வால்டர்.. ஹாஸ்பிட்டல்லயே கருணை கொலை பண்ணியிருக்கலாம்.. டார் டாராய் கிழித்த போஸ்டர் பக்கிரி!

சென்னை: சிபி ராஜின் வால்டர் படம் குறித்து விமர்சித்துள்ள போஸ்டர் பக்கிரி படத்தை டார் டாராய் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Recommended Video

வச்சு செஞ்ச WALTER | WALTER MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், ஷிரின் காஞ்வாலா, நட்டி நட்ராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வால்டர்'.

குழந்தை கடத்தல் மற்றும் அதற்கு பின்னணியில் நடக்கும் மோசடிகளை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது வால்டர். படம் குறித்து பலரும் தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வால்டர் விமர்சனம்

வால்டர் விமர்சனம்

அந்த வகையில் நம்முடைய போஸ்டர் பக்கிரியும் படம் குறித்த விமர்சனத்தை வீடியோவா வாயிலாக கூறியிருக்கிறார். அதன்படி படத்தின் கான்செப்ட்டே தவறு என்றும் இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் என்றும் படத்தில் உள்ள தவறுகளை அடுக்கடுக்காய் கூறியிருக்கிறார்.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

இதேபோல் நடிகர் சமூத்திரக்கனியையும் படத்தில் வீணாக்கியுள்ளார். வந்த வேகத்தில் அவரை போட்டுத்தள்ளி நல்ல நடிகரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். முக்கிய நடிகர்களை பயன்படுத்த தெரியாமல் படுத்தியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக சமுத்திரக்கனியை நம்பி வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

ஏனோதானோன்னு..

ஏனோதானோன்னு..

ஏற்கனவே நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இப்படி நடித்த சமுத்திரக்கனி ஏன் அதேபோன்று இதில் நடித்தார் என்றும் கேட்டிருக்கிறார் போஸ்டர் பக்கிரி. இதேபோல் முனிஸ்காந்தின் கேரக்டரையும் வீணாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.இதேபோல் ஹீரோயினுக்கும் பெரிய வேலை ஒன்றும் இல்லை என்று கூறியுள்ள போஸ்டர் பக்கிரி, ஏனோதானோ என படம் எடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

கருணை கொலை செய்திருக்கலாம்..

கருணை கொலை செய்திருக்கலாம்..

இசையும் பெரிதாக சோபிக்கவில்லை என்று கூறியிருக்கும் அவர், படம் முழுக்க மியூஸிக் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது என கூறியுள்ளார். மொத்தத்தில் ஹாஸ்பிட்டலில் எடுத்துள்ள இந்தப் படத்தை ஹாஸ்பிட்டலிலேயே கருணை கொலை செய்திருக்கலாம் என முடித்திருக்கிறார் போஸ்டர் பக்கிரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X