RDX Film Review: OTT ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்... சூப்பர் ஹிட் அடித்த RDX திரை விமர்சனம் இதோ!

சென்னை: மலையாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியான RDX திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்த RDX திரைப்படம், தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஆக்‌ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள RDX படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

 RDX Film Review: Malayalam Super Hit Movie RDX Tamil Review

RDX படத்தின் தமிழ் விமர்சனம்: மலையாளத்தில் மல்டி ஸ்டார்ஸ் படங்கள் வருவது ரொம்பவே பழகிப் போன ஒன்று தான். ஆனால், அதில் ஒருசில படங்கள் மட்டுமே ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படியான ஒரு படமாக வெளியாகியுள்ளது RDX. கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுக்கு இடையே நடக்கும் ஒரு மோதல், பல வருடங்களுக்குப் பிறகும் பழிக்குப் பழி வாங்கும் படலமாக தொடர்கிறது. இந்த ஒருவரி கதையை வைத்துக்கொண்டு ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது RDX.

ராபர்ட், டோனி, சேவியர் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் ராபர்ட் (ஷேன் நிகம்), டோனி (ஆண்டனி வர்கீஸ்) இருவரும் அண்ணன் தம்பிகள். மூவருமே கராத்தே, பாக்ஸிங் என மார்ஷியல் ஆர்ட்ஸில் கை தேர்ந்தவர்கள். RDX கூட்டணி ஒன்றுசேர்ந்துவிட்டால் அங்கே அடிதடி ஆர்ப்பாட்டம் தான். காதல், கலாட்டா என ஜாலியாக சென்றுக் கொண்டிருக்கும் RDX கூட்டணி திடீரென பிரிய நேரிடுகிறது.

கல்லூரியில் ஏற்பட்ட மோதல், திருவிழா வரை வளர, அங்கே நடக்கும் சண்டை காரணமாக ராபர்ட் (ஷேன் நிகம்) ஊரை விட்டு வெளியூர் செல்கிறான். அதன்பின்னர் RDX கூட்டணி பல ஆண்டுகளாக ஒன்றுசேராமல் பிரிந்தே இருக்கிறது. மீண்டும் அவர்கள் இணைந்தார்களா, அதற்கான காரணம் என்ன, கல்லூரி காலத்தில் இருந்து துரத்தி வரும் பகை என்ன ஆனது, ஷேன் நிகம் - மஹிமா நம்பியாரின் காதல் என்னவாகிறது என்பது தான் RDX படத்தின் கதை.

காலங்காலமாக எல்லோரும் அவர்களது சொந்த ஊரிலேயே பார்த்துப் பழகிய ஒரு கதைதான். ஆனால், அதனை ஆர்ப்பாட்டமான திரைக்கதை, கலர்ஃபுல்லான விஷுவல், மிரட்டலான பிஜிஎம், அமர்க்களமான ஆக்‌ஷனுடன் விருந்து படைத்துள்ளது RDX. ஹீரோவுக்கான லீட் ரோலில் ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் என மூன்று பேர் நடித்துள்ளனர். மூவருக்குமே சரியான விதத்தில் காட்சிகளைக் கொடுத்து பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குநர்.

தனியாக ஹீரோயிசம் என்றில்லாமல், RDX கூட்டணி என மூவரையும் ஒரே புள்ளியில் இணைத்தது தான் இந்தப் படத்தின் பலமே. எமோஷனல் சீன்ஸ் முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை மூன்று பேருமே விட்டுக் கொடுக்காமல் இணைந்தே மிரட்டியுள்ளனர். ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸின் அப்பாவாக நடித்துள்ள லால், நீரஜ் மாதவின் அப்பா பாபு ஆண்டனி ஆகியோரும் கதையின் வெயிட்டேஜை தூக்கிக் கொடுத்துள்ளனர்.

 RDX Film Review: Malayalam Super Hit Movie RDX Tamil Review

இவர்கள் தவிர மஹிமா நம்பியார், மாலா பார்வதி, பைஜு, சுஜித் சங்கர் ஆகியோரும் ஸ்கோர் செய்துள்ளனர். முக்கியமாக வில்லனாக நடித்துள்ள விஷ்ணு அகஸ்தியா மிரட்டியுள்ளார். கதையை விட திரைக்கதையை அதிகம் நம்பியுள்ளார் இயக்குநர். இல்லையென்றால் மிகச் சாதாரணமான ஒரு படமாக மழையில் நனைந்த பட்டாசாக நமத்துப் போயிருக்கும் இந்த RDX. திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே மேக்கிங்கிலும் மிரட்டியுள்ளது RDX

90களில் இருந்து 2005ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தான் படத்தின் கதை பயணிக்கிறது. இதனால் 90ஸ் கிட்ஸ்கள் ரசிக்கும்படியான அதிகமான வின்டேஜ் டச் படம் முழுக்கத் தெரிகிறது. காஸ்ட்யூம், பைக், ஹேர் ஸ்டைல் என பல இடங்களிலும் பார்த்துப் பார்த்து செய்துள்ளனர். அதற்கேற்ப அலெக்ஸ் ஜே.புல்லிக்கல்லின் ஒளிப்பதிவும், சாம். சி.எஸ்-இன் பின்னணி இசையும் RDX படத்தை தூக்கிச் சுமக்கின்றன. இந்தப் படத்தில் இடம்பெற்ற "நீல நீலவே" பாடல் ரசிகர்களுக்கான எக்ஸ்ட்ரா ட்ரீட்.

படம் முழுக்க ஆக்‌ஷன் மோடில் இருப்பதால், எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. அதேநேரம் முரட்டுத்தனமான மூன்று ஹீரோக்கள் இருந்தும், சில ஆக்‌ஷன் காட்சிகள் வேகமும் ரியாலிட்டியும் இல்லாமல் நொண்டி அடிக்கின்றன. இப்படியாக சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், இரண்டரை மணிநேரம் போரடிக்காமல் ஜாலியான ஒரு படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறது RDX. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், RDX சேட்டன்மார்களின் அடிபொலி சினிமா என்பதில் சந்தேகமே இல்லை. RDX படத்தை தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X