“மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு“ … சாணிக்காகிதம் ட்விட்டர் ரிவ்யூ !

சென்னை : செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'சாணிக்காகிதம்'அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. டிரைலரில் நாங்கள் எத்தனை கொலை செய்து உள்ளோம் என்பதை செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் கூறும் காட்சிகள் இருந்தது தான், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாகும்.

ஓடிடியில் இன்று வெளியான படத்தை பார்த்த ரசிகர்கள், படம் குறித்து ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பழிக்கு பழி வாங்கும்

பழிக்கு பழி வாங்கும்

"சாணிக்காகிதம்" தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்தவர்களை பழிக்கு பழி வாங்கும் குறிக்கோளாடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை. தமிழ் சினிமாவுக்கு இதுபோன்ற கதை புதிது இல்லை என்றாலும், இந்த கதைக்குள் ரத்தம், சதை என ரணகளத்தை நுழைந்து பார்ப்பவர்களை மெர்ச்சலாக்கி உள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

அழுத்தமான படைப்பு

அழுத்தமான படைப்பு

மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு என்று சொல்லும் அளவுக்கு ரணகளமாக உள்ளது. பொன்னி என்ற கதாபாத்திரத்தில் வரும் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி, தேசிய விருது பெற்ற நாயகி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். திரைக்கு பின்னால் இயக்குநராக இருந்த செல்வராகவன், திரையில் காட்டுத்தனமாக நடித்துள்ளார். ரத்தம், வெட்டு,குத்து என ரணகளமாக உள்ளது படம்.

செல்வராகவன் மிரட்டி உள்ளார்

செல்வராகவன் மிரட்டி உள்ளார்

அமேசானில் வெளியான படத்தை பார்த்தை, ஒரு நெட்டிசன்ஸ், செல்வராகவன் நடிப்பில், நான் பார்த்த முதல் படமாக சாணிக்காகிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பீஸ்ட் படத்தில் செல்வராகவின் நடிப்பு சொல்லும்படி இல்லை. ஆனால், சங்கையா மூலம் அவருடைய நடிப்புத் திறமை என்னை ஆச்சரியப்படுத்தி விட்டதாக பதிவிட்டுள்ளார்.

அதிக வன்முறை காட்சிகள்

அதிக வன்முறை காட்சிகள்

சாணிக்காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோரின் அசாதாரண நடிப்பு மற்றும் சில சிறப்பான காட்சிகள் உள்ளன, ஆனால், சில இடங்களில் லாஜிக் இல்லாதது போல் இருந்தது. மேலும் படத்தில், அதிக அளவு வன்முறை மற்றும் கொடூரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் மூவி

ஆக்‌ஷன் த்ரில்லர் மூவி

சாணிக்காகிதம் நன்றாக உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உள்ளது. கீர்த்தி அதிகாரி மற்றும் செல்வராகவனின் நடிப்பு பாராட்டுகளை பெருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கம் - அருமை என படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

Recommended Video

Saani Kaayidham Review | சாணி காயிதம் | Yessa ? Bussa ? | Keerthi Suresh | Arun | Filmibeat Tamil
கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

இப்போ தான் சாணிக்காகிதம் திரைப்படம் பார்தேன். இப்படம் ஒரு சிறப்பான படமாக உள்ளது என்று ஒரு நெட்டிசன்ஸ் பதிவிட்டுள்ளார். மேலும் பல இணையவாசிகளும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். படம் ஓடிடி ரிலீஸ் என்பதால், வன்முறை, கெட்டக்கெட்ட வார்த்தைகள் அதிகம் வருகிறது. அதை தவிர்த்து இருக்கலாம் என கலவையான விமர்சனத்தை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X