Saamaniyan Review: சாமானியன் முதல் விமர்சனம்.. ராமராஜன் படத்தை பாராட்டிய ரோபோ சங்கர் குடும்பம்!

சென்னை: நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் திரைப்படம் மே 23ம் தேதி நாளை உலகமெங்கும் வெளியாகிறது. அதன் ப்ரீமியர் ஷோ இன்று சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரோபோ சங்கர் குடும்பம் படத்தை பாராட்டியுள்ளது.

மீனாட்சி குங்குமம் படத்தில் சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்த ராமராஜன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராமராஜன் அதன் பின்னர் ஏகப்பட்ட வெள்ளி விழா படங்களை கொடுத்து ரசிகர்கள் மனங்களில் இன்றும் கரகாட்டக்காரனாக நிலைத்து நிற்கிறார்.

Saamaniyan First Review in Tamil  Robo Shankar family gives thumbs up to Ramarajan movie

உதட்டில் லிப்ஸ்டிக், கன்னத்தில் ரோஸ் பவுடர் கலர் கலர் சட்டை போட்டுக் கொண்டு எம்ஜிஆர் கணக்காக தமிழ் சினிமாவில் கிராமத்துப் படங்களிலேயே கலக்கலாக நடித்து பல பெண் ரசிகைகளை கவர்ந்த நடிகர் ராமராஜன் வங்கியில் நடக்கும் மோசடிகள் மற்றும் கடன் வாங்கி வீடு கட்டும் மக்கள் படும் அவதியை பற்றிய படமாக சாமானியன் படத்தில் துப்பாக்கி ஏந்தி ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்தியுள்ளார்.

ராமராஜனின் சாமானியன்: நடித்தால் கடைசி வரைக்கும் ஹீரோதான் என 62 வயதில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார் ராமராஜன். 2001ம் ஆண்டு அவர் நடித்த சீறி வரும் காளை படமே சிறப்பாக அமையவில்லை. அதன் பின்னர் 2012ம் ஆண்டு மேதை படத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு 10 வருட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் எனும் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி உள்ள சாமானியன் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

ரோபோ சங்கர் விமர்சனம்: சாமானியன் படத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை குடும்பத்துடன் ப்ரிவ்யூ ஷோவில் படம் பார்த்த ரோபோ சங்கர் படம் அருமையாக உள்ளதாகவும் ராமராஜன் சார் நடிப்பு மற்றும் இளையராஜா அய்யாவின் இசை பழைய காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

பேங்க்காரன் வீட்டுக்கு வரக் கூடாது: ஒவ்வொரு சாமானியனும் மாதம் மாதம் சம்பளம் வருவதை நினைத்து சந்தோஷப்பட முடியாமல் வாங்கிய கடன்களுக்கான இஎம்ஐ தொகை செலுத்தத்தான் கஷ்டப்பட்டு வருகின்றனர். பேங்க்காரன் வீட்டுக்கு வந்துடக் கூடாது என்பதை தான் நான் உள்பட அனைவரும் நினைப்போம் என ரோபோ சங்கர் பேசியுள்ளார். கடனில் வீடு வாங்கி விட்டு சாமானிய மக்கள் படும் அவஸ்த்தைகள் மற்றும் வங்கிகள் சாமானியர்களை நடத்தும் விதம் என அனைத்தையும் இந்த படம் நெத்தியடியாக பேசியுள்ளதாக ரோபோ சங்கர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ரோபோ சங்கர் மனைவி விமர்சனம்: முதல் பாதியை பார்த்து விட்டு சிரிக்கும் ரசிகர்கள், 2ம் பாதியை பார்த்து விட்டு அழாமல் தியேட்டரை விட்டு வெளியே வரவே முடியாது. அந்தளவுக்கு அப்பா - மகள் சென்டிமென்ட் உள்ளது என ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா தனது கருத்தை கூறியுள்ளார். இந்திரஜா சங்கர் மற்றும் அவரது கணவர் கார்த்திக் உள்ளிட்டோரும் படத்தை பார்த்து விட்டு இந்த ஜெனரேஷன் ரசிகர்களையும் இந்த படம் கவரும் என விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X