420 Short Film Review: படுக்கையறை லீலை வீடியோ.. ஃபோனால் வந்த விபரீதம்.. 420 குறும்பட விமர்சனம்!

சென்னை: சினிமா பிரியர்களைத் தங்கள் பக்கம் வளைத்துப் போடுவதற்காகவே இணையத்தில் வெப் சீரிஸ், மினி சீரிஸ், ஷார்ட் ஃபிலிம் எனப் பல ஜானர்களில் படங்கள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போதைய சமூகத்தின் கசப்பான பக்கத்தையும், கணவன்-மனைவி உறவுக்குள் இருக்கும் இடைவெளியையும் அக்குவேறு ஆணிவேறாகப் பேச வந்துள்ளது தான் '420' குறும்படம்.

ஆரம்பமே அதிரடி: கதை ஆரம்பிக்கும் போதே விறுவிறுப்பு பற்றிக்கொள்கிறது. வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து கொண்டிருக்க, அவருக்கு அருகில் ஒரு விலை உயர்ந்த கார் வந்து நிற்கிறது. காரில் இருக்கும் ப்ரீத்தி ஜியோ, அவசரமாக அந்தப் பைக் ஆசாமியிடம் போனை வாங்கி ஒருவருக்குப் போன் செய்து கத்துகிறார்.
என்னடா... என் நம்பரை பிளாக் பண்ணிட்டியா? அதுக்குள்ள ஆசை தீர்ந்து போச்சா? இந்த நம்பரையும் பிளாக் பண்ணிடாத, இது ரோட்டுல போற ஒருத்தர் கிட்ட போனை வாங்கிப் பேசுறேன். இன்னும் கால் மணி நேரத்துல நான் வீட்டுக்கு போயிடுவேன், அதுக்குள்ள நீ எனக்கு கால் பண்ணணும். இல்லைனா பெரிய பிரச்சனையாகிடும் என்று எல்லையை மீறிப் பேசிவிட்டுப் போனை கொடுத்துவிட்டுக் காரில் இருந்து கிளப்புகிறார்.

Short film  Review  420 short movie
Photo Credit:

படுக்கையறை வீடியோ என்கிட்ட இருக்கு: இவர்கள் காருக்குள் பேசுவதை வெளியில் பைக்கில் இருக்கும் சதீஷ் பார்த்திபன் கேட்டுவிடுகிறார். அதன் பிறகு வீட்டுக்கு வரும் ப்ரீத்திக்கு தனது செல்போனை தேடுகிறார். போன் கிடைக்காததால், செக்யூரிட்டியின் போனை வாங்கித் தன் எண்ணிற்கு அழைக்கிறார். எதிர்முனையில் போனை எடுப்பது அதே சதீஷ் பார்த்திபன் தான். மேடம், அசோக் நகர்ல நீங்க என்கிட்டதான் போன் வாங்கிப் பேசுனீங்களே அது என்னிடம் தான் மேடம். கார் கிளம்பும்போது உங்க குழந்தை ஜன்னல் வழியா போனை தூக்கி வெளியில் போட்டுடுச்சு. அதை உங்ககிட்ட கொடுக்கத்தான் கார் பின்னாடியே வந்தேன், ஆனா கொடுக்க முடியல என்கிறார்.

பணம் கேட்டு மிரட்டல்: சரி, போனை எங்கே வந்து வாங்கிக் கொள்ளட்டும் என்று ப்ரீத்தி கேட்க, போன் உங்க கைக்குக் கிடைக்கணும்னா, எனக்கு 5 லட்ச ரூபாய் பணம் தரணும் என்று வெடிகுண்டைத் தூக்கிப் போடுகிறார். ஆத்திரமடைந்த ப்ரீத்தி, என்ன 5 லட்சமா? அந்த போனோட விலையே ஒரு லட்சம் தான், மரியாதையா போனை கொடுத்திடு என்று எகிறுகிறார். அதற்குச் சதீஷ் சிரித்துக்கொண்டே, மேடம், போனோட விலை ஒரு லட்சம்தான். ஆனா அதுக்குள்ள இருக்குற வீடியோவை நான் வெளியில் விட்டா எனக்குப் பல லட்சம் கிடைக்கும் என்று மிரட்டுகிறார்.

Short film  Review  420 short movie
Photo Credit:

பெட்ரூம் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் உங்க புருஷன் சிவராமன் கஷ்டப்பட்டுப் பணம் அனுப்புறாரு. ஆனா நீங்க இங்கே ராஜேஷ் கூட உங்க படுக்கையறையில் விதவிதமாகக் காம லீலைகள் செஞ்சிருக்கீங்க. அந்த வீடியோக்கள் எல்லாத்தையும் நான் பார்த்துட்டேன். இது எப்படி எனக்கு தெரியும்னு நினைக்கிறீங்களா, வாட்ஸ் அப் சாட்டை பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது மேடம்... அனுபவிச்சு வாழ்ந்திருக்கீங்க, இந்த வீடியோ லீக் ஆகாமல் இருக்கணும்னா பணம் வேணும், நான் இப்போ வீட்டு வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் இருக்கேன் எனக்கு பணம் வேணும் என பிளாக்மெயில் செய்கிறான்.

Short film  Review  420 short movie
Photo Credit:

காலில் விழுந்த திருடன்: பதறிப்போன ப்ரீத்தி வேறு வழியின்றி, அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டுத் தன் போனை மீட்டுக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே சதீஷ் நேராகப் ப்ரீத்தியின் வீட்டுக்கே வருகிறான். அவனைப் பார்த்ததும் ஆத்திரப்படும் ப்ரீத்தி என்னடா... உனக்கு இன்னும் பணம் வேணுமா? இந்தா வச்சுக்கோ என பணக்கட்டுகளை அவன் மீது தூக்கி வீசுகிறார். ஆனால், அந்தப் பணத்தையெல்லாம் பொறுமையாகப் பொறுக்கும் சதீஷ், எனக்கு இந்தப்பணம் தேவையில்லை மேடம்... நான் பெரிய தப்பு செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிடுங்க, பெரிய பாவத்தை செய்ய பார்த்தேன் நல்லவேல, இந்தாங்க மேடம் உங்க பணம் என்று பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். பணத்திற்காகப் படுக்கையறை வீடியோவை வைத்து மிரட்டிய ஒரு திருடன், திடீரென மனமாற என்ன காரணம், அந்த குறுகிய நேரத்தில் சதீஷின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்.

இயக்குநர் சொன்ன மெசேஜ்: வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் ஒழுக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் பட்டு இளங்கதிர் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மனைவிக்குத் தன் கணவனுடைய அன்பும், அரவணைப்பும் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், அவள் எப்படித் தவறான பாதைக்குத் திசைமாறிப் போகிறார்கள் என்ற எதார்த்தத்தையும், அதன் பின்விளைவுகளையும் இந்தப் படம் சவுக்கடி போல் சொல்லியிருக்கிறது. பரபரப்பான திரைக்கதையோடு, ப்ரீத்தி ஜியோ மற்றும் சதீஷ் பார்த்திபனின் எதார்த்தமான நடிப்பு, இந்த '420' குறும்படத்தை நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படைப்பாக மாற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X