போதைப் பொருள் புழக்கம் மற்றும் மதமாற்ற அரசியல் பற்றி பேசும் ருத்ர தாண்டவம் படம் எப்படி இருக்கு?

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, கெளதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Recommended Video

Rudra Thandavam Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil

போதைப் பொருளை சமூகத்தில் புழக்கத்தில் விட்டு இளைஞர்களையும் இளம் பெண்களையும் சீரழிக்கும் கும்பலை பிடிக்கும் ஒரு காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் எப்படி சிக்குகிறார் என்றும் அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்கிற கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

ருத்ர தாண்டவம் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காண்போம்.

சர்ச்சைகளும் மசாலாக்களும்

சர்ச்சைகளும் மசாலாக்களும்

ருத்ர தாண்டவம் முதல் பாதி அருமையாக நகர்கிறது. அரசியல் ரீதியான காட்சிகள் மற்றும் ஏகப்பட்ட சர்ச்சைகளும் மசாலாக்களும் தூவப்பட்டு உள்ள போலீஸ் படமாக இருந்தாலும் இந்த படம் தீவிரமான ஒரு கருத்தை முன்னிலைப்படுத்துகிறது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

சீரழியும் இளைஞர்கள்

சீரழியும் இளைஞர்கள்

போதைப் பொருள் மாஃபியா மூலம் இளைஞர்கள் எப்படி சீரழிகின்றனர் என்பதை படமாக்கிய விதத்திற்காக இயக்குநர் மோகன் ஜிக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்கும் என்றும் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் காப்பகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர் தெரிவித்துள்ளார்.

திரெளபதியை விட

திரெளபதியை விட

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி மூன்றாவது படமாக இயக்கி உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் கதை மற்றும் காட்சி என அனைத்திலும் அவர் முன்னேறியிருப்பது தெரிகிறது. திரெளபதியை விட ருத்ர தாண்டவம் நல்லா இருக்கு என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

தல ரசிகர்கள் ஆதரவு

தல ரசிகர்கள் ஆதரவு

தல அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கும் தல ரசிகர்கள் அமோக ஆதரவை சமூக வலைதளங்களில் அளித்து வருகின்றனர். " மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் மனோபாலா நடித்த கிறிஸ்தவ காட்சியை வைத்தால் கிறிஸ்தவர்களின் மனது புண்படும் என்று அந்த காட்சியை நீக்கியவர்களுக்கு, அதே மனோபாலா அண்ணனை வைத்து அதே சபை காட்சியை வைத்து சமூகநீதிக்கு நேர்கோடிட்ட #RudraThandavam இயக்குநர்க்கு பாராட்டுகள்" என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கெளதம் மேனன் மிரட்டல்

கெளதம் மேனன் மிரட்டல்

பகத் ஃபாசிலின் மலையாள திரைப்படமான டிரான்ஸ் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய கெளதம் மேனன், இந்த படத்திலும் வில்லனாக மிரட்டி உள்ளார் என ரசிகர்கள் கெளதம் மேனனின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். மேலும், தர்ஷா குப்தா, ராதா ரவி என அனைவரும் சிறப்பாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த கருமத்தையா

இந்த கருமத்தையா

சர்ச்சை கருத்துக்கள் உள்ளடக்கிய ருத்ர தாண்டவம் படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த கருமத்தையா 2 கோடி கொடுத்து வாங்கி இருக்கீங்க என சில நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து இந்த படம் ஒரு ஃபிளாப் படம் என்றும் விளாசித் தள்ளியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X