For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புத்தம் புது காலை விடியாதா... ஓடிடி ரசிகர்களை கவர்ந்ததா? கடுப்பேற்றியதா?

  |

  சென்னை : ஐந்து கதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ள படம் புத்தம் புது காலை விடியாதா. 2020 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தம் புது காலை ஆந்தாலஜியின் இரண்டாம் பாகமாக புத்தம் புது காலை விடியாதா படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

  Recommended Video

  Putham pudhu kaalai vidiyaadha | Balaji Mohan | TeeJay | Maari 3 பண்ற Idea இல்ல |Filmibeat Tamil

  பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, சூர்யா கிருஷ்ணா மற்றும் ரிச்சர்டு ஆன்டனி ஆகியோர் இயக்கி உள்ள 5 கதைகள் இணைந்தது தான் புத்தம் புது காலை. கொரோனா லாக்டவுன் காலத்தில் நடப்பதை பற்றி புத்தம் புது காலை படத்தில் கூறியதை போல், கொரோனாவால் மக்கள் எவ்வாறு தங்களின் நண்பர்கள், தந்தை, அன்பான உறவுகளை இழந்து தவிக்கிறார்கள் என்பது தான் புத்தம் புது காலை விடியாதா படத்தின் கதை.

  நமக்கு சோறு முக்கியம் பாஸ்... மீண்டும் நிரூபித்த குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நமக்கு சோறு முக்கியம் பாஸ்... மீண்டும் நிரூபித்த குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி

  முகக்கவச முத்தம்

  முகக்கவச முத்தம்

  டைரக்டர் பாலாஜி மோகனின் முகக்கவச முத்தம், இது போலீஸ் அதிகாரிகளின் காதல் உணர்வுகளை பற்றி சொல்வதாகும். தீஜய் மற்றும் கெளரி ஆகியோர் முருகன் மற்றும் குயில் ரோல்களில் நடித்திருந்தனர்.தீஜய் மற்றும் கெளரி கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் போலீஸ் அதிகாரிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை எமோஷன் கலந்து சொல்லி உள்ளார்கள். இவர்கள் இருவரும் லாக்டவுன் சமயத்தில் மற்றொரு ஜோடிக்கு திருமணம் செய்ய உதவி செய்கிறார்கள். இதை யதார்த்தமான நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

  லோனர்

  லோனர்

  லிஜோமோல், அர்ஜுன் தாஸ் நடிப்பில் ஹலிதா ஹமீம் இயக்கி உள்ள கதை லோனர். நல்லதங்காள் கேரக்டரில் நடித்த லிஜோமோல் கதையுடன் ஆரம்பமாகிறது. முன்னாள் காதலரான அர்ஜுன் தாஸ், தவறுதலாக லிஜோவின் வீட்டுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அனுப்பி விடுகிறார். பிறகு தவறுதலாக நடந்து விட்டது என வாய்ஸ் மெசேஜும் அனுப்புகிறார். அதை கேட்டதும் பழைய காதல் நினைவுகளில் மூழ்குகிறார் லிஜோ. பிறகு பிரிவை நினைத்து அழுகிறாள். எதிர்பாராத விதமாக ஜும் மூலம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அப்போது சல்வார் மீது புடவை அணிந்தபடி அவர் கலந்து கொள்கிறார். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் மக்களின் வாழ்க்கையில் உள்ள வேறுபாடுகளை காட்டுவதாக இந்த கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது.

  மெளனமே பார்வையாய்

  மெளனமே பார்வையாய்

  மதுமிதா இயக்கிய மெளனமே பார்வையாய் கதையில் நதியா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அன்பை பகிர வார்த்தை தேவையில்லை, பார்வை மட்டும் போதும் என்பதை மிக அழகாக காட்டி உள்ளனர். வார்த்தை ஏதும் பேசாமலேயே இருவர் எவ்வாறு அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை காட்டி உள்ளனர். கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளேயே எவ்வாறு சமூக இடைவெளியே உருவாகி விட்டது என்பதையும், தம்பதிகள் இடையே உருவாகி விட்ட ஈகோ ஆகியவற்றை சின்ன சின்ன அன்றாட நிகழ்வுகள் மூலம் காட்டி உள்ளனர்.

  தி மாஸ்க்

  தி மாஸ்க்

  சூர்யா கிருஷ்ணன் இயக்கி உள்ள தி மாஸ்க் கதையில் சனந்த், திலிப் சுப்ரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதலை பெற்றோரிடம் சொல்ல தயங்கும் காதலன், உடனடியாக சொல்ல சொல்லி கட்டாயப்படுத்தும் காதலி. 15 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் பள்ளி நண்பர்கள் சொல்லும் கதை, ரெளடி நண்பருக்கு பின்னால் இருக்கும் மனைவியை இழந்த சோகம். நண்பரின் கதையை கேட்டு இறுதியாக பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்தும் அர்ஜுன் தாஸ் என கதை நகர்கிறது.

  நிழல் தரும் இதம்

  நிழல் தரும் இதம்

  ரிச்சர்ட் ஆன்டனி இயக்கத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, நிர்மல் பிள்ளை ஆகியோர் நடித்துள்ள கதை நிழல் தரும் இதம். உணர்வுகளை வெளிக்காட்டாமல் அனைவரும் நம்மை சுற்றி அமைத்துள்ள சுவரை காட்டுவது தான் இந்த கதை. சோபி கேரக்டரில் வரும் ஐஸ்வர்ய லட்சுமி, தனக்கு போன் பண்ணும் தந்தைக்கு வழக்கம் போல் நான் பிஸியாக இருக்கிறேன் என பதிலளிக்கிறார். பிறகு தான் அவரது தந்தை திடீரென உயிரிழந்தது தெரிய வருகிறது. தந்தை உயிரிழந்தது, அவரிடம் பேசாமல் தான் தவிர்த்தது போன்றவற்றால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அவர் தந்தையில் மரணத்தின் சோகத்தில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதை காட்டி இருக்கிறார்கள். ஐஸ்வர்ய லட்சுமி மிக அழகாக நடிப்பை வெளிக்காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

  என்ன ரேட்டிங்

  என்ன ரேட்டிங்

  ஐந்து வெவ்வேறு சூழல்களில் சிக்கிய 5 நபர்களை பற்றிய இந்த படத்திற்கு 3.5 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. க்ளைமாக்சில் காட்டப்படும் இரண்டு ஷாட்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. யதார்த்தமாக ரசிக்கும் வகையில் இந்த ஆந்தாலஜி அமைக்கப்பட்டுள்ளது.

  English summary
  Putham pudhu kalai vidiyadha anthology is of 5 short stories. It is sequence of 2020 release putham pudhu kalai movie. putham pudhu kalai vidiyadha speaks about how people emotionally affected of losing their lovable releatives.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X