twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்யாணம் பண்ணிட்டுதான் சேர்ந்து வாழணுமா என்ன... 'பியார் பிரேமா காதல்'! விமர்சனம்

    காதலர்கள் நிச்சயம் திருமணம் செய்துகொண்டு தான் சேர்ந்து வாழ வேண்டுமா என்ற கேள்வியை உறுத்தாமல் முன்வைக்கிறது 'பியார் பிரேமா காதல்' திரைப்படம்.

    |

    Recommended Video

    ஒரு மாடர்ன் லவ் ஸ்டோரி- பியார் பிரேமா காதல்- வீடியோ

    Rating:
    3.5/5
    Star Cast: ஹரிஷ் கல்யான், ரைசா வில்சன், ரேகா, யுவன் ஷங்கர் ராஜா
    Director: இளன்

    சென்னை: காதல் என்றால் என்ன என்பதை புதிய கோணத்தில் சொல்கிறது 'பியார் பிரேமா காதல்' திரைப்படம்.

    எது காதல்...

    சென்னையில் நாம் தினந்தோறும் பார்க்ககூடிய ஒரு சராசரி மிடிஸ் கிளாஸ் இளைஞன் ஹரிஷ் கல்யாண். அதே சென்னையில் நாம் அரிதாக பார்க்கும் மேல்தட்டு அல்ட்ரா மாடர்ன் தேவதை ரைசா வில்சன். வழக்கம் போலவே முதலில் ஹரிஷ் பின்பு ரைசா என இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திருமண பந்தத்தில் நம்பிக்கையில்லாத ரைசா, ஹரிஷை லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ நிர்பந்திக்கிறார். ஆனால் காதல், கல்யாணம், மனைவி, குழந்தை என வாழ்க்கையை நடத்தும் வெகுஜன மனப்பான்மையோடு உள்ள ஹரிஷுக்கு ரைசாவின் திட்டம் ஏற்புடையதாக இல்லை. இருவரும் லிவிங் டுகெதர் வாழ்வை வாழ்ந்தார்களா இல்லை திருமணம் செய்துகொண்டார்களா என்பது இளமை துள்ளும் பிற்பாதி.

    Pyaar prema Kaadhal review

    வழக்கமான காதல் கதை தான். ஆனால் அதை இளமை ததும்ப, புதுசாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளன். படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் கச்சிதம். யாரையும் வில்லனாகவோ, வில்லியாகவோ காட்டாமல், அனைவரையுமே எதார்த்தமாக காட்சிபடுத்தி இருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

    ரைசாவின் கதாபாத்திரம் இப்போது உள்ள நம்மூர் மாடர்ன் மங்கைகளின் அச்சுஅசல் வெளிப்பாடு. விவாதங்களையோ, கேள்விகளையோ, மெசேஜ் சொல்லவோ முற்படாமல் அழகான உணர்வுகளையும், பாசத்தையும் மட்டுமே சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் இயக்குனர் இளன். ஆனால் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் அந்த வீட்டில் லிமிட்டாக செய்ததை, இங்கு அன்லிமிட்டடாக செய்திருக்கிறார்கள். ஒரு மிடிஸ் கிளாஸ் பையனை அப்படியே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஹரிஷ் கல்யாண். காதல், குறும்பு, அம்மாவிடம் பாசம் என கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். போட்டி போட்டு ஓவர் டேக் செய்கிறார் ரைசா. இருவரும் பிக் பாஸ் மூலம் கிடைத்த மைலேஜை, சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    Pyaar prema Kaadhal review

    ஹரிஷின் அம்மாவாக ரேகா, ரைசாவின் அப்பாவாக ஆனந்த் பாபு. இருவரும் இரு துருவங்கள். ஒரு சாதாரண தாயாக தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏங்கி தவிக்கிறார் ரேகா. ஆனால் தன் மகளின் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு அனுமதி தந்து ஆனந்தப்படுகிறார் ஆனந்த்பாபு. மகளின் தடுமாற்றத்தை உணர்ந்து, அதை சரி செய்யும் இடம் அருமை.

    தயாரிப்பாளர் என்பதால் படத்தை முழுமையாக தாங்கிப் பிடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படத்தில் மொத்தம் 12 பாடல்கள். எல்லாமே இளமையாக இருக்கிறது. அதுவும் அந்த பியார் பிரேமா காதல் தீம் தியேட்டரில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் முணுமுணுத்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. பின்னணி இசையில் படத்தை காவியமாக மாற்றியிருக்கிறார் யுவன். செம ஃபீல் புரோ. மறுபடியும் அந்த தப்ப பண்ணலாமானு தோணுது.

    Pyaar prema Kaadhal review

    ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்யாவுக்கு பெரிய கைதட்டல் கொடுத்தே ஆக வேண்டும். நாம் தினமும் கடந்து போகும் தெருக்களை கூட அழகோவியமாக தீட்டியிருக்கிறார். அதேபோல் மணிக்குமரன் சங்கராவின் படத்தொகுப்பு அலுப்பை ஏற்படுத்தாமல் ப்ரெஷ்ஷான ஃபீலை தருகிறது.

    எல்லாம் சரிதான். ஆனால் அந்த லிவிங் டுகெதர் தான் நெருடல். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் என்பதை இன்னும் அட்வான்சாக காதலுக்கு முன்பே செக்ஸ் என சிந்தித்திருக்கிறார் இயக்குனர் இளம். இதெல்லாம் நம் கலாச்சார காலவர்களுக்கு கோபத்தை உண்டு செய்யாதா புரோ. அதுவும் ஒரு பெண் என்ன இவ்வளவு கேசுவலாகவா எல்லாவற்றையும் எடுத்துக்க முடியும். முன்பாதி, பின்பாதி எல்லாம் ஓ.கே., ஆனால் அந்த க்ளைமாக்ஸ் தான் செம சொதப்பல். எப்படி முடிப்பது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது திரைக்கதை.

    இன்றைய யுவன், யுவதிகளுக்கான அக்மார்க் லவ் படம் இந்த 'பியார் பிரேமா காதல்'.

    English summary
    Yuvan Shankar Raja musical, Ilan directorial Pyaar prema Kadhal is a complete love movie which has big boss fame Harish Kalyan and Raiza Wilson in the lead role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X