Singapore Saloor Review:ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி கைகொடுத்ததா? சிங்கப்பூர் சலூன் படம் எப்படி இருக்கு?

Rating:
2.5/5

நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி,லால்,

இயக்கம்: கோகுல்

சென்னை: ஆர்ஜே பாலாஜி நடிப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

RJ Balajis Singapore Saloon Review in tamil

2011 ஆம் ஆண்டில் வெளியான ரௌத்திரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இந்த படம் ஓரளவுக்கு இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

தற்போது இவர் ஆர்ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில், ஹீரோவாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், லால், கிஷென் தாஸ், ஆன்னி ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் லீட்ரோலில் நடித்துள்ளனர்.

ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்: சிங்கப்பூர் சலூன் என்று படத்தின் பெயரை கேட்டதுமே சலூனை மையமாக வைத்த படம் தான் என்பது நமக்கு தெளிவாக தெரிந்துவிடுகிறது. ஆர்.ஜே. பாலாஜி தன் ஊரில் முடிதிருத்தும் சாச்சாவை(லால்) பார்த்து இன்ஸ்பையர் ஆகிறார். ஒரு நாள் நானும் சாச்சாவை போன்று முடிதிருத்துபவர் ஆக வேண்டும் என்பதே கதிரின் கனவு. இன்ஜினியரிங் படித்திருக்கும் கதிர், பல தடைகளை தாண்டி சென்னையில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் கடை ஒன்றை திறக்கிறார். இந்த கடையை லோகேஷ் கனகராஜ் திறந்து வைக்கிறார்.

RJ Balajis Singapore Saloon Review in tamil

படத்தின் கதை: இதில் ஜான் விஜய் வில்லன் கேரக்டரில் நடித்து இருக்கிறார். இவரும் சலூன் கடை வைத்து இருப்பதால், தனக்கு போட்டியாக கடையை திறந்த ஆர்ஜே பாலாஜிக்கு பலவிதத்தில் பிரச்சனையை கொடுக்கிறார். சலூன் கடை வைத்தால் ஏழையாத்தான் இருக்கணுமா என்ற கான்செப்டையும், முடிவெட்டுவது ஒன்றும் நகம் வெட்டும் வேலை இல்லை அது ஒரு கலை என்ற கருத்தையும் படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் கோகுல். இறுதியில், கதிர் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதை. அதே போல, பல திரைப்படங்களில் நாம் பார்த்த விஷயத்தை புதிதாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

சத்யராஜின் காமெடி: கதிரின் மாமனாராக நடித்திருக்கிறார் சத்யராஜ் கஞ்சன் கதாபாத்திரத்தில் தனது இயல்பான நைய்யாண்டியை வெளிப்படுத்தி உள்ளார். இடைவேளைக்கு முன்பு சத்யராஜ் வரும் காமெடி காட்சிகள் அருமை. சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிடும். குறிப்பாக சத்யராஜின் பீர் காமெடி படத்திற்கு செம பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், பாலாஜியின் நண்பனாக கிஷன் தாஸ், சகலையாக வரும் ரோபோ ஷங்கர் என அனைவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X