Retta Thala X Review: அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ தெறிக்க விட்டதா? திணறியதா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: மான் கராத்தே, கெத்து படங்களை இயக்கிய இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் அஜித்துக்காக ஏ.ஆர். முருகதாஸ் வைத்திருந்த 'ரெட்ட தல' டைட்டிலை வாங்கி அருண் விஜய்க்காக ஒரு அட்டகாசமான படத்தை கொடுத்துள்ளார் என படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் அருண் விஜய் மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார்.

Retta Thala X Review in Tamil  Arun Vijay Rocking in Double Action again

ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் பார்வையற்ற இளம் பெண்கள் குளிப்பதை பார்த்த காமக்கொடூரர்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அருண் விஜய் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரெட்ட தல படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.

டபுள் ஆக்‌ஷனில் கெத்து: அருண் விஜய்க்கு டபுள் ஆக்‌ஷன் என்றாலே அல்வா சாப்பிடுவது போலத்தான் என படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடம் படத்திலும் டபுள் ஆக்‌ஷனில் அட்டகாசமாக நடித்து அசத்தியிருந்தார். அந்த படத்துக்குப் பிறகு ரெட்ட தல படத்தில் டபுள் ஆக்‌ஷனில் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

ரசிகர்களுடன் படம் பார்த்த அருண் விஜய்: சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அருண் விஜய் படம் பார்த்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. படத்தின் ஹீரோயினான சித்தி இதனானியும் தனது படத்துக்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸை பார்த்து ரொம்பவே ஹேப்பியாகி உள்ளார்.

சித்தி இத்னானி ஷைன் ஆகியிருக்காரு: ஒன் மேன் ஷோவாக அருண் விஜய் ரெட்ட தல படத்தை சூப்பர் ஹிட்டாக மாற்றியுள்ளார். சித்தி இத்னானியும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நைட்த்து ஷைன் ஆகியுள்ளார் என இன்னொரு ரசிகரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ஹேட்ஸ் ஆஃப் டு தி டைரக்டர்: இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் இத்தனை ஆண்டுகள் தனது கதையை செதுக்கி இப்படியொரு அட்டகாசமான படத்தை கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார். மால்பே உபேந்திரா கதாபாத்திரத்திலும் காளி ரோலிலும் அருண் விஜய் டபுள் ஆக்‌ஷனில் தாண்டவம் ஆடியுள்ளார். ஆண்ட்ரே கதாபாத்திரத்தில் சித்தி இத்னானி நடிப்பு சிறப்பு. சாம் சிஎஸ் பிஜிஎம் கிங், ஆண்டனி எடிட்டிங் தாறுமாறாக உள்ளது. ஸ்டன்ட் மாஸ்டருக்கு பாராட்டுக்கள் குவியும் என இந்த ரசிகர் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X