உரிய அந்த கட்டைக் குரலை வைத்துக் கொண்டு காளிதாஸ் ஜெயராம் உடன் மோதும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. ஆனால், அதே சமயம் காதல் காட்சிகளில் கடுப்பேற்றுகிறார். காளிதாஸ் ஜெயராம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். இதில், ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள், போதைப் பொருள் பயன்பாடு என அவரது கதாபாத்திரம் செதுக்கப்பட்ட விதம் ரசிக்கும்படியாக இல்லை. சஞ்சனா நடராஜன், வாழ் படத்தில் நடித்த டிஜே பானு உள்ளிட்ட பெண்களின் நடிப்பு காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பை விட சிறப்பாகவே உள்ளது.

பிளஸ்: கல்லூரியில் ஆசிரியர்களே சாதிய பாகுபாடு பார்ப்பது, இளம் வயதில் நடக்கும் பாலியல் தொல்லையால் ஏற்படும் பாதிப்புகள், நட்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாண்ட விதம் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. இயக்குநர் கேட்டது போல கற்பனை உலகாக அந்த பல்கலைக் கழகத்தை வடிவமைத்த ஆர்ட் வொர்க் பாராட்டும்படி உள்ளது. ஆனால், நம்பும்படி தான் இல்லை. ஒளிப்பதிவு, இசை இரண்டுமே ஓகே ரகம் தான்.

மைனஸ்: படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிஜோய் நம்பியார் எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ அந்தளவுக்கு சொதப்பி விட்டார். தமிழில் மட்டுமில்லை இந்தியிலும் வேறு நடிகர்களை வைத்து டங்கே என இவர் இயக்கிய படமும் ஒரே நாளில் வெளியாகி தோல்வியை தழுவியிருக்கிறது. வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியை பாராட்டினாலும் ரசிக்கும் படி படங்களை கொடுத்தால் தான் ஆடியன்ஸ் தியேட்டர் இருக்கைகளை நிரப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரமும் கோலிவுட்டுக்கு சிறப்பான வசூல் வேட்டை ஆடக் கூடிய படங்கள் வெளியாகவில்லை என்பது வருத்தமான விஷயம் தான். இந்த மார்ச் மாதத்திலாவது இந்த நிலை மாறும் என காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X