Animal Review: அட போங்கடா.. இப்படி பிளேடு போடுறீங்களே.. அனிமல் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் நடித்த அனிமல் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் (அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்) படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் சுமார் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் பெரிய ரயில் பயணம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது.
இந்த விஷயமே படத்துக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும், பல குறைகள் இருப்பதாக ரசிகர்கள் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர்.

இன்டர்வெல் தெறிக்குது: இந்திய சினிமாவே கண்டிராத மிகப்பெரிய ஆக்ஷன் பிளாக் காட்சி இடைவேளைக்கு முன்பான அரை மணி நேர காட்சியில் காட்டி சும்மா தெறிக்கவிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா என இந்த ரசிகர் படத்தை பாராட்டி உள்ளார். கைதி, விக்ரம், கேஜிஎஃப் 2, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை போலவே ஹீரோ தனியாளாக இந்த படத்திலும் பெரிய துப்பாக்கியை வைத்து எதிரிகளை சும்மா கொசு அடிப்பது போல சுட்டு வீழ்த்துகிறார்.
சொதப்பல் படம்: ஆனால், அந்த இடைவேளை காட்சியை தவிர படம் முழுக்க வேறு எதுவுமே இல்லை என்றும் ஸ்ட்ரிக்ட்லி ஆவரேஜ் படம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருகின்றனர். பெரும் பில்டப் கொடுக்கப்பட்ட அனிமல் படம் அவ்ளோ தான் பாஸ் என எண்ட் கார்டு போட பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
பரவாயில்லை: ரன்பீர் கபூர் தனது ஒட்டுமொத்த உசுரையும் கொடுத்து நடித்திருக்கிறார். பல இடங்களில் படம் அர்ஜுன் ரெட்டியை ரன்பீர் கபூர் வெர்ஷனில் பார்த்தது போலவே இருக்கிறது. அப்பா - மகன் கதையை வைத்துக் கொண்டு ஒரு குழந்தை முரடனாக எப்படி மாறுகிறான் என்கிற திரைக்கதையை அமைத்து சந்தீப் ரெட்டி வங்கா தேவையில்லாத பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளை புகுத்தி படத்தை ஸ்பாயில் செய்து விட்டதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
கரண் ஜோஹர் படத்தோட காப்பி: ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கு, கரண் ஜோஹரின் கபி குஷி கபி கம் படத்தின் அடல்ட் வெர்ஷன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











