twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Radhe Shyam Review: பிரபாஸின் பிரம்மாண்ட காதல் கதை ராதே ஷ்யாம் திரைப்பட விமர்சனம்!

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ்

    இசை: ஜஸ்டின் பிரபாகரன்

    ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

    இயக்கம்: ராதா கிருஷ்ண குமார்

    ரேட்டிங்: 3/5

    சென்னை: கோடிகளை கொட்டி பிரம்மாண்ட செட்களை அமைத்து படமாக்குவதில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை அடித்துக் கொள்ள டோலிவுட்டிலும் ஒரு இயக்குநர் வந்திருக்கிறார், அவர் தான் ராதா கிருஷ்ண குமார்.

    Recommended Video

    Radhe Shyam Movie Audience | Prabhas | Pooja Hegde | Public Review

    மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிக்கு காட்சி பிரம்மாண்ட ஃபிரேம்களுடன் அப்படியே வால்பேப்பர் மெட்டீரியல் போல படம் உருவாக்கப்பட்டு இருப்பது கண்களுக்கு குளிர்ச்சியான விஷயம்.

    பாகுபலி, சாஹோ என ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த பிரபாஸ் தனது செல்லப் பெயருக்கு பொருத்தமாக டார்லிங்காகவே இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

    கைரேகை நிபுணரின் காதல் பலித்ததா? பூஜா ஹெக்டேவுக்கு அப்படி என்ன பிரச்சனை? என விரிவாக இங்கே பார்க்கலாம்.

    உடல்நிலை சரியாயிடுச்சு... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செஞ்ச வேலையை பாருங்க! உடல்நிலை சரியாயிடுச்சு... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செஞ்ச வேலையை பாருங்க!

    காதல் கதை

    காதல் கதை

    டைட்டானிக் போல நம்ம ஊரிலும் ஒரு பிரம்மாண்ட காதல் கதையை படமாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை தான் இயக்குநர் ராதா கிருஷ்ண குமாரை இந்த படத்தை உருவாக்க தூண்டியிருக்கும் என்றே என்ன தோன்றுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கைரேகை நிபுணர் விக்ரமாதித்யா ரோமில் டாக்டரான பிரேரானாவை பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார். ஆனால், 60 நாட்களுக்கு மேல் உயிரோடு அவர் இருக்க மாட்டார் என்பதை அறிந்த பிறகு அவர்கள் காதல் என்னவாகிறது? கடைசியில் கதை எப்படி முடிகிறது என்பது தான் இந்த பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ராதே ஷ்யாம் படத்தின் கதை.

    ஹேண்ட்ஸம் பிரபாஸ்

    ஹேண்ட்ஸம் பிரபாஸ்

    ஆணழகனாக இந்த படத்தில் காட்சிக்கு காட்சி தனது நடிப்பாலும் லுக்காலும் கவர்ந்திழுக்கிறார் பிரபாஸ். சில க்ளோஸ் அப் காட்சிகளில் மீசையும் தாடியும் இல்லாத பிரபாஸை பார்ப்பதற்கு சற்றே கஷ்டமாக இருந்தாலும், மனோஜ் பரமஹம்சா பல இடங்களில் அதனை அழகாக மேட்ச் செய்துள்ளார். பிரபாஸ் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லையா? என்பது அவரது ரசிகர்களுக்கே ஷாக் ஆகியிருக்கும். ஆனால், அதனை கடைசி கிளைமேக்ஸில் ஈடு செய்திருக்கிறார்.

    பேரழகி பூஜா

    பேரழகி பூஜா

    பெயருக்கு ஏற்றவாறே பேரழகியாக இந்த படத்தில் மின்னுகிறார் பூஜா ஹெக்டே. அவரது ஆடைகளை பார்த்தால், இளம் பெண்களுக்கு நிச்சயம் அதே போன்ற உடைகளை ஒருமுறையாவது உடுத்த வேண்டும் என ஆசை வந்துவிடும். மருத்துவரான அவருக்கு ஆயுள் ரேகை இல்லாதது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், படம் முழுக்க அழகு பதுமையாக வந்து செல்கிறார் பூஜா ஹெக்டே

    பெரிய பிளஸ்

    பெரிய பிளஸ்

    ராதே ஷ்யாம் படத்தின் பெரிய பிளஸ் அதன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் கலை இயக்குநர் ரவீந்தர் என இருவரை சொல்லலாம். பல நூறு கோடிகளை கொட்டி எடுத்திருக்கும் இந்த படத்திற்கு இவை இரண்டும் சிறப்பாக இல்லை என்றால், அதன் பிறகு பருத்தி மூடை குடோவுனிலே இருந்திருக்கலாம் என்கிற கதைதான். படத்தை டிக்கெட் எடுத்து வந்து பார்ப்பவர்களுக்கு ஒரு ஓவியப் படைப்பை பார்த்த திருப்தியாவது மிஞ்சுகிறது.

    பெரிய மைனஸ்

    பெரிய மைனஸ்

    காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் முக்கியமாக பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியே ஒர்க்கவுட் ஆகவில்லை. இருவரும் தனித்தனியே அழகாக நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் இடங்களில் ரசிகர்களால் அந்த காதலை ஃபீல் பண்ணவே முடியவில்லை. அதற்கு ஏற்றார்போல திரைக்கதை இரண்டாம் பாதியில் ரொம்பவே பொறுமையை சோதித்து விட்டது. இருவரும் எப்படியாவது ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்கிற ஆசையை ரசிகர்களுக்கு விதைக்காமல் விட்டது தான் ராதே ஷ்யாமின் பலவீனமாக மாறியுள்ளது. மற்றபடி மேக்கிங்கிற்காக படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்கலாம்!

    English summary
    Radhe Shyam movie Review is here. Prabhas and Pooja Hegde starrer romance story is a costly furniture but not suitable for long sit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X