பொங்கலிலும் ஸ்கோர் செய்த சேட்டன்கள்.. ரெக்கசித்ரம் படத்தை பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட 7 படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இது மட்டும் இல்லாமல் தெலுங்கு படமும் மலையாளப்படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் தமிழில் மட்டும் பொங்கலை முன்னிட்டு மொத்தம் மூன்று தேதிகளில் படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் ஏற்கனவே 10ஆம் தேதி வணங்கான் மற்றும் மெட்ராஸ்காரன் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அதேபோல் நேரடித் தெலுங்கு படமாக உருவாகி, அதன் பின்னர், தமிழிலும் டப் செய்யப்பட்டு ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், மலையாளத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்துள்ள ரெக்கசித்ரம் படமும் வெளியாகியுள்ளது. இதில் ரெக்கசித்ரம் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெக்க சித்திரம். இந்தப் படத்தின் கதையை, ஜான் மந்திரிக்கல் எழுதியுள்ளார்.படத்தில் ஆசிப் அலி, சித்திக், மனோஜ் கே ஜெயன், அனஸ்வர ராஜன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் நேற்று முன்தினம் அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் படம் குறித்து, ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், “ படத்தின் தொடக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டு காட்டிற்குள் செல்கின்றார்கள். அதில் ஒரு சிறுவன், நேற்று நமது ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பில் உனது அப்பா நடித்தார் எனக் கூறுகின்றான். அதற்கு மற்றொரு சிறுவன் எனக்குத் தெரியாமல் எனது அப்பா எப்போது சினிமாவில் நடித்தார் எனக் கேட்கின்றார். அதன் பின்னர், நடிகர் சித்திக்கை காட்டுகின்றார்கள். அவர் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு உள்ளார். தனது காரில் ஒரு வனப்பகுதிக்குச் செல்லும் சித்திக், அங்கு சென்று தனது செல்போன் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு, இந்த இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஒரு பெண்ணை புதைத்தோம். அந்த வேதனை என்னுள் இருந்து கொண்டே உள்ளது. அந்த இடத்திற்குத்தான் நான் இப்போது வந்துள்ளேன் என, நடந்த அனைத்தையும் கூறிவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றார்.
கதை: இப்போது இந்த தற்கொலை, அவரது செல்போனில் இருக்கும் வீடியோவை வைத்து இந்த வழக்கை விசாரிக்கின்றார் காவல் அதிகாரியாக வரும் ஆசிஃப் அலி. எந்த விதமான துப்புமே இல்லாமல் இந்த வழக்கை எப்படி விசாரித்து முடிக்கின்றார்கள் என்பதுதான் மீதிக்கதை. காவல்துறையிடம் ஒரு குற்றவாளி கொடுத்த மரண வாக்குமூலம் மட்டுமே உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை விசாரிக்கின்றார்கள்.
திரைக்கதை: 1985இல் நடைபெற்ற கொலை வழக்கை இப்போது விசாரிக்கின்றார்கள். யாரைக் கொலை செய்தார்கள் எதற்காக கொலை செய்தார்கள் எனபது குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கின்றார்கள். தோண்டத் தோண்ட ஒவ்வொரு உண்மையாக இந்த வழக்கு விசாரணையில் வெளியே வருகின்றது. படத்தின் கதையை விட்டு எங்கேயும் விலகாமல், ஒரே நேர்கோட்டில் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார்கள். ஆனால், இந்தப் படத்தில் பெரியதாக ட்ரன், டிவிஸ்ட் அப்படி எதுவும் இல்லை. படம் ஸ்லோவாகவே நகர்கின்றது. படம் ஸ்லோவாகத்தான் இருக்கின்றதே தவிர சலிப்பை ஏற்படுத்தவில்லை.
சலிப்பு இல்லை: படம் சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்க முக்கிய காரணம், படத்தின் கதையை 1985இல் வெளியான படத்திற்குள் கொண்டு செல்கின்றார்கள். அதாவது அப்போது நடைபெற்ற மம்முட்டி படத்தின் படப்பிடிப்பின்போதுதான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக கதையை நகர்த்திக் கொண்டுபோனதால் படம் பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. படத்தில் இருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை என்பதால், குற்றவாளி, சாட்சி என அனைவருக்கும் வயதாகி இருக்கும், உருவமாற்றம் ஏற்பட்டிருக்கும், அது இந்தப் படத்தின் கதை நகர்வுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது. படத்தினை இன்னும் ட்ரன் அண்ட் டிவிஸ்ட் வைத்திருந்தால் படம் இன்னும் சூப்பரான படமாக வந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











