Saamaniyan Review: ’சாமானியன்’ விமர்சனம்.. கம்பேக் கொடுத்தாரா ‘கரகாட்டக்காரன்’ ராமராஜன்?

Rating:
2.5/5
: 2.5

நடிகர்கள்: ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர்

இசை: இளையராஜா

இயக்கம்: ராஹேஷ்

சென்னை: 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்' உள்ளிட்ட பல வெள்ளி விழா படங்களை கொடுத்த ராமராஜன் பல வருடங்கள் கழித்து மீண்டும் நடித்துள்ள 'சாமானியன்' திரைப்படம் இன்று வெளியானது. ராஹேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'சாமானியன்' படத்தின் புரமோஷனுக்காக 63 வயதாகும் ராமராஜன் பல யூடியூப் சேனல்களுக்கும் பேட்டிக் கொடுத்து வந்தார். தன் வாழ்க்கையில் நடந்த ஏகப்பட்ட சுவாரஸ்ய சம்பவங்கள் மற்றும் தனது படங்கள் ஓடியது குறித்தும் காதல் மனைவி நளினி பிரிந்து சென்றது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசினார்.

Saamaniyan Review in Tamil  Has Ramarajan given a perfect comeback

சாமானியன் படத்தின் ப்ரிவ்யூ ஷோ நேற்று வெளியான நிலையில், அதனை பார்த்து விட்டு ரோபோ சங்கர், லியோனி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், சாமானியன் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

சாமானியன் கதை: ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரியான சங்கர நாராயணன் (ராமராஜன்) தனது நண்பர் மூக்கனுடன் (எம்.எஸ். பாஸ்கர்) சென்னைக்கு வருகிறார். இஸ்லாமிய நண்பரான பாசில் பாய் (ராதாரவி) வீட்டில் இருவரும் தங்குகின்றனர். மூவரும் சேர்ந்துக் கொண்டு வங்கி ஒன்றை சூறையாட திட்டம் போடுகின்றனர். வயதான மூவரும் இணைந்து வங்கிக்கு எதிரான போராட்டத்தை நடத்த என்ன காரணம் என்பது தான் இந்த படத்தின் கதை.

ராமராஜன் நடிப்பு: 63 வயதான நிலையில், ராமராஜனின் வயோதிகம் படம் முழுக்கவே தெரிகிறது. படத்திலும் அவருக்கு வயதான கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நடிப்பில் ராமராஜன் வழக்கம் போல தனது கிரவுண்டில் புகுந்து விளையாடி இருக்கிறார். அவருக்கு பக்க துணையாக ராதா ரவி மற்றும் எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரங்களும் அவர்களது நடிப்பும் படத்தை பார்க்க வைக்கிறது.

கடன் வாங்காதீங்க?: அஜித்தின் துணிவு படத்தில் வங்கியில் நடக்கும் மோசடிகள் குறித்து எச். வினோத் படமாக்கியது போல ராமராஜனின் 'சாமானியன்' படத்திலும் வீட்டு லோன் வாங்கி சிக்கலில் தவிக்கும் சாமானியர்களின் கதையை படமாக்கி உள்ளனர். வங்கிகள் மற்றும் நிலங்களை விற்பனை செய்பவர்கள் அதிக வட்டியை வைத்து மக்களை ஏமாற்றுவதாக இந்த படத்தில் இயக்குநர் காட்டியிருக்கிறார். கடந்த வாரம் வெளியான சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு' படத்திலும் கடன் பிரச்சனை மையக்கருவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்: இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் எல்லாமே படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. சில சர்ப்ரைஸ்களும் இந்த படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. ராமராஜன் ரசிகர்களுக்கான செம ட்ரீட் படமாக இந்த சாமானியன் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே ஊர்களுக்கு செல்லும் போது பஸ் ஓட்டுநர்கள் நிறுத்தும் உணவகத்தில் அவர்களுக்கான சிறப்பு சாப்பாடு மற்றூம் பயணிகளுக்கு மோசமான சாப்பாடு வழங்குவது போன்ற பல விஷயங்களை படத்தில் அடுக்கிய விதம் சிறப்பாகவே உள்ளது. அருள் செல்வன் ஒளிப்பதிவில் கிராமத்தை காட்டும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அருமையாக உள்ளது.

மைனஸ்: முதல் பாதி ரொம்பவே ரசிகர்களை சோதிக்கும் விதமாக உள்ளது படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக உள்ளது. இரண்டாம் பாதியில் தான் முக்கிய கதை வருகிறது. அந்த போர்ஷன் தான் ரசிகர்களுக்கு எமோஷனல் கனெக்ட் கொடுக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாமே சுமார் ரகம் தான். மொத்தத்தில் இயக்குநர் ராஹேஷ் ராமராஜனை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், பல லாஜிக் மிஸ்டேக்குகள் மற்றும் சிக்கல்கள் இருப்பதால் படம் அனைவரையும் கவருமா? என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X