Retro Positive Review: கங்குவா கூட கம்பேரே பண்ணாதீங்க.. ரெட்ரோ படத்துல இவ்ளோ பாசிட்டிவ் இருக்கு!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வெளியான கங்குவா படத்தில் மாடர்ன் சூர்யா போர்ஷன் கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் கனெக்ட்டே ஆகவில்லை. அதே போல பீரியட் போர்ஷனிலும் சூர்யாவை கத்த விட்டும் டிஎஸ்பியை அதிக சத்தத்துடன் இசைக்க வைத்தும் சிவா செஞ்சிவிட்டார்.

ஆனால், அது போல எந்தவொரு தவறையும் கார்த்திக் சுப்புராஜ் செய்யாமல் தனது ஸ்டைலில் ஒரு சூர்யா படத்தையே கொடுத்திருக்கிறார். கடைசி வரை தி ஒன்னாக சூர்யா படத்தை தாங்கி கொண்டு செல்லும் விதம் ரொம்பவே சூப்பர்.

Retro Positive Review  Suriya single handedly holds the movie and entertains his fans

சந்தோஷ் நாராயணன் இசையில் ஆரம்பத்தில் வரும் கனிமா பாடல் முதல் கடைசியாக வரும் தி ஒன் பாடல் வரை சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள பழைய பாடல் ஒன்றும் அதன் காட்சிகளும் தியேட்டரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

செனோரீட்டா ஐ லவ் யூ: இளையராஜா பாடல்கள் சமீப காலமாக வரும் பல படங்களில் அதிகளவில் இடம்பெற்று வருகிறது. அந்த பாடல்களுக்கு உரிய அனுமதியை தயாரிப்பு தரப்பிடம் வாங்கி விட்டோம் என படக்குழு சொன்னாலும், தன்னிடம் அனுமதி பெறவில்லை என இளையராஜா தரப்பு வழக்கு தொடுத்து வருவதை காண முடிகிறது. குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து இந்த படத்தில் ஜானி படத்தில் இடம்பெற்ற "செனோரீட்டா ஐ லவ் யூ" பாடலை கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளார். மேலும், பழைய பாடல்களான "ஏன் பிறந்தாய் மகனே", "டாடி டாடி ஓ மை டாடி" உள்ளிட்ட பாடல்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. செனோரீட்டா போல சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சென்யோரீட்டா பாடலும் இடம்பெற்ற கனெக்‌ஷனும் ரொம்பவே உள்ளது. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே செனோரீட்டா பாடலுக்கு ஆடும் விதம் தியேட்டரே தெறிக்கிறது.

Retro Positive Review  Suriya single handedly holds the movie and entertains his fans

சிங்கிள் ஷாட் சீன்: சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கனிமா பாடல் பட்டித் தொட்டி எங்கும் பலரையும் ரீல்ஸ் ஆட வைத்தது. இந்நிலையில், சூர்யாவின் திருமணத்தில் பன்னீர் தெளிக்கும் லாஃபிங் புத்தாவில் தொடங்கும் சிங்கிள் ஷாட் கனிமா பாடலை தொடர்ந்து சூர்யா மண்டபத்துக்கு மேல் சென்று தனது வளர்ப்பு தந்தையுடன் வாக்குவாதம் செய்வது, மறுபடியும் வந்து பூஜா ஹெக்டேவுடன் ஆடுவது, மீண்டும் அப்பா அழைக்க கீழே உணவு உண்ணும் இடத்தில் நடைபெறும் சண்டை என ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கம்போஸ் பண்ண காட்சிகளும் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் கொல மாஸ். இந்த ஒரு சீனுக்காகவே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். கொடுத்த காசுக்கு வொர்த்தாக இருக்கும்.

சூர்யாவின் சிரிப்பு: அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர் சூர்யா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆரம்பத்தில் இருந்து சூர்யாவுக்கு சிரிக்கவே வராது என்கிற விஷயத்தையும் அதற்கு பின்னால் ஒரு பெரிய வலி நிறைந்த ஃபிளாஷ்பேக்கையும் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கிய விதம் சூப்பர். இடைவேளைக்கு முன்னதாக சூர்யா லேசாக சிரிக்கும் இடமும், கண்ணாடியை பார்த்து சிரிக்கும் சீன்கள் எல்லாம் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் தான்.

இரும்புக் கை சூர்யா: லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி எனும் படத்தை பண்ண வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் அதை பக்காவாக செய்து முடித்துவிட்டார். ஜோஜு ஜார்ஜின் இரும்புக் கை என சூர்யா அழைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறு மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக் கொண்டு அவர் கைகளை சுழற்றி சுழற்றி அடிக்கும் காட்சிகளும் ஒரே ஆளாக அந்த கல்ட் இடத்தில் 30 பேரை புரட்டி எடுக்கும் சண்டைக் காட்சிகள் எல்லாம் வெறித்தனம். இரண்டாம் பாதியில் கதையின் ரூட் மாறுவதும், படத்தின் நீளம் மட்டுமே குறையாக உள்ள நிலையில், அதை கார்த்திக் சுப்புராஜ் கொஞ்சம் சரி செய்திருந்தாலும் செம பிளாக்பஸ்டர் படமாகவே ரெட்ரோ வெளியாகி இருக்கும். இந்த படத்தை கண்டிப்பாக விமர்சனங்களை கடந்து சூர்யா ரசிகர்கள் கொண்டாடினால் நிச்சயம் அஜித் குமாரின் குட் பேட் அக்லி போல வசூல் வேட்டையாடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X