Rebel Review: ரெபல் விமர்சனம்.. தமிழுக்கான படம் தலைப்பிலேயே தமிழ் இல்லை.. படம் எப்படி இருக்கு?

Rating:
2.5/5

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜு
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
நேரம்: 2 மணி நேரம் 21 நிமிடங்கள்
இயக்கம்: நிகேஷ

சென்னை: இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜு, ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் உருவாகி உள்ள ரெபல் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு தமிழில் வெளியான பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்த வாரம் சோலோ ரிலீஸாக வெளியாகி உள்ள ரெபல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறுமா என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு நடித்துள்ள படம் என்பதால் இளைஞர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rebel Review in Tamil  GV Prakash Kumar and Mamitha Baiju saves the movie

டார்லிங்காக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் ரெபல் படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற முயற்சித்துள்ள நிலையில், இந்த படம் அவருக்கு எந்தளவுக்கு கைகொடுத்திருக்கிறது என்பது தொடர்பான விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

டைட்டில் சொதப்பல்: ரெபல் என்பது புரட்சியாளனை குறிக்கும் ஆங்கிலச் சொல். இந்த படமே தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் இடையேயான போராட்டம் தான். தமிழர்களுக்கு மட்டுமே ஆட்சி செய்ய அதிகாரம் வழங்குவோம் என ஜி.வி. பிரகாஷ் முழக்கம் இடுகிறார். ஆனால், குறைந்தபட்சம் படத்துக்கு தமிழ் தலைப்பு வைப்போம் என இயக்குநரிடம் ஜி.வி. பிரகாஷ் கேட்டு இருக்கலாம். விஜய், அஜித் படங்கள் எல்லாம் ஆங்கில தலைப்புகளில் வருவதால் இந்த தலைப்பை ஓகே சொல்லி விட்டாரா ஜி.வி. பிரகாஷ் என்கிற கேள்வி விமர்சனமாகவே எழுகிறது.

ரெபல் கதை: மூணாறில் இருந்து கேரளாவுக்கு படிக்க ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் செல்கின்றனர். அங்கே ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை தமிழர்களை இழிவாக நடத்துகின்றனர். ஆனால், மலையாள ஹீரோயினான மமிதா பைஜுவுக்கும் ஹீரோவுக்கும் காதல் டிராக் ஓடுகிறது. இடைவேளைக்குப் பிறகு தங்களை மட்டம் தட்டும் மலையாளிகளை எதிர்த்து ஹீரோவும் அவரது நண்பர்களும் திருப்பி பதிலடி கொடுத்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த கதை. 80களில் நடைபெற்ற நிஜமான சம்பவத்தை அடிப்படையில் கொண்டு தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு எப்படி?: ஜி.வி. பிரகாஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். அதில், பல படங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இந்த படத்திலும் அவர் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கி உள்ள நிலையில், தன்னுடைய கதாபாத்திரத்தை நன்றாக புரிந்துக் கொண்டு நடித்து ஸ்கோர் செய்கிறார். மேலும், தன்னுடைய படம் என்பதால் தரமான பின்னணி இசை எல்லாம் போட்டு படத்துக்கு வெயிட்டேஜ் கொடுத்திருக்கிறார். பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு பாடல்களில் அழகாக வந்து போகிறார். ஆனால், ஆரம்பத்தில் அவருக்கு கதையில் இருந்த முக்கியத்துவம் அதன் பின்னர் காணாமல் போகிறது. 96 படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதித்யா பாஸ்கருக்கும் இந்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஒரு கட்டத்துக்கு மேல் சொதப்பி விடுகிறது.

Rebel Review in Tamil  GV Prakash Kumar and Mamitha Baiju saves the movie

பிளஸ்: நடிகர்கள் தேர்வு படத்துக்கு சரியான பலம் தான். அதே போல பீரியட் படம் என்பதை புரிந்துக் கொண்டு அருண் கிருஷ்ணா சிறப்பான உழைப்பை போட்டுள்ளார். கருணாஸ் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. உண்மை கதை என்பதால் அதன் வெயிட்டேஜும் படத்துக்கு பிளஸ் ஆகவே அமைகிறது.

மைனஸ்: முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு பழிவாங்க ரெபலாக ஜி.வி. பிரகாஷ் மாறிய பின்னர் காணாமல் போவது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறுகிறது. மேலும், உண்மையில் நடந்த கதையாக இருந்தாலும் அந்த கதை ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரும் கதையாக உள்ளதா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X