Sorgavaasal Blue Sattai Maran Review: சொர்க்கவாசல் படத்துல இது பத்தல.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், சானியா அய்யப்பன் உள்ளீட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சொர்க்கவாசல். இந்தப் படம் நேற்று அதாவது நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படியான நிலையில் படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தினைத் தெரிவித்துள்ளார்.

சொர்க்கவாசல் படத்தினைப் பொறுத்தவரையில் கடந்த 1999ஆம் ஆண்டு, சென்னை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்ற வன்முறையை மைய்யமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அட்டகாசமான திரைக்கதையால் படத்தின் தரத்தினை உயர்த்தியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

rj balaji  sorgavaasal  blue sattai maran review

அவர் தனது விமர்சனத்தில், “ படத்தின் கதை என்றால், ஆர்.ஜே. பாலாஜியும் அவரது அம்மாவும் வண்டிக்கடை அதாவது டிபன் நடத்தி வருகின்றார்கள். இவர்களுக்கு தங்களது வண்டிக்கடையை ஹோட்டலாக டெவலப் செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக லோன் வாங்க ஒருவர் உதவி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் கொலை செய்யப்படுகின்றார். அந்தக் கொலைப்பழி ஆர்.ஜே. பாலாஜி மீது விழுகின்றது. இதனால் ஆர்.ஜே. பாலாஜி ஜெயில்லுக்கு போகின்றார்.

ஜெயில்: ஜெயில்லில் சிகா (செல்வராகவன்) என்கின்ற ரவுடி இருக்கின்றார். ஆர்.ஜே. பாலாஜி ஜெயில்லுக்கு போகக்கூட சிகா தான் காரணம் என பேசிக்கொள்கின்றார்கள். சிகாவின் கட்டுப்பாட்டில்தான் மொத்த ஜெயிலுமே உள்ளது. அந்த ஜெயில்லுக்கு புதிதாக எஸ்.பி வருகின்றார். அவர் ஜெயில் என்றால் அது போலீஸாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். ரவுடிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

ப்ளஸ்- மைனஸ்: படத்தின் பெரிய ப்ளஸ் என்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கிளைக்கதை உள்ளது. இதுதான் படத்தின் மைனஸ்ஸாகவும் உள்ளது. ஏனென்றால் படத்தின் மைய்யக் கதாபாத்திரத்திற்கு என்ன வேலை, என்ன கதை என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நாம் யாரைப் பின் தொடர்வது எனத் தெரியவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மைய்யக்கதாபாத்திரம் என்ன செய்கின்றது எனத் தெரியாமலே போய்விட்டது.

மொக்கைப்படம்: படத்தின் ஆரம்பத்தில்தான் இப்படி இருக்கின்றது என நினைத்தால் படம் முழுவதுமே இப்படித்தான் போனது. க்ளைமேக்ஸில் பெரிய ட்விஸ்ட் வைத்து இதற்காகத்தான் இவையெல்லாம் நடந்தது எனச் சொல்லப்போகின்றார்கள் எனப் பார்த்தால், க்ளைமேக்ஸில் ஒரு முடிவைச் சொல்லுகின்றார்கள். ஆனால் அதனை க்ளைமேக்ஸாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தப் படத்தினை ஒரு மொக்கைப் படம் எனவும் புறக்கணிக்க முடியவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

பத்தல: பல பலமான கதாபாத்திரங்களைக் கொண்டு சூப்பர் க்ளைமேக்ஸ் என வைக்கவேண்டும் என இல்லை, க்ளைமேக்ஸ் வைத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். படத்தினை பாதியில் ஆரம்பித்து பாதியில் முடித்துவிட்டால் போதும் என படக்குழுவினர் நினைத்துவிட்டார்களோ எனத் தெரியவில்லை. ஆனால் படம் பார்த்த நமக்குப் பத்தல” எனக் கூறியுள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X