Mathagam review: கடைசி வரை புலி வரவே இல்லை.. ஏமாற்றம் தந்த மத்தகம் வெப் தொடர் விமர்சனம் இதோ!
மத்தகம் வெப் தொடர்
இயக்குனர் :பிரசாத் முருகேசன்
நடிகர்கள் : அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல்,
ஓடிடி:டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்
சென்னை: இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கி உள்ள மத்தகம் இணையத் தொடர் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது.
இதில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல்,கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் என பலர் நடித்துள்ளனர்.

மத்தகம்: மத்தகம் என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த இணையத் தொடர் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது. தற்போது 5 எபிசோடுகள் கொண்ட இத்தொடர், முதல் பாகமாக வெளியாகி உள்ளது. இதில், அதர்வா உயர் போலீஸ் அதிகாரியாக அஷ்வாத் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மணிகண்டன் படாளம் சேகர் என்கிற ரௌடி கேரக்டரில் நடித்துள்ளார்.
முதல் எபிசோடு: சென்னையில் அதர்வா தலைமையில் நள்ளிரவில் வாகனை சோதனை நடக்கிறது. இந்த சோதனையில் நீண்டநாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த மிகப்பெரிய குற்றவாளி படாளம் சேகர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அவன் உயிரோடு இருப்பது தெரிய வருகிறது.
மத்தகம் தொடரின் கதை: இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த படாளம் சேகர், சென்னையில் உள்ள மொத்த ரௌடிகளையும் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்து, மிகப்பெரிய சம்பவத்தை செய்ய திட்டமிடுகிறான். போலீசாருக்கு இந்த விஷயம் தெரிய வர, கழுகு போல காத்திருந்து மொத்த ரௌடிகளையும் ஒரே நேரத்தில் தூக்க பிளான் போடுகிறார்கள். படாளம் சேகரின் திட்டம் என்ன.. அனைத்து ரௌடிகளையும் அதர்வா பிடித்தாரா... என்பது தான் மத்தகம் தொடரின் கதை.

கோட்டைவிட்ட இயக்குநர்: மத்தகம் வெப் தொடரின் முதல் எபிசோடு மிகவும் விறுவிறுப்பாக சென்றது, அதே சுவாரசியத்தோடு கதை நகரும் என்று பார்த்தால், மற்ற நான்கு எபிசோடிலும், புது புது ரௌடிகளை மட்டுமே அறிமுகப்படுத்துகிறார்களே தவிர, கதை தொடங்கிய இடத்தைவிட்டு கொஞ்சம் கூட நகரவே இல்லை. அதர்வா, மணிகண்டன், கௌதம் மேனன், டிடி என பல பிரபலங்கள் இருந்தும் இயக்குநர் திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டுள்ளார்.
ஏமாற்றம் தந்த கதை: ரௌடிசத்தை ஒழிக்கும் கதையை எடுக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு, அதர்வாவின் மனைவியாக வரும் நிகிலா விமல் கணவரின் அன்புக்கு ஏங்குவதும், மணிகண்டன் மற்றும் டிடியின் காதல் என கதைக்கு சம்பந்தமே இல்லாமல் டிராக் மாறி கதை செல்கிறது. மணிகண்டனை புலி போல பிம்பப்படுத்திவிட்டு கடைசி வரை அந்த புலியை கண்ணில் காட்டவே இல்லை. இரண்டாம் பாகத்திலாவது புலி வருமா என்பதை பொருத்து இருக்கு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











