Salaar Negatives: அய்யோ ஆளவிடுறா சாமி.. மொக்கை கதை.. ஓவர் பில்டப்.. சலார் நெகட்டிவ் விமர்சனம்!

சென்னை: நள்ளிரவு 1 மணி காட்சிக்கு படம் பார்த்த பிரபாஸ் ரசிகர்கள் எல்லாம் சலார் படத்துக்கு ஃபயர் விட்டு வந்த நிலையில், தற்போது ஜெனரல் ஆடியன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக சலார் படத்துக்கு கலவையான விமர்சனங்களையும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களையும் போட்டு பொளந்து வருகின்றனர்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Salaar movie getting mixed reviews after FDFS over

இன்று வெளியான சலார் படத்துக்கு ஆரம்பத்தில் பிரபாஸ் ரசிகர்கள் பிளாக்பஸ்டர் விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில், தற்போது நெகட்டிவ் விமர்சனங்களும் தலை தூக்கி வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் வாங்க..

ஸ்டைல் இருக்கு சரக்கு இல்லை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள சலார் படம் கேஜிஎஃப் 2 அளவுக்கு வொர்த்தான கதையாக உருவாகவில்லை என்றும் வெறும் பில்டப், ஆக்‌ஷன் தான் என்றும் பிரபாஸை செம ஸ்டைலாக காட்டினாலே கல்லா கட்டி விடலாம் என பிரசாந்த் நீல் நினைத்து விட்டாரா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


டீசன்ட் ஃபர்ஸ்ட் ஹஃப்: சலார் படத்தின் முதல் பாதி ரொம்பவே டீசன்ட்டா உள்ளது. நிறைய இடங்கள் புரியாத புதிராகவே உள்ளன. 2ம் பாதிக்காக வெயிட்டிங் என இந்த நெட்டிசன் படத்தை விமர்சித்துள்ளார்.


ஒரே இருட்டா இருக்கு: சலார் ரொம்பவே வொர்ஸ்ட்டான திரைப்படம். ஒரே டார்க்கா இருக்கு.. ஸ்டோரிலைன் நல்லாவே இல்லை. அப்படியே கேஜிஎஃப் படம் பார்த்த மாதிரி சண்டைக் காட்சிகள், உக்ரம் படத்தையே ரீமேக் செய்து வைத்து விட்டு ரீ டெல் என பிரசாந்த் நீல் உருட்டி உள்ளார் என படத்தை வைத்து செய்துள்ளனர்.


ஷாருக்கான் ரசிகர்கள் வேலை: சலார் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்து வருவது ஷாருக்கான் ரசிகர்கள் தான். பிரபாஸ் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என பிரபாஸ் ரசிகர்கள் தொடர்ந்து படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர்.

2ம் பாகத்துக்கு பெரிய கும்பிடு: சலார் படத்தின் முதல் பாகமே சகிக்கல என்றும் இதுல சவுர்யாங்க பர்வம் என 2வது பார்ட் வேற வரப் போகுதா.. போதும்டா சாமி என இந்த நெட்டிசன் பெரிய கும்பிடு போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X