twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Rocketry Twitter Review: நம்பி நாராயணனை நாடே கொண்டாட வைத்த மாதவன்.. ராக்கெட்ரி எப்படி இருக்கு?

    |

    சென்னை: இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் சாதனை மற்றும் சோதனை வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி கலங்கடித்து இருக்கிறார் மாதவன்.

    இப்படியொரு ப்யூர் பயோபிக்கை கொடுத்து நம்பி நாராயணன் பட்ட மன வேதனைகளுக்கு மருந்து போடும் முயற்சியாக மாதவன் செய்திருப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    சமூக வலைதளங்களில் மாதவனின் ராக்கெட்ரி படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன என்ன விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..

    Rocketry Review: நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? ராக்கெட்ரி விமர்சனம்! Rocketry Review: நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? ராக்கெட்ரி விமர்சனம்!

    வாழ்நாள் சாதனை

    வாழ்நாள் சாதனை

    சினிமா விமர்சகர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் அவரது வாழ்நாள் சாதனை என வெகுவாக பாராட்டி தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். நம்பி நாராயணனுக்கு இதை விட சிறந்த ட்ரிப்யூட்டை யாராலும் கொடுத்திருக்க முடியாது. நடிகர் சூர்யா இந்த படத்தை தொகுப்பாளராக இருந்து வழங்கிய விதம் அட்டகாசம் என விமர்சித்துள்ளார்.

    சவுதி அரேபியாவில் பிரம்மாண்ட ரிலீஸ்

    சவுதி அரேபியாவில் பிரம்மாண்ட ரிலீஸ்

    மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சவுதி அரேபியாவிலும் இந்த படம் கிராண்ட் ரிலீஸ் ஆகி உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழில் சூர்யா செய்த அதே கதாபாத்திரத்தை இந்தியில் ஷாருக்கான் செய்திருப்பது சிறப்பு.

    இது ரோலெக்ஸ் சூர்யா இல்லை

    இது ரோலெக்ஸ் சூர்யா இல்லை

    விக்ரம் படத்தில் மாஸ் சூர்யாவாக வந்து அரங்கை அதிர வைத்த சூர்யா, ராக்கெட்ரி படத்தில் தனது கனிவான குரலில் ஒவ்வொரு கேள்வியையும் எழுப்பி படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இடங்களில் தனது கிளாஸ் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என ஸ்ரீதர் பிள்ளை பாராட்டி உள்ளார். ராக்கெட்ரி திரைப்படத்திற்கு இவரும் பாசிட்டிவ் விமர்சனத்தையே முன் வைத்துள்ளார்.

    மாஸ்டர்பீஸ்

    மாஸ்டர்பீஸ்

    ராக்கெட்ரி படத்தை ஒரே வரியில் விமர்சிக்க வேண்டும் என்று சொன்னால், மாஸ்டர்பீஸ் என்று தான் சொல்ல வேண்டும். 4.5 ஸ்டார் ரேட்டிங் இந்த படத்திற்கு கொடுக்கலாம் என இந்த ப்ளூ டிக் பிரபலமும் படத்தை பாராட்டி உள்ளார். பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தை பாலிவுட் முதல் கோலிவுட் வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தேசிய விருது கொடுக்கணும்

    தேசிய விருது கொடுக்கணும்

    நம்பி நாராயணனாக 100 சதவீதத்திற்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் மாதவன் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரும் விமர்சகருமான ரமேஷ் பாலாவும் 4.5 ஸ்டார் கொடுத்து படத்தை பாராட்டித் தள்ளி உள்ளார். பஞ்சாங்க சர்ச்சையில் மாதவனை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் தற்போது மாதவனின் உழைப்புக்காக அவரை பாராட்டும் நிலை உருவாகி உள்ளது.

    English summary
    Fans and Celebrities praises actor Madhavan's Rocketry movie. He done a brilliant and soulful tribute to Great Indian Scientist Nambi Narayanan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X