twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Rendagam Review: அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போபன் மிரட்டும் கேங்ஸ்டர் படம்.. ரெண்டகம் விமர்சனம்!

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போபன், ஈஷா ரெப்பா
    இசை: ஏ.எச். காசிஃப்
    இயக்கம்: ஃபெலினி

    சென்னை: பக்காவான மேக்கிங் ஸ்டைலில் உருவாகி உள்ள கேங்ஸ்டர் படம் தான் இந்த ரெண்டகம்.

    மலையாளத்தில் 'ஒட்டு' என்கிற டைட்டிலில் கடந்த வாரம் வெளியான இந்த படம் தமிழில் ரெண்டகம் என்கிற டைட்டிலில் செப்டம்பர் 23ம் தேதி வெளியாகிறது.

    அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போபன், ஈஷா ரெப்பா மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள ரெண்டகம் மிரட்டியதா? இல்லை உருட்டியதா என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

    அரவிந்த்சாமி லீட் ரோலில் நடிக்கும் ரெண்டகம்…படக்குழு வெளியிட்ட சுவாரசியத் தகவல் !அரவிந்த்சாமி லீட் ரோலில் நடிக்கும் ரெண்டகம்…படக்குழு வெளியிட்ட சுவாரசியத் தகவல் !

    என்ன கதை

    என்ன கதை

    பழைய விஷயங்களை மறந்த பில்லாவாக வருகிறார் டேவிட் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி. மும்பையில் (மறுபடியும்) டானாக இருந்த அவர் தான் டான் என்பதே தெரியாமல் தியேட்டரில் பாப்கார்ன் விற்பவராக இருக்க, அவருக்கு பழசை எல்லாம் நினைவூட்டும் பணியை மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனுக்கு வழங்கப்படுகிறது. அரவிந்த் சாமிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பியதா? குஞ்சக்கோ போபனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என்பதை ட்விஸ்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஃபெலினி.

    மேக்கிங் மிரட்டுது

    மேக்கிங் மிரட்டுது

    ஹாலிவுட் ஸ்டைலில் செம ஸ்டைலான கேங்ஸ்டர் படமாகவே இந்த ரெண்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேங்ஸ்டர் படமாக வருகிறதே என்கிற யோசனையும் எழத்தான் செய்கிறது. அரவிந்த் சாமிக்கு பழைய நினைவுகளை கொண்டு வர போராடும் குஞ்சக்கோ போபன் முதல் பாதியில் அசத்தினாலும், இரண்டாம் பாதியில் அவருக்கு கொடுக்கப்படும் அந்த பில்டப் எல்லாம் சுத்தமாக ஒட்டவே இல்லை.

    செம ட்விஸ்ட்

    செம ட்விஸ்ட்

    வெறுமனே கேங்ஸ்டர் படமாக மட்டும் எடுக்காமல் செம ட்விஸ்ட் ஒன்று வைத்து த்ரில்லர் படமாக இயக்குநர் மாற்றியது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால், அந்த ட்விஸ்ட்டும் ஏகப்பட்ட ரசிகர்களால் எளிதில் கணிக்க முடிந்த ஒன்றாக இருந்து விட்டது தான் படத்திற்கு நெகட்டிவ் ஆக மாறி விடுமோ என எண்ணத் தோன்றுகிறது.

    பிளஸ்

    பிளஸ்

    தரமான மேக்கிங்கிற்காக ஒளிப்பதிவாளர் கெளதம் ஷங்கரின் உழைப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இசையமைப்பாளர் ஏ.எச். காசிப்பின் பின்னணி இசையும் படத்தை நகர்த்த உதவுகிறது. ஜட்டியோடு வரும் கேங்ஸ்டர் ஜாக்கி ஷெராஃப் கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தன்னை உயிருக்கு உயிராக காதலித்த ஈஷா ரெப்பாவை நாயகன் போட்டுத் தள்ளும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

    மைனஸ்

    மைனஸ்

    மேக்கிங்கில் மெனக்கெட்ட அளவுக்கு இயக்குநர் ஃபெலினி திரைக்கதையில் இன்னம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் வேறலெவலில் வந்திருக்கும். சித்தார்த் அபிமன்யூவாக ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கி விட்ட அரவிந்த் சாமி மீண்டும் அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தை செய்திருந்தாலும் டேவிட் கதாபாத்திரம் அந்த அளவுக்கு ஈர்க்காதது மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது.

    English summary
    Rendagam Movie Review in Tamil (ரெண்டகம் விமர்சனம்): Aravind Swamy, Kunchako Bopan and Eesha Rebba starrer gangster movie Rendagam great in his making style and visual appearance but, struggle in screenplay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X