Pushpa 2 X Review: புஷ்பா 2 ட்விட்டர் விமர்சனம்.. ஓவர் ஹைப்புக்கு வொர்த்தா படம்?.. எப்படி இருக்கு?

சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த படத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். புஷ்பா 2 படம் இரவே வெளியான நிலையில், ரசிகர்கள் அந்த படத்தை பற்றி இரவு முழுக்க சோஷியல் மீடியாவில் பேசி வருகின்றனர்.

அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புஷ்பராஜாக நடித்துள்ள அல்லு அர்ஜுன் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்துக் கொண்டு ரசிகர்களை என்டர்டெயின் செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2, கங்குவா, தேவரா உள்ளிட்ட படங்கள் சொதப்பியது போல புஷ்பா 2 படம் சொதப்பி விடக்கூடாது என ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், புஷ்பாவின் தலை தப்பியதா? இல்லையா? என்பது குறித்து ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னு இங்கே பார்க்கலாம் வாங்க..

தரன் ஆதர்ஷ் விமர்சனம்: பாலிவுட்டின் பிரபல விமர்சகர் தரன் ஆதர்ஷ் புஷ்பா 2 படத்தை பார்த்துவிட்டு மெகா பிளாக்பஸ்டர் என விமர்சனம் கொடுத்துள்ளார். எந்தவொரு இடத்திலும் குறையில்லாத தரமான சரக்காக புஷ்பா 2 தெறிக்குது என்றும் சுகுமார் அல்லு அர்ஜுன் ரசிகர்களை துளியும் ஏமாற்றவில்லை என்றும் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். சண்டைக் காட்சிகளை படத்தில் கொரியோகிராஃப் செய்த விதம் தான் வேறலெவல் என்றும் இந்தியாவின் அனைத்து சினிமா விருதுகளுக்கும் அல்லு அர்ஜுன் தகுதியானவர் என்றும் கண்டிப்பாக இந்த படத்தை மிஸ் செய்து விடாதீங்க எனக் குறிப்பிட்டுள்ளார்.

Pushpa 2 Twitter Review

அபவ் ஆவரேஜ்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்துக்கு ஓவர் ஹைப் கொடுக்கப்பட்ட நிலையில், படத்தில் ஏகப்பட்ட குறைகள் முதல் பாதியிலேயே ரசிகர்களை சோதித்து விடுவதாகவும், இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் மேலும், ரம்பம் போல அறுப்பதாகவும் இந்த படம் அபவ் ஆவரேஜ் படம் தான் என்றும் தெலுங்கு ரசிகர்கள் தான் அதிகம் முட்டுக் கொடுத்து வருகின்றனர் என்றும் இந்த நெட்டிசன் புஷ்பா 2 படத்தை போட்டு பொளந்துள்ளார்.

Pushpa 2 Twitter Review

கங்கம்மா சாமியாட்டம்: அந்த அம்மன் வேடத்தில் அல்லு அர்ஜுன் வரும் கங்கம்மா ஜதாரா சண்டைக் காட்சி எல்லாம் தியேட்டரில் ரசிகர்களை சாமி வந்து ஆட வைத்துவிடும் என்று இந்த ரசிகர் விமர்சித்துள்ளார். அல்லு அர்ஜுன் ரசிகர்களின் டிக்கெட்டுகளுக்கு இந்த காட்சி ஒன்றே போதும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Pushpa 2 Twitter Review

புஷ்பா 2 அம்மன் வேடத்தில் ரசிகர்: உலகம் முழுவதும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் புஷ்பா படத்திற்கு பிறகு அதிகரித்த நிலையில், புஷ்பா 2 படத்துக்குப் பிறகு மேலும், ரசிகர்கள் அதிகரிப்பார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. காளி வேடம் அணிந்துக் கொண்டு சேலையணிந்து அல்லு அர்ஜுன் படத்தில் நடித்ததை போலவே டோலிவுட் ரசிகர் ஒருவர் புடவை மற்றும் அதே மேக்கப் அணிந்துக் கொண்டு தியேட்டரில் வலம் வந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

பகத் ஃபாசில் பாவம்: இந்தியாவிலேயே டாப் 5 திறமையான நடிகர்கள் பட்டியல் எடுத்தாலே பகத் ஃபாசில் இருப்பார். அவரது வாழ்க்கையிலேயே அவர் நடித்த மோசமான படம் என்றால் புஷ்பா 2 தான். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்தை மொத்தமாக சொதப்பி விட்டார்கள். கமர்ஷியல் படம் எடுக்கிறோம் என்கிற பெயரில் இப்படி கோமாளித்தனம் பண்ணுவது சரியில்லை. புஷ்பா 2 பிக் டைம் ஃபிளாப் என நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு புஷ்பா 2 படம் வெளியாகும் நிலையில், விரைவில் முழு விமர்சனம் வந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X