Chandramukhi 2 Twitter Review: சாதித்ததா சந்திரமுகி 2? ரசிகர்கள் ஹேப்பியா?.. ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 இன்று உலகம் முழுவதும் வெளியானது.
சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, சோனு சூட், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்திலும் ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்களை பயன்படுத்தி பி. வாசு இயக்கியுள்ள படம் ரசிகர்களை ஹேப்பி ஆக்கியதா? இல்லையா? என்கிற ட்விட்டர் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
கங்கனா ரனாவத் கலக்கிட்டாங்க: ஹானஸ்ட்டா சொல்றேன் கோல்டு சினிமாவில் சந்திரமுகி 2 படத்தை இன்னைக்கு பார்த்தேன். மொத்த படமும் நல்லா இருக்கு.. அதிலும், இரண்டாம் பாதியில் வரும் கங்கனா ரனாவத் நம்மை சந்திரமுகி காலத்துக்கே கூட்டிக் கொண்டு சென்று கலக்கிட்டாங்க, அவங்களோட நடிப்புக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என சந்திரமுகியின் தீவிர ரசிகர் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டர்: கங்கனா ரனாவத்தின் டீம் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை சோஷியல் மீடியாவில் களமிறங்கி விட்டனர் போலத்தான் தெரிகிறது. பிளாக்பஸ்டர் திரைப்படம் என்றும் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் கண்களை உருட்டி மிரட்டும் காட்சிகள் ப்யூர் கூஸ்பம்ப்ஸ் என கொண்டாடி வருகின்றனர்.

கீரவாணி இசை சிறப்பு: கங்கனா ரனாவத்தின் பிரசன்ஸ் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றும் இரண்டாம் பாதியில் சந்திரமுகியின் ஆட்டம் தான் தாறுமாறாக உள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்கர் வென்ற கீரவாணியின் பிஜிஎம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

வடிவேலு காமெடி சூப்பர்: சந்திரமுகி படத்தின் ஹைலைட்டே வடிவேலு காமெடி தான். இரண்டாம் பாகத்திலும் வடிவேலு தனது சரவெடி காமெடிகளை கட்டவிழ்த்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடிப்பு, இடைவேளை ட்விஸ்ட் என அட்டகாசமாக முதல் பாதி படம் பட்டையை கிளப்புகிறது என நெட்டிசன்கள் சந்திரமுகி 2 படத்துக்கு தம்ப்ஸ் அப் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











