twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Gargi Twitter Review : ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஓர் நல்ல படம்..கார்கி நிச்சயம் விருதை பெறும் !

    |

    சென்னை : கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாமா?

    பிளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் புட் ப்ரெடக்ஷன் தயாரித்துள்ள கார்கி படத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கார்கி படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா ஜோதிகா வெளியிட்டுள்ளனர்.

    இப்படத்தில் காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சரவணன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    Gargi Movie Review: ஜெய்பீம், ஜன கண மன வரிசையில் சேருமா சாய் பல்லவியின் கார்கி? விமர்சனம் இதோ! Gargi Movie Review: ஜெய்பீம், ஜன கண மன வரிசையில் சேருமா சாய் பல்லவியின் கார்கி? விமர்சனம் இதோ!

    கார்கி

    கார்கி

    கார்கி படத்தில் நடுத்தர குடும்பத்துப் பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு அழகாக நடித்து இருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இந்த விசாரணையில் 5 பேர் கைது செய்யப்படுகிறார்கள். இதில் சாய் பல்லவியின் தந்தையும் ஒருவர். தனது தந்தை நிரபராதி என உறுதியாக நம்பும் சாய் பல்லவி தந்தைக்காக போராடுகிறார். தந்தையை காப்பாற்றினாரா? உண்மைக்குற்றவாளி யார் என்பதே படத்தின் கதை.

    பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறும்

    பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறும்

    கார்கி படத்தை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் படத்தை வெகுவாக புகழ்ந்து உள்ளனர். ஒரு இணையவாசி, கார்கி வணிகரீதியான வெற்றிக்காக நான் வேரூன்றி இருக்கிறேன். நீங்கள் டிக்கெட்டிற்காக செலவு செய்த உங்களின் 200 ரூபாயோ அல்லது 120 ரூபாய்க்கு நிச்சயம் பயன் உண்டு. இது போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.

    அசாத்திய நடிப்பு

    அசாத்திய நடிப்பு

    கார்கி ஒரு சக்திவாய்ந்த திரைப்படம், மிகவும் உணர்ச்சிகரமான விஷயத்தை இயக்குநர் கையாண்டு இருக்கிறார். சமூகத்தில் ஒரு பெண்ணாக இருப்பது மற்றும் சரியானதைச் செய்வது மிகப்பெரிய விஷயம். சாய்_பல்லவிக்கு புத்திசாலித்தனம்.. கடினமான பாத்திரம்.. ஆனதை அதை அவர் நேர்த்தியுடன் செய்திருக்கிறார். இந்த படத்திற்கு 5க்கு 5 மதிப்பெண் அளித்துள்ளார்.

    ஜெய்பீமுக்கு பிறகு ஓர் நல்லபடம்

    ஜெய்பீமுக்கு பிறகு ஓர் நல்லபடம்

    ஜெய்பீமுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்து போல உள்ளது. நன்றான கதை நீதிமன்ற அறை காட்சிகள் என முதல் பாதி சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவியின் நடிப்பு ஒரு அற்புதமான திரைப்படம் என்பதை உணரவைத்துள்ளது.

    கார்கி அருமை

    கார்கி அருமை

    கார்கி அருமையானத் திரைப்படம், இந்த ஆண்டின் ஒரு சிறப்பான திரைப்படம், ஒர் அற்புதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் கதை. இந்த படத்தை பார்க்க மிகவும் கனமான இதயம் தேவை. சாய் பல்லவி மற்றும் படக்குழு விருதுகளுக்கு தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    கார்கி 5க்கு 5

    கார்கி 5க்கு 5

    சமீப காலங்களில் மறக்க முடியாத திரையுலக வழக்கறிஞர்கள், பரத் சுப்ரமணியம், ஜெய்பீம் சந்துரு, கார்கி இந்திரன்ஸ். முதல் இரண்டும் பவர்ஃபுல்லான மாஸ் ஹீரோ தருணங்களைக் கொண்டிருந்தாலும், சினிமா வழக்கறிஞர்கள் வருவதைப் போல இந்திரன்ஸ் யதார்த்தமாகவும் இயல்பாகவும் இருக்கிறார். நடிகருக்கு அடுத்த நிலையை காளிவெட் அடைந்துவிட்டார் என கார்கி படத்தை பார்த்த ஓர் இணையவாசி பாராட்டி படத்திற்கு 5க்கு 5 மதிப்பெண் அளித்துள்ளார்.

    English summary
    Sai pallavi gargi movie Twitter review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X