Romeo Review: ரோமியோ விமர்சனம்.. விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா?.. சம்மர் பிளாக்பஸ்டரா?

Rating:
3.0/5

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி
இசை: பரத் தனசேகர்
நேரம்: 2h 26m
இயக்கம்: விநாயக் வைத்தியநாதன்

சென்னை: விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ரோமியோ திரைப்படம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த ரோமியோ திரைப்படம் இந்த சம்மர் விடுமுறையை டார்கெட் செய்து வெளியாகி இருக்கிறது.

ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டியர் மற்றும் விஜய் ஆண்டனியின் ரோமியோ உள்ளிட்ட படங்கள் தமிழில் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

Romeo Review in Tamil  Vijay Antony and Mirnalini Ravi gives a summer entertainer

விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் சம்மர் பிளாக்பஸ்டராக மாறுமா? அல்லது மற்றொரு விஜய் ஆண்டனி படமாக மாறி விடுமா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ரோமியோ கதை: டிரெய்லரில் பார்க்கும் போதே இந்த படம் அப்படியே ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான ரப்னே பனாதி ஜோடி படம் போலவே இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. படத்தை பார்த்தாலும் அதே கதை தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் செய்து இதை புதிய கதையாக விநாயக் வைத்தியநாதன் மாற்றியுள்ளார். மலேசியாவில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பும் 35 வயது நபரான விஜய் ஆண்டனிக்கு நடிகையாக ஆசைப்படும் மிருணாளினி ரவியை திருமணம் செய்து வைக்கின்றனர். விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொள்ளும் மிருணாளினி ரவி விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மனைவியை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கும் விஜய் ஆண்டனி மனைவிக்கு பிடித்தவராக மாற முயற்சி செய்வதும் இறுதியில் என்ன ஆனது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

Romeo Review in Tamil  Vijay Antony and Mirnalini Ravi gives a summer entertainer

படம் எப்படி இருக்கு?: சமீப காலமாக வெளியான விஜய் ஆண்டனி படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. படத்தை கடைசி வரை ஜாலியாக ரசித்து, சிரித்து பார்க்க முடிகிறது. இப்படித்தான் கதை போகும் என்று தெரிந்தாலும், திரைக்கதையில் தனது மேஜிக்கை இயக்குநர் நிகழ்த்தி உள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவியின் நடிப்பு சூப்பர். கூடவே லவ் குருவாக வரும் யோகி பாபு, ஷாரா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களின் காமெடி காட்சிகள் ரகளை.

பிளஸ்: விஜய் ஆண்டனியின் நடிப்பும் இசையும் இந்த படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஜாலியான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தால் போதும் என நினைத்து உழைப்பை கொட்டியிருப்பது தெரிகிறது. மிருணாளினி ரவி தனக்கு இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு முடிந்த வரை ஸ்கோர் செய்திருக்கிறார்.

Romeo Review in Tamil  Vijay Antony and Mirnalini Ravi gives a summer entertainer

மைனஸ்: ஒரு 2 மணி நேரத்தில் இந்த படத்தை இன்னமும் கிரிஸ்ப்பாக முடித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவையாகி விட்டது. ஆனால், ப்ரீ கிளைமேக்ஸில் இயக்குநர் அதை சரி செய்தது சிறப்பான விஷயம். சில பாடல்களை நீக்கியிருந்தால் இன்னமும் பெட்டராக மாறியிருப்பான் இந்த ரோமியோ. ஆனால், தியேட்டருக்குச் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் போர் அடிக்காது. விஜய் ஆண்டனியின் இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு அளித்தால் நிச்சயம் சம்மர் ஹிட் படமாக மாறும். ஆனால், அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X