திரில்லர் ரசிகர்களுக்கு வரம் இந்த பஞ்சராக்ஷரம்
சென்னை : பஞ்சராக்ஷரம் படத்தை பாலாஜி வைரமுத்து கதை எழுதி இயக்கி இருக்கிறார்.பேரடாக்ஸ் புரடக்ஸன் மற்றும் அபியா மோசஸ் படத்தை தயாரித்து உள்ளனர் .படத்தில் சந்தோஷ் பிரதாப் ,மது ஷாலினி,சனா அல்தாஃப்,அஸ்வின் ஜெரோம்,கோகுல் ஆனந்த் மற்றும் சீமோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் ,படத்திற்கு இசை அமைத்து உள்ளார் கே.எஸ்.சுந்தரமூர்த்தி .படத்திற்கு ஒளிப்பதிவு யுவா செய்துள்ளார் .படத்தொகுப்பு ஆனந்த் ஜெரால்டின் செய்துள்ளார் .
படத்தின் முக்கிய நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடித்து இருக்கிறார் .இவர் தமிழ் சினிமாவில் பார்த்தீபனின் கதை ,திரைக்கதை ,வசனம் ,இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் .அதற்கு பின் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரின் படங்களின் தோல்விகள் இவரை கண்டுகொள்ளாத நிலைக்கு தள்ளியது .அதை தாண்டி தற்போது பேர் சொல்லும் பல படங்களில் நடித்து வருகிறார் சந்தோஷ்.


அந்த விளையாட்டு பல திடுக்கிடும் சம்பவங்களுக்கு கதையை எடுத்து செல்கிறது ,அதன்பின் தொடரும் பல விசயங்கள் நம்மை ஆச்சரியம் ஊட்டவைக்கும் விசயங்களாகவும் அதிசயமான விசயங்களாகவும் இருக்கின்றன . மனிதனின் நம்பிக்கை எந்த உச்சத்திற்கும் வேண்டுமானலும் எடுத்து செல்லும் அதே நேரத்தில் ஒரு மனிதனின் கெட்ட சிந்தனைகள் மிக பெரிய ஆபத்தையும் கொண்டு வரும் என்று கதை எடுத்து கூறுகிறது .

சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் இந்த பஞ்சராக்ஷரம், மனோ ரீதியாக பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. மேக்கிங் விஷயத்தில் அசத்தி உள்ளார்கள் . ஒட்டு மொத்த டீமுக்கும் பாராட்டுக்கள் .

படத்தின் குறை என்றால் கற்பனைகள் என்று சொல்லபடும் காட்சிகள் தான் .அதில் சில சமயங்களில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது .இரண்டாம் பாதியில் பல இடங்கள் தொய்வுற்றே காண படுகிறது .அதைதான்டி டாவின்சி கோட் படத்தில் வரக்கூடிய கதாபாத்திரம் போல வரும் கதாபாத்திரம் எல்லாம் நம்மை சில சமயங்களில் விரக்தி அடையவும் செய்கின்றது. ஆங்கில படமான ஜுமான்ஜி திரைபடத்தில் குழந்தைகள் ஒரு புத்தகம் வைத்து விளையாடுவார்கள் , அதுபோல் சில காட்சிகள் இருந்தாலும் , திரைக்கதையில் நிறைய ஸ்வாரசியங்கள் செய்து உள்ளார் இயக்குனர்.

2019 ஆம் ஆண்டு பல புதிய இயக்குனர்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய வரப்பிரசாதம். பல புதிய முயற்ச்சிகள் செய்து சாதனை படைக்க துடிக்கும் இளைஞர்கள் , நல்ல படங்களை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் .



Click it and Unblock the Notifications











