For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'Recce' web series Review..நீங்கள் கிரைம் பட பிரியரா?..அப்ப இந்த வெப் சீரிஸ் நிச்சயம் உங்களை கவரும்

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள்: ஸ்ரீகாந்த், ஆடுகளம் நரேன், ராஜஸ்ரீ நாயர், தோட்டப்பள்ளி மது, எஸ்தர் நோரோன்ஹா, சப்பேட்டா காந்தி
  இசை: ஸ்ரீராம் மட்டூரி
  கேமரா: ராம்.கே.மகேஷ்
  இயக்கம்: பொலூரு கிருஷ்ணா

  சென்னை: வெப்சீரிஸ்கள் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அதிலும் பெரும்பாலும் க்ரைம் கதைகளை மையப்படுத்தி எடுக்கப்படுவது சிறப்பு

  அப்படி வெளியான ஒரு கிரைம் தொடர்தான் ரெக்க எனும் தொடர். இது முழுக்க முழுக்க அரசியல் கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

  நடிகர் ஸ்ரீகாந்த் எஸ்.ஐ.ஆக நடித்துள்ள இப்படம் செல்போன்கள் இல்லாத 92 காலக்கட்டத்தில் நடந்ததாக எடுக்கப்பட்டுள்ளது.

  காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு கடைசி தங்கச்சி பிறந்தது.. ஆர்ஜே பாலாஜி சொன்ன குடும்ப ஸ்டோரி! காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு கடைசி தங்கச்சி பிறந்தது.. ஆர்ஜே பாலாஜி சொன்ன குடும்ப ஸ்டோரி!

  1992 காலக்கட்டத்து அரசியல் கொலைக்களம்

  1992 காலக்கட்டத்து அரசியல் கொலைக்களம்

  ரெக்கே ஆந்திர மாநிலம் ராயல சீமாவில் 1992 ஆ ஆண்டு காலக்கட்டத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. ராயல சீமா தாடிபத்ரியின் தலைவர் வரதராஜுலுவை (ஆடுகளம் நரேன்) யாரோ கொலை செய்கிறார்கள், வழக்கைத் தீர்ப்பதற்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் புதிய எஸ்ஐ லெனின் (ஸ்ரீராம்) நியமிக்கப்படுகிறார். அவர் தடயங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும்போதே வரதராஜுலுவின் மகன் சலபதியும் கொல்லப்படுகிறார்.

  இதுதான் கதை

  இதுதான் கதை

  எஸ்.ஐ. லெனின் (ஸ்ரீகாந்த்) தனது திறமையான விசாரணை மூலம் அனைத்து புள்ளிகளையும் இணைத்து வெற்றிகரமாக குற்றவாளிகளை பிடிப்பதே கதை. கொடூரமான கொலைக்குப் பின்னால் உள்ள சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் கண்டுபிடிக்கிறார். தாடிபத்ரி தலைவர் வரதராஜுலுவை கொன்றது யார்? லெனின் எப்படி வழக்கைத் தீர்த்தார்? பெரிய தலைவரின் கொலைக்கு காரணம் என்ன? என்பதை சுவாரஸ்யமான நகர்தல் மூலம் அழகாக காட்டியுள்ளனர்.

  சீட்டு நுனியில் அமரவைக்கும் கதை

  சீட்டு நுனியில் அமரவைக்கும் கதை

  க்ரைம் த்ரில்லர்களை இயக்குநர் சிறப்பான முறையில் சொல்லும் போது அவை பார்ப்போரை சீட்டு நுனியில் அமரவைக்கும். Recce வைப் பொருத்தவரை, இயக்குனர் கதையை நன்றாகக் கையாள்கிறார். ஆனால் கதையில் கொடும் வன்முறை எதுவும் இல்லை, சாதாரணமாக நகரும் திரைக்கதை ஒரு கூடுதல் அம்சமாகும். இயக்குநர் தொடரை நகர்த்தும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. ஒரு எபிசோடு முடிந்தவுடன் அடுத்த எபிசோடுக்கு ஆர்வத்துடன் செல்ல வைக்கிறது.

  அசத்தும் ஸ்கெட்ச் பரதேசி கேரக்டர்

  அசத்தும் ஸ்கெட்ச் பரதேசி கேரக்டர்

  பரதேசி எனும் கேரக்டர் தான் படத்தின் முக்கியமான கேரக்டர் ஆகும். இந்த கேரக்டரில் நடிக்கும் சம்மேட்டா காந்தி இயல்பாக பரதேசியாகவே வாழ்ந்துள்ளார். ஸ்கெட்ச் போட்டு கொலை செய்யும் நபராக பிரபலமடைந்துள்ள அவர் பணத்துக்காக தனது கடைசி ஸ்கெட்சாக தாடிபத்ரி நகர தலைவர் வரதராஜுலுவை கொலை செய்ய திட்டம் போடுவதும், தனது கூட்டாளிகளை அதற்கு பயன்படுத்துவதையும், கொலைச் செய்ய ஏவிய நபரையே அவர் கண்டுபிடிப்பதும் கதையின் மிகப்பெரிய ட்விஸ்ட்.

  யார் கொலையாளி?

  யார் கொலையாளி?

  தந்தையின் தவறான நடத்தை, ஆஃபீஸ் கிளர்க்கின் மனைவியுடன் தந்தை வைத்துள்ள கள்ள தொடர்பை கண்டு அமைதியாக இருக்கும் மகன், அம்மா, மனைவிக்கு தெரிந்தும் அமைதி காக்கச் சொல்லும் மகனாக வரும் கேரக்டர் அழகாக செய்துள்ளார். ஊர்தலைவருடன் தொடர்பில் உள்ள மனைவியின் தவறான நடத்தை பற்றி தெரியாமலேயே தனது ரூமில் வைத்துவிட்டுச் சென்ற சிகரெட் பெட்டியை கொண்டு சென்று தரும் அப்பாவி கிளர்க் கணவன். தேர்தலில் தோற்று பழிவாங்க துடிக்கும் எதிர்க்கட்சி தலைவர் என கதை நகர்கிறது.

  கூலிப்படையைச் சுற்றியே கதை

  கூலிப்படையைச் சுற்றியே கதை

  ஊர் தலைவரை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்துகிறார் எதிர்க்கட்சித்தலைவருடன் உள்ள கையாள். அவர் அமர்த்தும் கூலிப்படை ஸ்கெட்ச் தலைவன் தான் பரதேசி. பரதேசியுடன் வரும் மூன்று பேர் ஒருவர் கழுத்தறுப்பதில் கில்லாடி, ஒருவர் பாம் வீசுவார், ஒருவர் வாகனம் ஓட்டுவதில் கில்லாடி. அனைவரும் சேர்ந்து திட்டம் போட்டு கொலையை செய்ய கொலை செய்தவர்களை தேடுகிறது போலீஸ். நேர்மையான திறமையான எஸ்.ஐ.ஸ்ரீகாந்த் புலன் விசாரணை நடத்துகிறார்.

  ட்விஸ்டுகள் சிறப்பான ஒன்று

  ட்விஸ்டுகள் சிறப்பான ஒன்று

  இடையில் தலைவரின் மகனும் கொல்லப்பட அரசியல் அழுத்தம் அதிகரிக்கிறது. எஸ்.பியிட எம்.எல்.ஏ சீறுகிறார். கடைசியில் குற்றங்களை வரிசையாக சாட்சியங்கள் மூலம் தெளிவாக கண்டுபிடிக்கிறார் எஸ்.ஐ.ஸ்ரீகாந்த். இது மற்றவர்களை மட்டுமல்ல படம் பார்க்கும் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மிக அழகாக யாரும் சந்தேகிக்க முடியாத ட்விஸ்டுகளை படத்தில் வைத்துள்ளார் இயக்குநர்.

  ப்ளஸ்

  ப்ளஸ்

  பரதேசியாக நடிக்கும் சம்மேட்டா காந்தி, குற்றத்திற்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதில் உற்சாகமாக இருக்கும் புதிய எஸ்ஐயாக ஸ்ரீகாந்த், ஆடுகளம் நரேன், ராஜஸ்ரீ நாயர், தோட்டப்பள்ளி மது, எஸ்தர் நோரோன்ஹா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்துள்ளனர். கேமரா, ஆர்ட் டைரக்‌ஷன் அந்த காலம் போல் காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட விதம் சிறப்பான ஒன்று. மொத்தம் 7 எபிசோடு ஒவ்வொரு எபிசோடும் அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்கத்தூண்டுகிறது.

  மைனஸ்

  மைனஸ்

  7 எபிசோடுகளை 5 ஆக எடுத்திருக்கலாம். மேலும் 2 எபிசோடுகளுக்காக தொடரை நீட்டிக்க இயக்குனர் வேண்டுமென்றே கதையை லேசாக இழுப்பது போன்ற நினைப்பு பார்க்கும் போது சில இடங்களில் தெரிகிறது. கடைசி இரண்டு எபிசோடுகள் இழுவையாக உள்ளது, இதனால் பார்வையாளர்கள் சற்று சலிப்படைய வாய்ப்புண்டு. ஆனால் மொத்தத்தில் நல்ல கிரைம் தொடர் இது.

  English summary
  'Recce' the Crime web series, the director deals with the story very well , The way he runs the series is so interesting.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X