Citadel Episode 1st review : சிட்டாடல் வெப் தொடர் முதல் எபிசோடு விமர்சனம் எப்படி இருக்கு?
சிட்டாடல் வெப் தொடர்
இயக்குநர் : ஜோஷ் அப்பல்பாம், பிரையன் ஓ, டேவிட் வெயில்
நடிகர்கள் : ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ்
ஓடிடி : அமேசான் பிரைம்
சென்னை : சிட்டாடல் வெப் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் சிட்டாடல் இணைய தொடர் இன்று வெளியாகி உள்ளது. இதில் சிட்டாடல் முதல் எபிசோடு எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
ஆரம்பமே சரவெடி : சிட்டாடல் முதல் எபிசோடிடன் ஆரம்பமே ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. தலைகீழான சுழன்று செல்லும் கேமராவில், மிகவுட் ஹாட்டான உடையில் இயற்கை அழகை ரசித்தபடி ரயிலில் பயணம் செய்கிறார் பிரியங்கா சோப்ரா. அப்போது அவருக்கு ஓர் ரகசிய அழைப்பு வருகிறது. அதில் அந்த ரயிலில் பயணம் செய்யும் ஒருவரின் கையில் இருக்கும் நியூக்கிலியரை கைப்பற்ற வேண்டும் என உத்தரவு வர நதியா சென் (பிரியங்கா சோப்ரா) அந்த உத்தரவை செயல்படுத்த தயாராகிறார்.

அதிரடியான ஆக்ஷன் காட்சி:அப்போது, அவருக்கு உதவியாக மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) வருகிறார். இருவரும் இணைந்து அந்த நியூக்கிலியரை கைபற்ற முயலும் போது, அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கிருந்தவர்களின் கையில் வசகமாக சிக்கிவிடுகின்றனர் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன். நிலைமையை சுதாரித்துக்கொண்ட இருவரும் அடுத்த நொடி 007 ஜேம்ஸ் பாண்டுகளாக மாற்றி அங்கிருந்தவர்களை சுட்டு வீழ்த்தி தப்பிக்க நினைக்கும் போது, ரயில் வெடித்து சிதறுகிறது.
நினைவை இழந்த ரிச்சர்ட் மேடன் : இதில் உயிர்தப்பிக்கும் ரிச்சர்ட் மேடன், தான் யார், தனது உண்மையான பெயர் என்ன, தனக்கு என்ன நடந்தது என அனைத்தையும் மறந்துவிட புது அடையாளங்களுடன் மனைவி, குழந்தையுடன் என வாழத்தொடங்குகிறார். தனது வாழ்க்கையின் ரகசியம் என்ன சென்று தெரிந்து கொள்ள படாதபாடுபட்டு வரும் ரிச்சர்ட் மேடனுக்கு நான் யார் என்ற உண்மையை தனது நண்பனின் மூலம் தெரியவருகிறது.

ரகசிய உளவாளி : இதில் உலகில் வாழும் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சிட்டாடலின் ரகசிய உளவாளி என்பதும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாலை அழிக்க மாண்டி கோர் என்ற சக்திவாய்ந்த குழு ஒன்று திட்டமிட்டு சிட்டாலை அழிந்துவிட்டது என்றும். இதில் நீ மட்டும் தான் உயிரோடு இருக்கிறார் என்றும், உன்னோடு பயணிந்த பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆனது, அவர் உயிருடன் இருக்காரா என்கிற என்ற விவரமும் தெரியவில்லை என்கிறார் நண்பர்.
அடுத்தடுத்த எபிசோடுகள் : தற்போது, சிட்டால் குழு பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளது என்றும், சிட்டாலில் ரகசிய உளவாளியாக இருந்தவர்களின் விவரம் திருடப்பட்டுள்ளது. இதனால், ரகசிய உளவாளிகள் அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











