Salaar Review: சலார் முதல் விமர்சனம்.. கம்பேக்கா? பாக்ஸ் ஆபிஸ் டைனோசரா?.. பிரபாஸ் வெறித்தனம்
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சலார் திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. தெலங்கானாவில் நள்ளிரவு 1 மணிக்கு அந்த படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானின் டன்கி டிசம்பர் 23ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போட்டிப் போட உள்ள இந்த இரண்டு படங்களில் வசூல் வேட்டை நடத்தப் போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
முதல் நாள் எந்தவொரு போட்டியும் இல்லாமல் சலார் வெளியாக உள்ள நிலையில், அந்த படம் தான் அதிக வசூல் ஈட்டும் எனக் கூறுகின்றனர். மேலும், சலார் படம் பான் இந்தியாவை டார்கெட் செய்து உருவாகி இருக்கிறது. அதே சமயம் ஷாருக்கானின் டன்கி தென்னிந்தியாவை டார்கெட் செய்யவில்லை. இந்நிலையில், சலார் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குநர் முக்கியம்: என்ன தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கால் சீட்டே கிடைத்தாலும் கதையும் இயக்குனரும் சரியாக இல்லை என்றால் அந்த படம் தோல்வியைத்தான் தழுவும். பல ரஜினி மற்றும் விஜய் படங்கள் சொதப்ப காரணமே இயக்குநர்கள் தான். அதன் நிலைமை தான் டோலிவுட் நடிகர் பிரபாஸுக்கும். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் பிரபாஸின் நடிப்பு இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தது.
பிரசாந்த் நீல் படம்: அந்த படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ் பாலிவுட்டில் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் இந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றின. இந்நிலையில், கே ஜி எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தின் டிரைலரே வெறித்தனமாக இருந்தது. மேலும், பிரபாஸின் தோற்றம் முதல் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் பட்டையை கிளப்பியுள்ளன. அதன் காரணமாகவே டிக்கெட் புக்கிங்கிலும் இந்தியா முழுவதும் சலார் படத்துக்கு பெரும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
முதல் விமர்சனம்: இந்நிலையில், சலார் படத்தின் முதல் விமர்சனம் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தை சென்சார் போர்டிலேயே பார்த்து விட்டு விமர்சனம் செய்கிறேன் என நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனம் தீயாக பரவி வருகிறது. அதில், படத்தின் முதல் பாதி சூப்பராக உள்ளது என்றும் இரண்டாம் பாதி டீசன்ட்என்றும் ஹீரோ என்ட்ரியான 20 நிமிஷம் ஃபயர் என்றும் இரண்டாம் பாகத்துக்கான லீடும் கச்சிதமாக உள்ளது என விமர்சித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் டைனோசர்: இந்த ஆண்டு இதுவரை தெலுங்கு சினிமா டல் அடித்துக் காணப்பட்ட நிலையில், கிளைமேக்ஸில் வந்து பாக்ஸ் ஆபிஸ் டைனோசராக பிரபாஸ் மிரளவிடப் போகிறார் என்றும் இப்பவே புக் மை ஷோ உள்ளிட்ட பல சர்வர்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஸ்க்ராட்ச் ஆகி விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கேஜிஎஃப் படம் ஓடிய நிலையில், சலார் படத்துக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்விராஜ் நடித்துள்ள நிலையில், கேரளாவிலும், பிரசாந்த் நீல் இயக்குநர் என்பதால் கர்நாடகாவிலும் வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர். இந்தி பெல்ட்டில் ஷாருக்கானின் டன்கியை சலார் வீழ்த்துமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











