Lust Stories 2: கல்யாணத்துக்கு முன்னாடி..டெஸ்ட் டிரைவ் போலாமா?என்ன கன்றாவிக்கதை!

Rating:
3.0/5

Lust Stories 2 : 'Made For Each Other'

இயக்குனர் : பால்கி

நடிப்பு : நீனா குப்தா, மிருணாள் தாகூர், அங்கத் பேடி

OTT : நெட்பிளிக்ஸ்

சென்னை: தமன்னா, மிருணாள் தாகூர், கஜோல் ஆகியோர் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆந்தாலாஜி தொடராக வெளியாகியுள்ளது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2'.

கடந்த 2018 ஆம் ஆண்டு லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

Reviews of Netflixs Lust Stories 2 show great buzz around  Mrunal Thakurs steamy scenes with Angad Bedi

ராதிகா ஆப்தே, க்யாரா அத்வானி, புமி பட்னேகர், மணிஷா கொய்ராலா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, கஜோல் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர். பால்கி, கொங்கோனா சென் ஆகியோர் இயக்கத்தில் நான்கு வித்தியாசமான கதைகளை கொண்ட ஆந்தாலாஜி தொடராக வெளியாகி உள்ளது.

Made For Each Other: இந்த 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் சீரிஸாக 'Made For Each Other' இடம்பெற்றுள்ளது. இதில் நீனா குப்தா, மிருணாள் தாகூர், அங்கத் பேடி ஆகியோர் நடித்துள்ளனர். அரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த கதையில் திருமணத்திற்கு முன்ப ஒரு ஜோடிகளுக்கு இடையே ஏற்பட வேண்டிய காதல்,காமம் குறித்து இந்த தொடர் வெளிப்படையாக பேசி உள்ளது.

அந்த விஷயத்தில் எப்படி: 'Made For Each Other' என்ற தொடரில் மிருணாள் தாகூரை பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், இருவரும் Made For Each Other ஆக இருக்கிறார்கள் இதனால்,விரைவில் திருமணம் செய்துவைத்துவிடலாம் என இருவீட்டாரும் பேசிக்கொண்டிருக்கும் போது, மிருணாளி தாகூரின் பாட்டி, ரெண்டு பேருக்கும் எல்லாம் ஒகே தான். ஆனால், செக்ஸ் விஷயத்தில் மாப்பிள்ளை எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என அனைவர் முன்பும் பச்சையாக கேட்கிறார்.

டெஸ்ட் டிரைவ் போலாமா: ஒரு வண்டி வாங்கும் போதே டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கிறோம், திருமணத்திற்கு முன் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதில் என்ன தப்பு, அப்போதுதான் திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என்று நட்ட நடு ஹாலில் அனைவர் முன்பு பாட்டி பேசுவதை கேட்டு, என்னது திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் சேர வேண்டுமா என்ன பேச்சு இதெல்லாம் என்று குடும்பமே டென்ஷனாகி விடுகிறது.

Reviews of Netflixs Lust Stories 2 show great buzz around  Mrunal Thakurs steamy scenes with Angad Bedi

இதுதான் கதை: ஆனால், இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் மிருணாளி தாகூர், தன் வருங்கால கணவர் அந்த விஷயத்தில் பர்ஃபெக்டா என்பதை தெரிந்து கொள்ள ஓட்டல் ஓட்டலாக ரூம் போட்டு, அனைத்தையும் முடிந்துவிட்டு, பர்ஃபெக்ட் என்று தெரிந்து கொண்டதும் திருமணம் செய்து கொண்ட பின் திருமணம் நடக்கிறது. இதுதான் Made For Each Other ஆந்தாலஜி படத்தின் கதை.

என்ன கன்றாவிகதை: செக்ஸ் விஷயத்தில் கணவன் மனைவி இடையே போதுமான புரிதல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும், திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை அந்த விஷயத்தில் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உடலுறுவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எல்லாம் கேவலமா இருக்கு. வண்டிக்கு டெஸ்ட் டிரைவ் ஓகே, வாழ்க்கைக்கு டெஸ்ட் டிரைவ் எப்படி, என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X