திரிஷ்யம் 2 வேறலெவல் Sequel…போஸ்டர் பக்கிரி விமர்சனம்!
சென்னை: மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் திரிஷ்யம் 2.
இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அணில் ஜான்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேரடியாக, பிரபல OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த வாரம் பிப்ரவரி19ம் தேதி திரிஷ்யம் 2ம் பாகம் வெளியானது.
தமிழில் மறு ஆக்கம்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள மொழியில் பெரிய வெற்றி படமாக அமைந்த திரிஷ்யம், தமிழ் மொழியில் பாபநாசம் எனவும் மற்றும் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு நல்ல ஆதரவை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகம் வெளியாகியுள்ளது.
எதிர்பாராத பாகம் 2
இந்த படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாம் பாகத்திற்கான வேலையை தொடங்கினர். கதையை மீண்டும் சரியான புள்ளியில் தொடங்கியுள்ளனர், அது குறித்த கருத்துகள் போஸ்டர் பக்கிரி விமர்சனத்தில் இடம்பெற்றுள்ளது.
பணியில் கமல்ஹாசன்
திரிஷ்யம் படத்தின் முதல் பாகம் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட, கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தையும் தமிழில் மறு ஆக்கம் செய்வதற்கான பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளாரா? என்பதை பற்றிய கருத்து போஸ்டர் பக்கிரி விமர்சனத்தில் இடம்பெற்றுள்ளது.
பக்கிரி கருத்து
படத்தில் இடம் பெற்றுள்ள ட்விஸ்ட்கள் குறித்தும், தொடர்ந்து மலையாள சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் வருவது குறித்தும், திரிஷ்யம் 2 படத்தை பார்க்க வேண்டிய காரணங்கள் குறித்தும் போஸ்டர் பக்கிரி விமர்சனத்தில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











