twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    MOVIE REVIEW : ஜி மோகன் இயக்கிய ருத்ரதாண்டவம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்

    ரிச்சர்ட்
    தர்ஷா குப்தா
    தம்பி ராமையா
    ராதாரவி
    கௌதம் மேனன்
    ராமசந்திரன்

    சென்னை: திரௌபதி படத்திற்கு பின் ஜி மோகன் இயக்கிய ருத்ரதாண்டவம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மோகன் படங்கள் என்றாலே சர்ச்சையான பல விஷயங்களும் பல தரப்பினர் பலவிதமான கேள்விகள் எழுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

    Recommended Video

    அபாயத்தை தொட்டிருக்கிறார் Mohan G | Rudra Thandavam Celebrities Review | Filmibeat Tamil

    அப்படி சமீபத்தில் வந்த சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து விட்டு ருத்ரதாண்டவம் என்னும் படத்தை தைரியமாக இயக்கி பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்து உள்ளனர்.

    PCR ACT, (Cripto cristian) க்ரிப்டோ கிறிஸ்டியன்,சாக்லேட் போதை போன்ற முக்கியமான இந்த மூன்று விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக அந்த மூன்றையும் இணைத்து திரைக்கதை வடிவமாக சமூக பிரச்சனைகளை சொல்லி ருத்ரதாண்டவம் என்னும் படத்தை இயக்கியுள்ளார் ஜி மோகன்.

    போதைப் பொருள் புழக்கம் மற்றும் மதமாற்ற அரசியல் பற்றி பேசும் ருத்ர தாண்டவம் படம் எப்படி இருக்கு?போதைப் பொருள் புழக்கம் மற்றும் மதமாற்ற அரசியல் பற்றி பேசும் ருத்ர தாண்டவம் படம் எப்படி இருக்கு?

    போலீஸ் நாயகன்

    போதை பொருள் கடத்தும் பணியில் இருப்பவர்களை பிடிக்கும் போலீசாக வருகிறார் ருத்ர பிரபாகரன். இவர் தான் படத்தின் ஹீரோ ரிச்சர்ட் ரிஷி. பல படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்த ரசிகர்களுக்கு,இவர் நேர்மையான போலீஸ் என்றதுமே ஏதோ நடக்க போகிறது என்று யூகிக்க முடிகிறது.அதனால் சில காட்சிகள் சலிப்பாகவே இருக்கின்றது.போதை பொருள் விற்பனைக்கு பின்னணியில் சாதி, மதம், அரசியல் போன்ற பலவற்றை நேர்மையாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

    வராஹி  மற்றும் வாதாபி

    வராஹி மற்றும் வாதாபி

    படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு மனைவியாக வரும் தர்ஷா குப்தா குடும்ப பெண்ணாக இருக்கிறார்.சாமி கும்மிடும் போது தட்டு கீழே விழுவது, ஏதோ நடக்க போகிறது என்று உணர்ந்து கணவரை எச்சரிக்கும் போதும் நடிப்பு எதார்த்தமாக இருக்கின்றது .கணவனை மாமா மாமா என்று கூப்பிடும் போது மட்டும் பக்கா சீரியல் எபெக்ட். படத்தின் வில்லனாக வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்,கெட்ட வார்த்தைகளை சாதாரணமாக உச்சரிக்கிறார். ஆரம்பத்தில் இவரது காட்சிகள் குறைவாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் மிரட்டுகிறார்.தனக்கே உரித்தான ஸ்டைல் எலிமெண்ட்,பாடி லாங்வேஜ் என்று கண்களை உருட்டி உருட்டி நம்மை மெரட்டுகிறார்.

    மதத்தின் பெயரால்

    மதத்தின் பெயரால்

    வழக்கறிஞராக ராதா ரவி தனது வேலையை கட்சிதமாக செய்து இருக்கிறார்.கிறிஸ்துவ சபை கூட்டத்தில் நடக்கும் அலப்பறைகளை பார்க்கும் போது ,மூக்குத்தி அம்மன் படத்தில் பிரச்சனை வருமோ என்று நினைத்து டெலிட் செய்த காட்சிகளை தைரியமாக இந்த படத்தில் வைத்து இருக்கிறார் இயக்குனர்.மதம் மாறுவதும் மதத்தின் பெயரால் என்னவெல்லாம் மாறுகிறது என்பதையும் பற்றி சட்ட ரீதியாகவும் காட்சிகளாக அணுகி உள்ளார்.

    தாயின் கண்ணீர்

    தாயின் கண்ணீர்

    ஒரு பக்கம் ஜாதி மதம் மதமாற்றம் போன்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு பக்கம் போதைப்பொருள் அதற்கு அடிமையான பலதரப்பட்ட இளம் வயது ஆண்களும் பெண்களும் என்னவெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை எதார்த்தமாக சொல்லி உள்ளார் இயக்குனர்.போதைக்கு அடிமையான இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்திருக்கும் தீபா நம் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கிறார். படம் முடிந்து வெழியே வந்த பின்னும் கூட தாயாக நடித்த தீபாவின் கண்ணீர் மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் நீண்ட நேரம் மனதை பாதிக்கும். படத்தின் முன்பாதி தொய்விலிருந்து காப்பாற்றியது பின்பாதியில் வரும் கோர்ட் சீன்ஸ் மற்றும் தீபாவின் நடிப்புத் தான்.

    கைதட்டல் வாங்கி கொடுத்த

    கைதட்டல் வாங்கி கொடுத்த

    "நாம எப்படி பிறந்தோமோ அப்படியேதான் மண்ணுக்குள்ள போகணும் - அப்படின்னு நினைக்கிறவ நான்" என்கின்ற அந்த வசனம் மிகவும் ஆழமாக சிந்திக்கத் தூண்டும் ஒரு வசனமாகும். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் மதமாற்றம் ஜாதி வெறி மனமாற்றம் போன்ற பல விஷயங்களில் ஈடுபட்டு மனிதன் குழம்பி கொள்வதைவிட எப்படி பிறந்தோமோ அப்படியே மண்ணுக்குள் போவதுதான் நியாயம் என்று படத்தில் வரும் டயலாக் கைதட்டல் வாங்கி கொடுத்தது.

     சொல்லிய விதம்

    சொல்லிய விதம்

    "அம்மாடி என்ன செஞ்ச என்னை " சோகம் கலந்த ஒரு பாடலாக இருந்தாலும் பிராவில்லை ரகம் தான். பின்னணி இசை சில இடங்களில் நேர்த்தியாக உள்ளது. சண்டைக்காட்சிகள் யதார்த்தத்தை மீறி கொஞ்சம் அமெச்சூர்டாக எடுக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம். டிரைவ் அகேய்ன்ஸ்ட் டிரக்ஸ் (DAD ) திட்டம் அருமை. அதை திரைக்கதை மூலம் சொல்லிய விதம் எதார்த்தம் கலந்த உண்மை போன்றவை பாராட்டத்தக்கது.

    வதம் செய்யும்

    வதம் செய்யும்

    தம்பி ராமையா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நன்கு புரிந்து மிகவும் இயல்பாக நடித்து கொடுத்துள்ளார். அரக்கனைக் கொல்லும் அசுரன் பற்றிய பல புராண கதைகளை நாம் படித்திருப்போம். அதுபோலவே வாதாபி ( கௌதம் மேனன் ) என்னும் அரக்கனை வதம் செய்யும் பிரபாகரனாய், ருத்ரபிரபாகரன்(ரிச்சர்ட் ) என்னும் கதாபாத்திரத்தின் மூலம் வதம் செய்கிறார் இயக்குனர். இப்படி பட்ட கதைகள் நாம் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பார்த்து விட்டோம் என்று சொன்னாலும் கூட இந்த படத்தில் சில காட்சிகள் ,சில வசனங்கள் சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை தைரியமாக தோல் உரித்து காட்டுகிறது . தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய, குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டிய படமாக கருத படுகிறது .

    English summary
    G.mohan is one among the director of Tamil cinema who creates controversies in his script and also with versatile dialogues. recently release of his movie "rudhra thandavam" has lot of different opinions among fans and movie buff people. Richard plays the lead role as police officer and darsha guptha as heroine.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X