For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரிதிவிராஜின் ‘கடுவா’ மூவி ரிவ்யூ..தனிமனிதனை சீண்டினால் விளைவு என்னாகும்?-புலியின் பாய்ச்சல்

  |

  இயக்கம் : ஷாஜி கைலாஷ்

  நடிப்பு: பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தாமேனன், கலாபவன் ஷாஜோன்

  கேமரா: அபிநந்தன் ராமானுஜம்

  இசை: ஜேக்ஸ் பிஜோய்

  Rating:
  3.0/5

  சென்னை: நடிகர் பிருதிவிராஜ் நடிப்பின் புகழ்பெற்ற இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் கடுவா. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நேற்று ஓடிடி தளத்தில் அமேசான் பிரைம் இன்-ல் வெளியாகியுள்ளது.
  மலையாள மொழியில், ஆங்கில சப் டைட்டிலுடன் கடுவா வெளியாகியுள்ளது. கடுவா என்றால் தமிழில் புலி என அர்த்தம். இந்தப் படம் ஷாஜி கைலாஷ் கைவண்ணத்தில் விறுவிறுப்பாக நகர்கிறது.
  நடிகர் பிருதிவிராஜ் சமீப ஆண்டுகளில் தமிழ் திரை உலகில் அனைத்து ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராக இருக்கிறார். தமிழிலும் நேரடியாக நடித்துள்ளார் பிரித்விராஜ்.

  பிக் பாஸ் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலங்கள்?.. கசிந்தது போட்டியாளர்கள் பற்றிய தகவல்!பிக் பாஸ் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலங்கள்?.. கசிந்தது போட்டியாளர்கள் பற்றிய தகவல்!

  மம்முட்டி, மோகன்லால் வரிசையில் பிரிதிவிராஜ்

  மம்முட்டி, மோகன்லால் வரிசையில் பிரிதிவிராஜ்

  மலையாள வரவுகளான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட அதிரடி நாயகர்கள் வரிசையில் பிரிதிவிராஜும் தமிழில் நடிக்கிறார், அவருடைய மலையாளப் படங்களும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ப்ரோ டாடி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோன்று ஜனகணமன திரைப்படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழிலும் டப் செய்யப்பட்டு திரையரங்கிலும் பின்னர் ஓடிடி தளத்திலும் படம் வெளியானது. ஜனகணமன படத்தில் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகள் ஜெய்பீம் படத்தை நினைவுபடுத்தும். இதற்கு அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிதிவிராஜன் படம் 'கடுவா' வந்துள்ளது. கடுவா என்றால் தமிழில் புலி என்று அர்த்தம் கதை.

  கதை இதுதான் கடுவா-வாக அசத்தும் பிரித்விராஜ்

  கதை இதுதான் கடுவா-வாக அசத்தும் பிரித்விராஜ்

  படம் 90 களில் நடப்பதுபோல் காண்பித்துள்ளனர். எதற்காக என தெரியவில்லை. கோட்டயம் பகுதியில் பெரும் செல்வந்தராக, சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாக செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் கோட்டயம் குறியாச்சன் (பிரிதிவிராஜ்) சுருக்கமாக கடுவா என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு குடும்பம் போலீஸ் ஐஜி ஜோசப் சாண்டி (விவேக் ஓபராய்) தனது தாய் சீமாவுடன் வசிக்கிறார். இவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினையைச் சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது.

  ஈகோவால் ஏற்படும் மோதல் அதிகாரி-செல்வாக்குள்ள மனிதர் மோதல்

  ஈகோவால் ஏற்படும் மோதல் அதிகாரி-செல்வாக்குள்ள மனிதர் மோதல்

  படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்றால் ஒரு சிறிய பிரச்சனை ஈகோ வாக இருதரப்பில் உருவாக, வலுவானவன் ஒரு மனிதனை அவனுடைய வாழ்க்கையின் கடைசி வரை துன்பம் கொடுப்பதும் இதனால் பாதிக்கப்பட்டவன் சாமர்த்தியமாக அதை எதிர்கொள்வதும் தான் கதை. அதை காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குநர் ஷாஜி கைலாஷ். அந்த ஊரின் பொதுவான சர்ச்சில் பாலியல் விவகாரத்தில் சிக்கி மாற்றலாகி வரும் ஃபாதர் பொறுப்பேற்கிறார். சர்ச் பாதருக்கு ஐஜி விவேக் ஓபராயின் தாயார் சீமா கொடுக்கும் பியானோ விவகாரத்தில் பிரச்சனை கிளம்புகிறது.

  பிரிதிவிராஜ்-விவேக் ஓபராய் மோதல்

  பிரிதிவிராஜ்-விவேக் ஓபராய் மோதல்

  ஒரு சின்ன விவகாரத்தில் சீமா பொய் சொல்ல அது குறித்து கடுமையான வார்த்தைகளை பிரிதிவிராஜ் சீமாவிடம் பேச அதனால் கடும் கோபத்துக்கு ஆளாகும் ஐஜி ஓபராய் பிரித்விராஜை சட்டையைப்பிடிக்க பிரிதிவிராஜ் திருப்பி தாக்க ஊரே வேடிக்கை பார்த்ததால் அவமானம் அடைந்த விவேக் ஓபராய் தனது போலீஸ் பவர் மூலம் பிரிதிவிராஜை பழிவாங்குகிறார். இந்த ஈகோ மோதல்தான் படத்தின் பிரதான அம்சம். தனது செயலுக்கு வருந்தி சீமாவிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் பிரிதிவிராஜை சீமா மரியாதை குறைவாக நடத்தி உன்னை என் மகன் விடவே மாட்டான் உன் வாழ்வின் கடைசி வரை உன்னை துரத்தி அடிப்பான் என்று சவால்விட பார்க்கிறேன் அதையும் என பிரிதிவிராஜ் நகர்கிறார்.

  போலீஸ் ஐஜியால் ஆரம்பிக்கும் தொல்லை

  போலீஸ் ஐஜியால் ஆரம்பிக்கும் தொல்லை

  அதன் பின்னர் அவருக்கு ஆரம்பிக்கிறது தொல்லை. படத்தின் முதல் காட்சியிலேயே கோட்டையம் ஜெயிலை காண்பிக்க அதில் ஒரு கைதியிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் குஞ்சாச்செறியன்னு வருகிறார் உனக்கு தெரியுமா எனக்கேட்க, அவர் யார் என்று தெரியாது என்று சொல்ல கோட்டையும் குஞ்சாச்செறியன் என்று சொல்ல அப்படி சொல்லாதீர்கள் கடுவா என்று சொன்னால்தான் தெரியும் மிக பயங்கரமான மனிதர் புலி போன்றவர் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார் என்று சொல்லி, முதல் காட்சியிலேயே பிரிதிவிராஜ் வரும் காட்சிக்க்கு விறூவிறுப்பை கூட்டுகிறார் இயக்குநர்.

  சிறையில் பிரிதிவிராஜ் சுவாரஸ்யமான ஸ்டண்ட் காட்சி

  சிறையில் பிரிதிவிராஜ் சுவாரஸ்யமான ஸ்டண்ட் காட்சி

  அவர் கைதியாக வரும் முன்னரே ஐஜி விவேக் ஓபராய் போன் ஜெயிலருக்கு வருகிறது, அதுமட்டுமல்ல சிறையில் பிரிதிவிராஜை தாக்க 5 கொடூரமான கைதிகளை முன்னரே சிறைக்கு அனுப்புகிறார் விவேக் ஓபராய். ஆனால் அவர்களை ஜெயிலில் அடித்து துவம்சம் பண்ணுகிறார் பிரித்விராஜ். சண்டைக்காட்சிகளில் பிரித்விராஜின் ஸ்டைல் மோகன்லாலை ஞாபகப்படுத்துகிறது. அதன் பின்னர் டைட்டில் கார்டு ஃபிளாஷ்பேக்காக படம் தொடங்குகிறது. கடுவா பற்றி கேள்விப்பட்டதால் ஜெயிலர் அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்கிறார்.

  பிரிதிவிராஜுக்கு வரும் தொல்லை

  பிரிதிவிராஜுக்கு வரும் தொல்லை

  பிருதிவிராஜ் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அனைத்து போலீசாரும் மாற்றப்பட்டு புதிதாக போலீசார், அதிகாரிகள் வருகின்றனர். முன்னர் பிரிதிவிராஜிடம் அடிவாங்கிய எஸ்.ஐயின் மகனே அந்த ஸ்டேஷனின் எஸ்.ஐயாக வருகிறார். எஸ்.ஐ டொமினிக்காக வரும் கலாபவன் ஷஜோன் கண்ணாலேயே மிரட்டுகிறார். தன் தந்தையை ஏற்கனவே பிரிதிவிராஜ் தாக்கிய கோபத்தில் அவர் வருகிறார் பிரிதிவிராஜ் இல்லாத நேரத்தில் அவரது வீட்டைச் சூறையாடுகிறார். தினம் தினம் தொல்லை கொடுக்கிறார். போலீசார் பல்வேறு வகையில் தொல்லை கொடுக்க பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பர் ஒருவர் மக்களைத் திரட்டி முதல்வருக்கு மனு எழுதி அனுப்புகிறார் அவரையும் போலீசார் தாக்கி காது செவிடாகிறது.

  பிற்பாதி கதையில் விறுவிறுப்பு

  பிற்பாதி கதையில் விறுவிறுப்பு

  பிரிதிவிராஜ் சிறையில் அடைபட்டிருந்த நேரத்தில் அவரது அனைத்து தொழில்களிலும் முடக்கப்படுகிறது. அவரது விவசாய பூமி தீ வைத்து எரிக்கப்படுகிறது. சிறையிலிருக்கும் பிருதிவிராஜ் மேலும் வெறுப்பேற்றும் வகையில் ஐஜி விவேக் ஓபராய் சிறைக்கே வந்து சவால் விடுகிறார். விவேக் ஓபராய் மிகுந்த அரசியல் செல்வாக்குள்ள ஒரு போலீஸ் அதிகாரி மாநில முதல்வருக்கு மறைமுகமாக உதவுபவர் என்பதால் அவருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு அளிக்கிறார் முதல்வர். இந்த நிலையில் சிறையிலிருந்து வெளிவரும் பிரிதிவிராஜை அணுகும் முதல்வருக்கு எதிரான அரசியல் குரூப்புக்கு தன் சொத்தைவிற்று உதவுகிறார், இதனால் முதல்வர் மாறுகிறார். அதன் பின்னர் படம் சுவாரஸ்யமாக செல்கிறது. பிரிதிவிராஜ் புலிப்பாய்ச்சல் பாய்கிறாரா? பூனையாக அடங்குகிறாரா என்பதே மீதிக்கதை.

  படத்தின் பிளஸ்

  படத்தின் பிளஸ்

  பிளஸ் என்று பார்த்தால் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக நகர்த்தும் இயக்குனரின் திறமையை அவருடைய எண்ணத்திற்கு ஏற்றார்போல் நடித்துள்ள பிரிதிவிராஜன் அதிரடி நடிப்பும், அதற்கேற்றார்போல் அமைக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், கேமரா கோணமும் மிக அருமையாக உள்ளது. எடிட்டிங் அதற்கேற்ற பின்னணி இசையும் அருமை. படத்தில் நடித்துள்ள அனைவரும் நமது உணர்ச்சியை தூண்டும் வகையில் நடித்துள்ளனர் குறிப்பாக விவேக் ஓபராய் சிரித்துக்கொண்டே பழிவாங்கும் காட்சிகளிலும், எஸ்.ஐ டொமினிக்காக வரும் கலாபவன் ஷாஜோன் உக்கிரமாக அனைவரது வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் நடித்திருக்கிறார். சர்ச் ஃபாதர், பிஷப், அரசியல் என தைரியமாக தொட்டுள்ளனர்.

  படத்தின் மைனஸ்

  படத்தின் மைனஸ்

  மைனஸ் என்று பார்த்தால் பிருதிவிராஜ் கொடுக்கப்படும் தொல்லைகள், என்னதான் முதல்வரின் ஆதரவு பெற்ற அதிகாரி என்றாலும் ஊருக்குள் புகுந்த வீட்டை துவம்சம் செய்யும்போது அதே அளவு செல்வாக்கு, பணவசதி படைத்த பிரிதிவிராஜ் நீதிமன்றம் மற்றும் மற்ற அதிகாரிகளிடம் செல்லாமல் இருப்பதும், கதைக்கு விறுவிறுப்பு கூட்டுவதற்காக பிரிதிவிராஜ் கடுமையாக பாதிக்கப்படுவதாக காட்டுவது திரைக்கதையில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் இவர்கள் மட்டும் தான் சட்டமா மற்றவர்கள் இவர்களை தடுக்க முடியாதா? தமிழ், தெலுங்கு படத்தைப்போல் மலையாளப்படத்திலும் காதில் ஒரு கூடை பூ வைக்க ஆரம்பித்து விட்டார்களா? என எண்ணத்தோன்றுகிறது.

  பீஸ்ட், விக்ரம் படம் பிஜிஎம் வருதே

  பீஸ்ட், விக்ரம் படம் பிஜிஎம் வருதே

  கதாநாயகி சம்யுக்தா மேனன் உள்ளிட்ட சிலர் வீணடிக்கப்பட்டுள்ளனர். படம் முழுவதும் பிருதிவிராஜ் சுற்றியே வருகிறது கடைசியில் விவேக் ஓபராய் மிகக் கொடூரமாக காட்டுவதற்கு சிறைக்குள் இருந்து ஒருவரை அழைத்து வருவதாக காட்டி வீணாக ஒரு சண்டைக் காட்சியை வைத்துள்ளார் இயக்குநர். இழுவையாக உள்ளது. படத்தின் பின்னணி இசையில் சில சண்டை காட்சிகள் முக்கிய காட்சிகளில் ஒலிக்கும் பிஜிஎம் பீஸ்ட், விக்ரம் படத்தில் இருப்பது போல் உள்ளது. அனிருத் தான் இசையமைத்துள்ளாரா என்று பார்த்தால் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

  கிரைம் கதைகளின் எக்ஸ்பர்ட் இயக்குநர் ஷாஜி கைலாஷ்

  கிரைம் கதைகளின் எக்ஸ்பர்ட் இயக்குநர் ஷாஜி கைலாஷ்

  படத்தின் இயக்குநர் ஷாஜி கைலாஷ் மிக நீண்ட அனுபவம் உள்ள இயக்குநர். கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர். தமிழில் வாஞ்சிநாதன், அஜித்தின் தினா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும் படத்தின் கேமராவும் சரி, சண்டை காட்சிகள், இசை, நடிப்பு, காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை என ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை பார்க்க வருபவர்களுக்கு நல்ல படமாக இருக்கும் இந்த படம் தற்போது ஓடிடியில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

  English summary
  Actor Prithviraj's movie Kaduva is directed by famous director Shaji Kailash. The film, which was released in theatres last month, was released yesterday on the OTT site Amazon Prime In.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X