Sorgavaasal X Review: பாராட்டு மழையில் சொர்க்கவாசல்.. கொண்டாடும் ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். படத்திற்கு திரைக்கதை வடிவமைப்பில் சித்தார்த் விஸ்வநாத்துடன் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து பணியாற்றியுள்ளனர். படம் இன்று அதாவது நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இந்த வாரம் தமிழ் சினிமாவிற்கு சிறப்பான வாரம் என்றுதான் கூறவேண்டும். பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத வாரங்கள் எல்லாம், தமிழ் சினிமாவுக்கு நல்ல வாரங்கள்தான். காரணம் சின்ன சின்னப் படங்கள் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் மத்தியில் இருக்கும் சினிமா ரசனைக்கு தீனி போடும் பல படங்கள் சின்ன பட்ஜெட் படங்கள்தான். பெரிய ஸ்டார்களும் பெரிய பட்ஜெட் படங்களில் எப்போதும் மசாலா டெம்ப்ளேட் மட்டுமே உள்ளது. அப்படியான நிலையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் சொர்க்க வாசல், பிரமன், சாதுவன், மாயன், சைலண்ட், திரும்பிபார் என ஐந்து படங்கள் நேரடி தமிழ் படங்களாக ரிலீஸ் ஆகியுள்ளது. இவை இல்லாமலும் வேற்று மொழிப் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

ட்விட்டர் விமர்சனம்: இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படமான சொர்க்கவாசல் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், செல்வராகவன் தாதாவாக சிறப்பாக நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு அட்டகாசமாக உள்ளது. குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் ஆர்.ஜே. பாலாஜி அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பது, என்பது பாராட்டுக்குரியதுதான்.
இடைவேளை: படத்தின் முதல் பாதியில், அம்மா செண்டிமெண்ட் காட்சிகளும், ஜெயில் காட்சிகளும் திரையில் இருந்து கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கின்றன. உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்துள்ளனர். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் இடைவேளை காட்சி அட்டகாசமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளுக்கு இடையிலான காட்சிகளுடன் நன்றாகவே ஒன்றிப்போக முடிகின்றது.
இரண்டாம் பாதி: படத்தின் இரண்டாம் பாதி முதல் பாதியைவிட அட்டகாசமாக உள்ளது. குறிப்பாக 90களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மைய்யபடுத்தி எடுக்கப்பட்டிட்ருப்பதால், படத்தின் செட், நடிகர்களின் உடை, பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்துமே நம்மை ஈர்க்கின்றது மேலும் படத்துடன் ஒன்ற வைக்கின்றது. தியேட்டரில் பார்க்க தரமான படம். ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு படத்தின் தரத்தைக் கூட்டுகின்றது” எனக் கூறியுள்ளனர். சொர்க்க வாசல் படத்திற்கு ரசிகர்கள் பெரும்பாலும் பாராட்டுகளையே தெரிவித்து வருவதால், படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கலாம். வார இறுதி நாட்களில் படத்தினைக் காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் படக்குழு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications











