Revolver Rita Review: ரிவால்வர் ரீட்டா விமர்சனம்.. துப்பாக்கியை கையிலெடுத்த கீர்த்தி சுரேஷ்.. படம் எப்படி?
சென்னை: JK. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், சூப்பர் சுப்புராயன், சுனில், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் நவம்பர் 28ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது.
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு சுமார் 6 மாத காலம் எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றார். அந்த படத்திற்கு பிறகு ஹீரோயின் ஓரியன்டட் படங்களை தேர்வு செய்து அதிகம் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ரகு தாத்தா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இந்த ஆண்டு இறுதியில் ரிவால்வர் ரீட்டா படத்தை ரிலீஸ் செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே இந்த படத்தை "கோலமாவு கோகிலா" படத்துடன் கம்பேர் செய்து வந்த நிலையில், படம் எப்படி இருக்கு? என்றும் கீர்த்தி சுரேஷுக்கு வெற்றி கிடைக்குமா? என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம் வாங்க..
ரிவால்வர் ரீட்டா கதை: பாண்டிச்சேரியில் வசித்து வரும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) வீட்டில் அந்த ஏரியா ரவுடியான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) வந்து எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். டிராகுலா பாண்டியனின் மகன் தனது அப்பாவை தேடி அலைவதும் அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டேன் என எதிரி கேங்ஸ்டர்களை எல்லாம் தேடிப் பிடித்து கொல்ல, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற ரிவால்வரை எடுத்து ரீட்டா என்ன செய்கிறார் என்பதை டார்க் காமெடி ஜானரில் செம ஜாலியாக கொடுத்திருக்கும் படம் தான் இந்த ரிவால்வர் ரீட்டா.
படம் எப்படி இருக்கு?: வழக்கம் போல கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் சென்ட்ரிக் படம் என்பதால் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்துக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரீட்டாவின் அம்மாவாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் கொஞ்சம் நகரு கண்ணு என் ஆட்டத்தை பாரு என அவர் காமெடியில் கலக்கியிருப்பது தான் 2ம் பாதி படத்தை போரடிக்காமல் நகர்த்தி செல்ல உதவியது.
ரெடின் கிங்ஸ்லியின் வழக்கமான காமெடி சில இடங்களை சிரிப்பு மூட்டினாலும் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. சென்றாயனின் கதாபாத்திரமான "ஆத்தா குமார்" பல இடங்களில் எரிச்சலூட்டுகிறது. சூப்பர் சுப்புராயன், சுனில், அஜய் கோஷ், கல்யாண் மாஸ்டர், ஜான் விஜய் என மற்ற நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் ஆக்ஷன், காமெடி என இந்த முறை ரிவால்வர் ரீட்டா மீட்டரில் கச்சிதமாக நடித்து கலக்கியுள்ளார். பாபநாசம் படத்தில் எப்படி குடும்பத்தை காப்பாற்ற குடும்பமே போராடுமோ அதே போலத்தான் இங்கேயும் கதை நடக்கிறது. பிணத்தை மறைக்க போராடும் பல கதைகளை ஏற்கனவே பல படங்களில் பார்த்த நிலையில், கதை மற்றும் திரைக்கதையில் புதிதாக எதுவுமில்லை.

பிளஸ்: ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு பக்காவாக கைகொடுத்துள்ளது. அதே போல தினேஷ் கிருஷ்ணனின் கேமரா ஒர்க் மற்றும் பாண்டிச்சேரி அழகை படம் பிடித்த விதம் என அனைத்துமே அருமை தான். டார்க் காமெடி சில இடங்களில் நல்லாவே ஒர்க்கவுட் ஆகி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஒரே நாளில் நடைபெறும் கதை என்பதால் பெரிதாக தொய்வு ஏற்படவில்லை.
மைனஸ்: வழக்கமான கதையாகவும் இப்படித்தான் கொண்டு போய் முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே படம் முடிவதும் பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. கோலமாவு கோகிலா போல இந்த படம் நெல்சன் டச்சில் இல்லை என்றாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு மற்றும் ராதிகா சரத்குமாரின் ரகளை ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது. இந்த வாரம் தமிழில் பெரிய படமாக இந்த படம் தான் வெளியாகி இருக்கிறது என்பதால், நிச்சயம் ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்குப் போய் ரிவால்வர் ரீட்டா படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











