PT Sir Review: பிடி சார் விமர்சனம்.. ஹிப் ஹாப் ஆதி, அனிகா சுரேந்திரனின் படம் எப்படி இருக்கு?
நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, அனிகா சுரேந்திரன், காஷ்மிரா, தியாகராஜன்
இசை: ஹிப் ஹாப் தமிழா ஆதி
இயக்கம்: கார்த்திக் வேணுகோபாலன்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜை வைத்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பிரபு, பாக்கியராஜ், பாண்டியராஜன், பட்டிமன்றம் ராஜா, இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள 'பிடி சார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த 'ஆம்பள' படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அதற்குள் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அவரது இசையில் 25வது படமாக உருவாகியுள்ள 'பிடி சார்' (PT Sir) திரைப்படம் இன்று வெளியானது.

மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஏழாவது படமாக பிடி சார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையுமா? இல்லையா என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
PT சார் கதை: பிரபல யூடியூப் சேனலான ’பிளாக் ஷீப்’ டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தை போலவே நல்ல கருத்தை சொல்லும் படமாகவே இந்த படத்தையும் உருவாக்கி உள்ளார். நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார். அவர் நடத்தி வரும் பள்ளியில் பிடி சாராக வேலைக்கு சேரும் ஹிப் ஹாப் ஆதி எந்தவொரு வம்புக்கும் தும்புக்கும் போகாத மாணிக்கமாக உள்ளார். இங்கிலீஷ் டீச்சருடன் ரொமான்ஸ் டிராக் ஓடிக் கொண்டிருக்கும் போது அனிகா சுரேந்திரனை தங்கையாக பாவித்து பழகி வரும் சென்டிமென்ட் டிராக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அனிகா சுரேந்திரன் உயிரிழக்க ஹிப் ஹாப் ஆதி எப்படி போராட்ட நாயகனாக மாறுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இந்த படத்தில் சைலன்ட் கில்லராக வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நீதிபதியாக பாக்கியராஜ், வழக்கறிஞராக பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் உள்ளது. ஹிப் ஹாப் ஆதி தன்னால் முடிந்த வரை நடித்து, நடனமாடி, காமெடி செய்து, ஆவேசமாக கருத்து பேசி நடித்திருக்கிறார். அனிகா சுரேந்திரனின் போர்ஷன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. அவர் இல்லை என்றால் இந்த படத்தை இந்த அளவுக்கு உட்கார்ந்து கூட பார்த்திருக்க முடியாது.
பிளஸ்: ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு தாறுமாறான பாடல்களை கொடுத்து படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தார். ஆனால், தனது படங்களுக்கு மீசையை முறுக்கு படத்தை தவிர்த்து மற்ற படங்களுக்கு பெரிதாக சூப்பர் பாடல்களை கொடுக்கவில்லை என்கிற குறையை இந்த படத்தில் நிறைவு செய்துள்ளார். பாடல்கள் எல்லாமே பக்காவாக உள்ளது. ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிகாவை தாண்டி இளவரசு மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. மற்ற சீனியர் நடிகர்கள் எல்லாம் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
மைனஸ்: படத்தின் ஒன்லைன் மற்றும் கதை நல்லா இருந்தாலும், திரைக்கதையில் அதிக தொய்வு இருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களை கவரும் விதமாக படம் இல்லை. சுவாரஸ்யம் குறைந்து வழக்கமான ஹிப் ஹாப் ஆதி படமாகவே இந்த படமும் மாறி விடுகிறது. பெண்கள் இந்த சமூகத்தில் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து பல படங்கள் வந்து குவிந்து வரும் வரிசையில் இதுவும் ஒரு படமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications