twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Sabapathy Movie Review: சந்தானம் திக்கி திக்கி பேசும் சபாபதி திரைப்படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5

    சென்னை : பிரபலமான காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் திகழ்பவர் சந்தானம். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் சபாபதி.

    இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார்.சாம் சி எஸ் இசையமைக்க சந்தானத்துடன் எம் எஸ் பாஸ்கர், விஜய் டிவி பிரபலம் "புகழ்", ப்ரீத்தி ஷர்மா என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

    மேலும், சந்தானத்தின் சபாபதி படம் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட விமர்சனங்களை பெற்று உள்ளது என்று பார்த்தால் கொஞ்சம் கலவையான கருத்துக்கள் தான் நிலவி வருகிறது.

    இதய பாதிப்பால் உயிருக்கு போராடும் 5 மாத குழந்தை.. உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்யுங்கள்

    விதி வலியது

    விதி வலியது

    பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல் திக்கி திக்கி பேசும் சந்தானம் சிறப்பாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். சிறு வயதில் இருந்தே சப்போர்ட் செய்பவர் சிறு வயது கேர்ள் பிரென்ட் ( கதாநாயகி ) ப்ரீத்தி வர்மா.விதியின் விளையாட்டை சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? விதி கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்க்கையும் எப்படி சந்தானம் எதிர்கொண்டார்? காதலை வென்றாரா ?அப்பாவின் கனவை நிறைவேற்றினாரா என்பது தான் இந்த படத்தின் ஒட்டு மொத்த கதை . விதி என்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து அதில் நம்பிக்கை ஏற்படுத்தி திரைக்கதை அமைத்து உள்ளார் இயக்குனர்.

    நிறைய அவமானங்கள்

    நிறைய அவமானங்கள்

    அரசு வேலையில் பணிபுரிபவர்.சந்தானத்தின் அப்பா எம் எஸ் பாஸ்கர் .ஆசிரியரான அப்பா ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை வருவதால் மகனை வேலைக்கு அனுப்பி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று அரும்பாடு படுகிறார் . பல வேலைகளுக்கு சந்தானத்தை தயார் செய்து இன்டெர்வியூவிற்கு அனுப்புகிறார். ஆனால், திக்கு வாய் என்ற காரணத்தை காட்டி சந்தானத்திற்கு நிறைய அவமானங்கள் தான் ஏற்படுகிறது . இதனால் விரக்தியும், கோபமும் ஏற்பட சந்தானம் ஒருநாள் வீட்டிற்கு குடித்து விட்டு வருகிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடிக்கிறது. இருந்தாலும் இது ஒரு காமெடியான கலாட்டா கலந்த குட்டி கலவரம் .

    விதியின் கையில் சிக்கி

    விதியின் கையில் சிக்கி

    போதையில் இருக்கும் சந்தானம் பல அலப்பறைகள் செய்கிறார் . சுயநினைவு இல்லாமல் போதையில் திரிகிறார் .இதன் மூலம் இவருடைய விதி இங்கு தான் தன் விளையாட்டை விளையாடுகிறது. சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். கடைசியில் சந்தானம் தன் தந்தையின் கனவை நிறைவேற்றுகிறாரா? சந்தானத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா? என்பதை சொல்ல ஆரம்பித்து இன்டர்வல் விடுகிறார்கள்.

    அப்பாவுக்கும் மகனுக்கும்

    அப்பாவுக்கும் மகனுக்கும்

    விஜய் டிவி பிரபலம் "புகழ்" சந்தானத்தின் நண்பனாக பல கவுண்டர் டயலாக் பேசி ஆங்காங்கே முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் காமெடி சரவெடி என்பது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னொரு பக்கம் டைகர் தங்கதுரையின் வழக்கமான பாணியில் ஜோக்குகளை அள்ளி விடுகிறார். அதில் சில சிரிக்க வைக்கிறது . படத்தில் எம்எஸ் பாஸ்கர் கதாபாத்திரம் மிகவும் வலுவானது, அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டான சண்டை ,வாக்குவாதம் ,பிடிவாதம், பாசப்பிணைப்பு என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாக ரணகள படுத்துகிறார்கள். கதாநாயகி ப்ரீத்தி வர்மா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சில காட்சிகளில் மட்டும் தோன்றினாலும் அழகாகவும் நளினமாகவும் பேசியும் பாடியும் மகிழ்விக்கிறார்.

    கொஞ்சம் அதிகம்

    கொஞ்சம் அதிகம்

    படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார். இயக்குனர்.உண்மையான சில விஷங்களை எதார்த்தமாக சொல்லி பதார்த்தமாக கை தட்டு வாங்குகிறார்கள்.
    ஆனால், சினிமா லிபெர்ட்டி என்று கொஞ்சம் அதிகம் எடுத்து கொண்டார்கள். படத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சில இடங்களில் சொல்ல தோன்றுகிறது. கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் தான் சபாபதி. ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் படம் .

    Recommended Video

    இந்த படத்துக்கு ஏன் சபாபதி TITLE வச்சோம் ? | Director Srinivasa Rao Exclusive | Filmibeat Tamil
    நல்லவன் வாழ்வான்

    நல்லவன் வாழ்வான்

    மனிதனுடைய பேராசை பணத்தின் மீது கொண்ட வெறி, நேர்மையாக இருக்கும் பொழுது ஏற்படும் சோதனைகள், அந்த சோதனைகள் கடைசியில் சாதனையாக மாறும் தருணங்கள் என்று பட்டியலிட்டு காட்டி உள்ளார் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ்.பல நல்ல விஷயங்களை பதிவு செய்து "நல்லவன் வாழ்வான்" என்ற இந்த மந்திரத்தை திரைக்கதை மூலம் புதிய கோணத்தில் கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட காட்சியில் அனைத்தையும் ஒன்றாக இணைத்து இரண்டாம் பாதியை முடித்துள்ளார் இயக்குனர். அடல்ட் கண்டெண்ட் எதுவுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஒரு நல்ல படமாக தான் சபாபதி இருக்கிறது சில பல குறைகள் இருந்தாலும் அவற்றை தவிர்த்து என்ஜாய் செய்யலாம்.

    English summary
    Santhanam Acted movie "sabapathi "got released in theaters recently and it is receiving multiple comments from various audience. Ad film maker Srinivasarao has directed this movie and SAM cs has done the music score. its a humor and emotional script with fun filled entertaining factors for Santhanam fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X