Pushpa 2 Reloaded Twitter Review: புஷ்பா 2 ரீலோடட் எப்படி இருக்கு?.. 2000 கோடி வசூல் சாத்தியமா?
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு வெளியான படங்களுக்காக கொஞ்சம் காத்திருந்து இன்று புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளுடன் வெளியான நிலையில், மீண்டும் அல்லு அர்ஜுன் ஆர்மி தியேட்டர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் ஜனவரி 10ம் தேதி வெளியான நிலையில், ஜனவரி 11ம் தேதி புஷ்பா 2 ரீலோடட் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால்,கேம் சேஞ்சர் வசூல் பாதித்து விடும் என்கிற பேச்சுவார்த்தையை தில் ராஜு தரப்பு நடத்தியதோ என்னவோ ஜனவரி 17ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இன்று வெளியான புஷ்பா 2 ரீலோடட் படத்தில் ஆரம்பத்தில் அந்தரத்தில் விடப்பட்ட அந்த ஜப்பான் சண்டைக் காட்சியை நீட்டி சரியான தீர்வு கொடுத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் ட்விட்டரில் ரீலோடட் விமர்சனத்தை அடுக்கி வருகின்றனர்.
புஷ்பா 2 கூடுதல் காட்சிகள்: 3 மணி நேரம் தமிழில் படம் எடுத்தாலே ரசிகர்கள் போரடித்து விடுகிறது என ஃப்ளாப் ஆக்கி வருகின்றனர். 3 மணி நேரம் 15 நிமிடங்களுடன் புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 1850 கோடி வசூல் வரை அந்த படம் இதுவரை ஈட்டிய நிலையில், தற்போது புஷ்பா 2 திரைப்படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ரன் டைமுடன் 20 நிமிட கூடுதல் காட்சிகளை சேர்த்து செம தில்லுடன் வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் சீன் முதல் ஜாலி ரெட்டி சீன் வரை: புஷ்பா 2 படத்தை பார்த்த பலரும் எழுப்பிய முதல் விமர்சனமாக அந்த ஜப்பான் இன்ட்ரோ சீன் தான் இருந்தது. புஷ்பா 3 படத்தில் தான் அதற்கான காரணம் தெரிய வரும் என்றெல்லாம் ரசிகர்கள் முட்டுக் கொடுத்தனர். இந்நிலையில், கூடுதல் காட்சியில் ஜப்பான் சண்டைக் காட்சியை கச்சிதமாக முடித்து விசில் சத்தம் தியேட்டரை கிழிக்கும் அளவுக்கு செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிண்டிகேட் சீன், ஜாலி ரெட்டி சீன், கடைசியாக புஷ்பாவின் டாலர் செயினை அவரது அண்ணன் கொடுக்கும் எமோஷனலான காட்சி என பல காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக லிஸ்ட்டே வெளியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











