Pushpa 2 Review: புஷ்பா 2 விமர்சனம்.. அல்லு அர்ஜுன் வைல்டு ஃபயரா இருக்காரு.. ஆனால், கதை?

ரேட்டிங்:

Rating:
3.5/5

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி.எஸ்

இயக்கம்: சுகுமார்

சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், ஜகபதி பாபு, ஸ்ரீலீலா, அனுசுயா, சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளது. தியேட்டர் எக்ஸ்ப்ரீயன்ஸ் காட்சிகளை அடிக்கடி அடுக்கி 200 ரூபாய் மற்றும் அதற்கு மேல் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களை படக்குழுவினர் திருப்திப்படுத்தி அனுப்புகின்றனர்.

புஷ்பா திரைப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்த படத்திலும் அதைவிட அதிக மெனக்கெடலுடன் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். ஆனால், அவர் மட்டுமே படம் முழுக்க ஓவர் பர்ஃபார்ம் பண்ணுவது போலவும், மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் மொத்தமாக வலுவிழந்து காணப்படுவதும் புஷ்பா 2 படத்தை ஒரு சிறந்த படம் என சொல்லவிடாமல் செய்கிறது.

tags  pushpa 2  review  allu arjun  rashmika mandanna  tamil cinema                     2

மெகா பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தொடர்ச்சியாக முழுமை பெறாமல் குறை பிரசவமாகவே ஏன் வெளியாகி வருகின்றன என்கிற கேள்விகளையும் அதிகமாக இந்த படம் எழுப்பியுள்ளது. புஷ்பா 2 படத்தின் நிறைகளையும் குறைகளையும் முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க..

புஷ்பா 2 கதை: தனது மனைவி ஸ்ரீவள்ளி முதலமைச்சர் உடன் போட்டோ கேட்க கள்ளக்கடத்தல் செய்றவன் கூட எல்லாம் நின்னு போட்டோ எடுக்க முடியாது என முதல்வராக வரும் ஆடுகளம் நரேன் அவமானப்படுத்திவிட மந்திரி பதவி கேட்டுச் செல்லும் ராவ் ரமேஷையே முதல்வராக புஷ்பராஜ் மாற்றும் ஒரு கதை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சிறு வயது முதலே அண்ணனால் குலம் கோத்திரம் தெரியாதவன் என அவமானப்படுத்தப்பட்டு வரும் புஷ்பராஜ் அண்ணன் மகளுக்காக எடுக்கும் பெரிய ரிஸ்க் காரணமாக என்ன ஆகிறது என்கிற இன்னொரு கதை ஓடுகிறது. எல்லாத்துக்கும் மேலாக, முதல் பாகத்தின் வில்லனான பன்வர்சிங் செகாவத் (பகத் ஃபாசில்) புஷ்பராஜின் இல்லீகல் செஞ்சந்தனக் கடத்தலை பிடித்தாரா? இல்லையா? என இன்னொரு கதை என புஷ்பா 2 படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படம் எப்படி இருக்கு?: படத்தின் தொடக்கத்தில் வரும் அந்த ஜப்பான் சீன் எதுக்கு என்றே புரியாத அளவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் இன்ட்ரோ சீன் போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பகத் ஃபாசில் செம்மரக் கடத்தல்காரராக மாறு வேஷத்தில் வரும் போது தான் படமே சூடு பிடிக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கடத்தல் தொழிலை எப்படியெல்லாம் புஷ்பராஜ் அசால்ட்டாக செய்கிறார் என்பதை ஐடியாவுடன் போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவுக்கான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஸ்ரீவள்ளியாக இந்த பாகத்திலும் தொடரும் ராஷ்மிகா மந்தனா முதலமைச்சர் உடன் ஒரு போட்டோ கேட்க ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்து ஸ்ரீவள்ளியின் பிறந்தநாளுக்கு ராவ் ரமேஷை முதலமைச்சராக்கி வீட்டுக்கே கொண்டு வந்து விருந்து கொடுக்கும் காட்சிகள் எல்லாம் கொல மாஸ்.

தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என கங்கம்மா கோயிலில் சேலை கட்டி தீ மிதித்து தனது அண்ணன் மகளின் மானம் காக்க காளியாத்தா கணக்கில் சண்டை போடும் அந்த ஜதாரா போர்ஷனே மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஆனால், பகத் ஃபாஸிலுக்கு வைத்துள்ள முடிவு. கிளைமேக்ஸில் ரோப் கட்டிக் கொண்டு சண்டை செய்கிறார் என்பதெல்லாம் பச்சையாக தெரியும்படியான எடிட்டிங் மற்றும் ஒரு நல்ல சீன் வந்தால் அடுத்து ஒரு படு சுமாரான சீன் என சுகுமாரின் ரைட்டிங்கில் உள்ள குளறுபடிகள் படத்தை ஒட்டுமொத்தமாக கொண்டாட முடியவில்லை.

பிளஸ்: மொத்த படத்தையும் செஞ்சந்தனத்தை தோளில் சுமந்து ஒரு ஷோல்டர் ஏறியிருக்கும் புஷ்பாவுக்கு இன்னொரு ஷோல்டரிலும் ஹெவி வெயிட் வைத்தாலும் அதையும் சுமந்துக் கொண்டு நடிப்பில் மிரட்டி விடுகிறார். ராஷ்மிகா மந்தனா தனது புருஷனுக்கு ஒண்ணுன்னா யாரையும் பார்க்க மாட்டேன் என வச்சு விளாசும் காட்சிகள் ஹைலைட். பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் படத்திற்கு தேவையான அளவிலேயே உள்ளன. பகத் ஃபாசில் உடன் அந்த வைல்டு ஃபயர் சீனில் வசனம் இல்லாமல் செய்கை மூலமாகவே செய்யும் ஆக்‌ஷன்கள் எல்லாமே வேறலெவல். அந்த ஸாரி கேட்டுவிட்டு வந்து நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்கும் சீன் எல்லாம் தியேட்டர் தெறிக்குது.

மைனஸ்: ஒரே கதையில் பயணிக்காமல் ஏகப்பட்ட கிளை கதைகளை புஷ்பா ஷோல்டரில் ஏற்றியது தான் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. தனது அண்ணன் மகளை காப்பாற்றும் அந்த கிளைமேக்ஸ் போர்ஷன் எல்லாம் வழக்கமான படங்களிலேயே பார்த்து போரடித்து விட்டக் காட்சிகள் தான். கடைசியில் வரும் கிளைமேக்ஸ் காட்சி மற்றும் 3ம் பாகத்துக்கான லீடு எல்லாம் தேவையில்லாத ஆணியாகவே தெரிகிறது. ஜகபதி பாபு நடிக்கிறார் என்றதுமே சொதப்பிடுமோ என பயந்தது போலவே புஷ்பா 2 சில இடங்களில் கதை மற்றும் திரைக்கதை ரீதியாக சொதப்பி விட்டது. ஆனாலும், அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புக்காக புஷ்பா 2 படத்தை தியேட்டரில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X